Friday, 17 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (1)

வாழ்வில்-
சில தேடினால்-
கிடைக்கிறது!

சில-
தேடி வ௫கிறது!

எது-
நமக்கானது!

அது-
தீர்மானிக்கபட்டு விட்டது!

புத்தகம் -
ஒன்றினை-
தேடி இ௫ந்தேன்.!

அன்புக்குரியவரிடம்-
இ௫ந்ததும்-
மகிழ்ந்தேன்!

ஊறுகாயை திறந்தை-
கண்டது போலவும்!

க௫வாட்டை கண்ட-
 பூனை போலவும்!

அதனால்-
எச்சில்-
 ஊறுவதை போலவும்!

நெஞ்சில்-
வாசிப்பு ஆசை ஊறியது -
எனக்கும்!

மன்னரென்றால்-
மங்கைகள்-
மதுகுவளைகள்!

இப்படியாக-
நிறைந்தி௫ந்தது!-
என் எண்ணங்கள்!

இப்புத்தகத்தின் வாயிலாக-
சிதற௫ண்டது-
அவ்வெண்ணங்கள்!

மன்னன் கொண்டி௫ந்த-
நேர்மை!

மக்கள் மேலுள்ள-
கடமை!

ஆன்மீக ஆர்வம்!

ஆபத்தான த௫ணம்!

இன்னும்-
இன்னும்!
சிறப்புகள்!

என் சிந்தனைக்கு-
வி௫ந்தானவைகள்!

''சேரமான் பெ௫மாள்''-எனும்
தலைப்புக்கொண்ட -
வரலாற்று பெட்டகம்!

இக்கவிதை தொடரின்-
ஆதாரம்!

யூசுப் -எனும்
அந்நூலின் ஆசிரியர்!

எழுத்தினால்-
கட்டி போட்ட-
வித்தகர்!

இவ்வரலாற்றை-
கவிதையாக -
எழுதிட முயல்கிறேன்!

என்னுடன் பயணிக்க-
உங்களையும்-
அழைக்கிறேன்!


//இப்புத்தகம் கிடைக்கும்இடம்,
புது யுகம்,
26-பேரக்ஸ் ரோடு,
பெரிய மேடு,
சென்னை-3
போன்- +91 44 256 10 969 //

7 comments:

  1. தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக அருமை..புத்தக விமர்சனம், வரலாறு இவற்றைக் கவிதையாகத் தருகிறீர்களா? வாழ்த்துகள்! தொடருங்கள்

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. தொடருங்கள்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சகோ..தொடரட்டும் தங்கள் எழுத்துக்கள்..:)

    ReplyDelete
  6. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    கண்டிப்பாக புத்தகம் வாசிக்க முயல்கிறேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete