Thursday, 5 July 2012

பருவத்திலே.....



காற்றின் ஈரப்பதம்-
மேகமாகிறது!

மழையோ-
"பருவம்"தவறினால்-
விவசாயி கன்னம்-
ஈரமாகிறது!

விவசாயிகள்-
நாட்டின் முதுகெழும்பு-
என்றார்கள்!

அதனால்தானோ-
"வளைத்து" விட்டார்கள்!?

விதைக்கிறவர்களே!

மண்ணிலே!

தேடுகிறீர்கள்!
மானுடத்துக்கு-
உணவு தானியங்கள்!

உங்கள் வாழ்வோ-
இடர்பாடுகளிடையே!

மண்ணோட -
மலந்து கிடக்க-
மது குடிக்கிரவனும்-
விக்கிரவனும்!-
அடங்கி விடுகிறான்-
கௌரவம் என்ற-
பேரிலே!
-----------------------

"பருவம் "வந்த பெண்ணை-
கரை சேர்க்க முடியாமல்!-
ஏழை தகப்பன்களின்-
கண்களே குளமாகுது!

ஏழ்மை சகோதரிகள்-
இளமையோ-
எரிதணலில் இட்ட-
தாளாகுது!

உழவெடுக்க!
வண்டி இழுக்க!

பந்தயம் ஓட!
ஜல்லி கட்டில் ஓட!

வித விதமான-
மாடுகள் விற்பனைக்கு-
சந்தையிலே!

நடு நிலை பள்ளி!
உயர் நிலை பள்ளி!

பட்டதாரி!
"பட்டத்துல" பாதி!

உள் நாடு!
வெளி நாடு!

விலை வித்தியாசப்படும்-
மாடுகள் -மன்னிக்கவும்-
மாப்பிள்ளைகள்-
விற்பனையிலே!

வளர்த்தவர்களுக்கு-
என்ன?-
உரிமை இருக்கு!?

மாடோ-
மகனோ-
போன பிறகு-
விற்பனைக்கு!

தாரை தப்பட்டைகளின்-
சப்தத்துக்கு பயந்து ஓடி-
மாட்டிடும்-பலம் கொண்ட-
யானைகள் கூட்டம்!

காசை பார்த்து-
ஆசையில் மயங்கி-
தன் மானத்தை-
இழக்கலாமோ-!,?
இளைஞர் பட்டாளம்!
-------------------------




10 comments:

  1. காசை பார்த்து-
    ஆசையில் மயங்கி-
    தன் மானத்தை-
    இழக்கலாமோ-!,?
    இளைஞர் பட்டாளம்//


    !நல்ல கேள்வி எழுப்பியுள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதில் சொல்லிக் கொண்டே வந்து இறுதியாக எழுப்பிய கேள்வியில் பொதிந்துள்ளது உங்கள் கவியின் சிறப்பு

    ReplyDelete
  3. மழையோ-
    "பருவம்"தவறினால்-
    விவசாயி கன்னம்-
    ஈரமாகிறது!////////

    அருமையான வரிகள் நண்பா

    ReplyDelete
  4. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  5. காசை பார்த்து-
    ஆசையில் மயங்கி-
    தன் மானத்தை-
    இழக்கலாமோ-!,?
    இளைஞர் பட்டாளம்!

    சுடும் கேள்வியும் பதிலும் ...

    ReplyDelete
  6. வளர்த்தவர்களுக்கு-
    என்ன?-
    உரிமை இருக்கு!?

    மாடோ-
    மகனோ-
    போன பிறகு-
    விற்பனைக்கு!

    அழுத்தமான வரிகள்....

    ReplyDelete