உற்றத்தாரும் ,சுற்றத்தாரும்
இருக்கலாம்-
ஊரளவு!
பரிதவிப்பின்போது-
ஓடி வருவது-
பக்கத்து வீடு-
உறவு!
"மூத்தவர்கள்"-
முக சாயலை வைத்து-
சொல்லி விடுவார்கள்-
இன்னாரென்று!
இளையர்கள்-
பக்கத்து வீட்டுக்காரன் -
பெயர் கூட தெரியாமல்-
இருக்கிறார்கள்-
இன்று!
கண்டம் விட்டு-
கண்டம்-
நேசம் கொள்கிறார்கள்!
அண்டை வீட்டுக்காரனுடன்-
சண்டை செய்கிறார்கள்!
எண்களை அழுத்தினால்-
பல மையிலுக்கு அப்பாலும்-
உடனடி தொடர்பு!
பக்கத்துல இருப்பவர்களிடம்-
பல வருட துண்டித்து போன-
உறவு!
அன்றைக்கு -
அக்கம் பக்கமே-
அன்புக்கு பிரதானமானது!
இன்றைக்கு -
"நிழல்" உறவுகளுக்கு-(சீரியல்)
எந்நேரமும் கண்ணீர்வடிப்பது!
தகப்பனுக்கு-
ஒன்னு!
தாயிக்கு-
ஒன்னு!
பிள்ளைக்கு-
ஒன்னு!
ஆளுக்கொரு-
தொலை காட்சி!
உறவுகளோ-
பாழா போச்சி!
இதுல எங்கே-
இவர்கள் வாழ-
பக்கத்துக்கு வீட்டாரையும்-
நினைச்சி!?
அன்று-
விசேசமா சமைத்தாலும்-
பக்கத்துக்கு வீட்டுக்கும்-
சேர்த்து சமைப்பார்கள்!
இன்று-
அற்ப விசயங்களுக்கும்-
பேசாமல் இருக்கிறார்கள்!
அண்டை நாடுகளுடன்-
பிரச்னை-
ஆயுத குவியலுக்கு-
உதவும்!
அண்டை வீட்டாருடன்-
சண்டை-
"வறட்டு" எண்ணங்களுக்கு-
வழி வகுக்கும்!
"அண்டை வீட்டாருக்கு-
காற்று வராதபடி-
சுவர்களை எழுப்பாதீர்கள்!
அண்டை வீட்டார்-
பசியோடு இருக்கையில்-
தான் மட்டும் வயிறு முட்ட-
தின்பவன்-என்னை சார்ந்தவன்
அல்ல-"
நபிகளார் சொன்னது!
இன்ன மதம்-
இன்ன இனம்-என
சொல்லிடாதது!
ஆதலால்-
இனம் ,மதம்,
மொழி கடந்து-
பக்கத்துக்கு வீட்டாருடன்-
பரிவோடு நடப்பது-
நன்மை பயக்கவல்லது!
கருத்து மிக்க கவிதை!
ReplyDeletesuvadukal!
Deletemikka nantri!
nammidam இருப்பது எல்லாம் சொல்லிவிட்டு இல்லாதது என்று கூறிய பக்கத்துக்கு வீடு உண்மை நண்பா
ReplyDeleteseenu!
Deletemikka nantri!
அயலானை நேசிக்கச்சொல்லும் அருமையான கவிதை !1
ReplyDeleterajesvari!
Deletemikka nantri!
அக்கம் பக்கத்தாரையும் நேசிக்க வேண்டும் அருமைகவிதை!
ReplyDeletetani maram!
Deletemikka nantri!
கருத்துள்ள கவிதை.... நன்றி...
ReplyDeleteதமிழ்மண(ம்)த்தில் இணைக்கலாமே...
balan sako!
Deleteungal anpukku mikka nantri!
enakkum aasaithaan enakku serthida theriyaathu-
nanpar sadak avarkal muyarchithu mudiyala-
iraivan naadinaal ramalaan mudintha piraku muyarchikkiren
ungal azhakaana akkaraikku mikka nantri
ஆதலால்-
ReplyDeleteஇனம் ,மதம்,
மொழி கடந்து-
பக்கத்துக்கு வீட்டாருடன்-
பரிவோடு நடப்பது-
நன்மை பயக்கவல்லது!//
நன்மை பயக்கவல்லது மட்டுமல்ல
நம்மை மனிதனாக
அடையாளம் காட்டுவதும் அதுதான்
மன்ம் தொட்ட அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
aamaangayya!
Deleteungal varavukku karuthukku mikka nAntri ayya!
காழ்ப்புணர்ச்சிகள் தவிர்த்து
ReplyDeleteஅக்கம் பக்கம் உள்ளோர்களுடன்
சுமூக உறவு வைத்துக்கொள்ளுதல்
நலமென உரைக்கும்
கவிதை அழகு நண்பரே..
maken sir!
Deletemikka nantri sir!
அழகான கவிதை இயல்பானது......
ReplyDeleteநபி மொழியினை இணைத்தவிதம் பிடித்தமானது
kuruvi!
Deletemikka nantri!
அருமையான பகிர்வு நண்பரே.
ReplyDeletearouna !
Deletemikka nantri!
//"மூத்தவர்கள்"-
ReplyDeleteமுக சாயலை வைத்து-
சொல்லி விடுவார்கள்-
இன்னாரென்று!
இளையர்கள்-
பக்கத்து வீட்டுக்காரன் -
பெயர் கூட தெரியாமல்-
இருக்கிறார்கள்-
இன்று!
//
நல்ல வரிகள். உறவுகள் தொடர வேண்டும் அதுவே ஆசையும் கூட....
nagaraj!
Deletemikka nantri!
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.