முத்து -
சிப்பியில்-
நீர் சொட்டு!
சொத்து-
தம்பதிகளுக்கு-
கருவில்-
உயிர் சொட்டு!
முக்குளிப்பவன்-
துணிந்தவனே!
முக்கி முனங்கி-
பெத்தவளே!
முக்குளித்தவனின்-
வலியும்-
வேதனையும்-
உன் கண்ணீர் சொட்டளவே!
---------------------------------
வடியும்-
குடுவையின் ஓட்டையில்-
இருந்து-
நீர் சொட்டு!
பேனாவில்-
வடிந்து எழுத்தாவது-
மை சொட்டு!
ஆயுள் நமக்கு-
கரையுது-
நிமிட சொட்டாக!
------------------------
ஊத்தபடுவது-
போதுமான ஆரோக்கியத்துக்கு-
போலியோ சொட்டு!
"போகும்போதே"-
அடக்கம் செய்ய வைத்தது-
போலியான சொட்டு!
------------------------------
துப்பாக்கியின்-
சொட்டுகள்-
தோட்டாக்கள்!
ரத்தத்தை வடித்து-
விட்டு - மடிந்தது
உயிர்கள்!
விசாரித்து தண்டனை -
கொடுக்கும் நாடுகள்-
காட்டு மிராண்டிகள்!
கொன்று விட்டு-
விசாரிப்பவர்கள்-
வல்லரசு மனிதாபிமானிகள்!
----------------------------
விதைகளுக்கும் இறக்கம்-
இல்ல!
உப்பு நீருக்கு-
முளைப்பதில்ல!
கண்ணீர் சொட்டுகளால்-
விவசாயிகள்-
விவசாயம் செய்து-
இருப்பாங்கள!
--------------------
ஓ!
அதிகாரத்தில்-
இருப்பவர்களே!
கண்ணீர் சிந்தவைக்காதீர்கள்-
அப்பாவிகளை!
உங்களை ஒரு நாள்-
மூழ்கடித்து விடும்-
அவர்களின் கண்ணீர்-
சொட்டுகளே!!!
--------------------------
//ஓ!
ReplyDeleteஅதிகாரத்தில்-
இருப்பவர்களே!
கண்ணீர் சிந்தவைக்காதீர்கள்-
அப்பாவிகளை!
உங்களை ஒரு நாள்-
மூழ்கடித்து விடும்-
அவர்களின் கண்ணீர்-
சொட்டுகளே!!!//
சொட்டுக் கவிதை எழுதிய தங்களுக்கு ஓர்
ஷொட்டுக் கொடுக்கத் தோன்றுகிறது! ;)))))
ayya !
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
துளிகளே சமுத்திரங்கள் என
ReplyDeleteமிக அழகாக விளக்கிப்போகும்
தங்கள் படைப்பு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
ayya!
Deleteungal varavukkum-
urchaaka moottalukkum-
mikka nantri!
நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.
ReplyDeletevimalan!
Deleteungal varavukkum-
karuthukkum-
mikka nantri!
என்ன நண்பா ரூம் போட்டு யோசிக்கிரிரோ....//
ReplyDeleteஅருமையான கவிதை
sittu kuruvi!
Deleteroompu podalaam-
vasathi illa -
manasula pattatha ezhuthuren!
ungal aatharavukku-
mikka nantri!
சமூகதுடிப்புள்ள உங்கள் கவிதை.... தங்களது சமூக கண்ணோட்டத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeletemaniyan!
Deletemikka makizhchi-
naan samooka akkarai kondavanaaka
nampum ungalukku!
சுப்பரா இருக்கு சீனு
ReplyDeletekalai;
Deleteneenga enge poneenga?
ivvalavu naalaa ungal-
karuththai kaanaamal-
kavithai kalai" izhanthum-
karuthum " pochi!
ippavaavathu vaantheengale!
mikka nantri!
வார்த்தை என்னும் சிப்பிக்குள் துளிகளை சேகரித்து கவிதை என்னும் முத்தை பரிசளித்த சகோவுக்கு நன்றிகள். கவிதை அருமை சகோ. பாராட்டுக்கள்
ReplyDeleteraji!
Deleteungal varavukkum-
azhakiya pinnoottathukkum-
mikka nantri!
சொட்டுச் சொட்டாய்ச் சேகரித்த துளிகள் வரிகளாய்.உங்கள் எண்ணங்கள் வியக்கவைக்கிறது சீனி.ஒவ்வொரு கவிதைகளிலும் இந்த வசனத்தைச் சொல்ல நினைக்கிறேன் !
ReplyDelete