Wednesday, 31 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(28)

"பகிரங்க அழைப்பிற்கு"-
பின் !

பயங்கொண்டது-
பதறுகள் கூட்டம்-
சத்தியத்திற்கு முன்!

"வளர்வதை-"
வெட்ட-
நினைத்தார்கள்!

அதற்காக-
புத்தியை கத்தியாக-
தீட்டினார்கள்!

வரவிருக்கும்-
புனித யாத்ரீகர்கள்!

அவர்களிடம்-
சேர்ந்திட கூடாது-
சத்திய பிரசாரங்கள்"!

பரப்பவேண்டும்-
முஹம்மது (ஸல்)-அவர்கள்மீது
அவதூறுகள்!

சூட்டிடவேண்டும்-
"கெட்டபெயர்கள்"!

அவைகள்!
அவர்-
ஒரு ஜோசியர்!
பைத்தியகாரர்!

கவிஞர் !
சூனியக்காரர்!

சூனியக்காரர்-
தேர்ந்தெடுத்த-
பெயர்!

வலீத்-இது
தேர்ந்தெடுத்தவனின்-
பெயர்!

எதிரிகள்-
பொய் பிரசாரம்-
செய்தார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்
"உண்மையை கொண்டு-"
பிரச்சாரம் செய்தார்கள்!

ஆனால்-
வந்து சென்ற-
யாத்ரீகர்கள்!

"சத்தியத்தை"-
சுமந்து -
சென்றார்கள்!

இன்னொன்றுக்கு-
தயாரானார்கள்!
எதிரிகள்!

முஹம்மது (ஸல்)-அவர்களின்
பிரசாரத்தின்போது!

கூச்சலிடுவது!
எள்ளி நகையாடுவது!

சந்தேகத்தை கிளப்புவது!
மக்களை குழப்புவது!

இதிலும்-
தொடர்ந்தது-
"மாற்றமே"!

எதிரிகளுக்கு-
ஏமாற்றமே!

எதிரிகளின்-
மறு முடிவு!

துன்புறுத்திட-
துணிவு!

மின்னிடும்-
விண்மீன்களையும்!
வீசும் தென்றலையும்!

மறைக்க முடியுமா!?
அடைக்க முடியுமா!?

(தொடரும்....)



5 comments:

  1. உண்மையையும் மறைக்கவும் அடைக்கவும் முடியாது... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. முக்கிய அறிவிப்பு : சென்னை பதிவர் சந்திப்பு 2013← இணைப்பை சொடுக்கி வாசிக்கவும்... அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

    தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com
    +91 9944345233

    ReplyDelete
  3. எளிமையான நடையில் அசத்துகிறீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. அரிய விஷயங்களைக் கூட
    எளிமையாகச் சொல்லிச் செல்லும் திறன்
    உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete