Friday, 19 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(16)

கடல் நீர்-
கரிப்பதால்!-
மீன் குழம்புகள்-
ருசிக்க மறுப்பதில்லை !

மேகத்தில் -
அந்நீர் கலப்பதால்-
மழை நீர்-
உப்பை கொட்டுவதில்லை!

அவ்வாறே-
அன்றைய-
 அரபு மக்களிடம்-
நாசங்கள் -
இருந்தாலும்!

நல் செயல்களும்-
இருந்தது-
அவர்களிடத்திலும்!

பொருளாதாரம்-
வாணிகத்தில்-
பொருளீட்டினார்கள்!

போர்களினாலும்-
சண்டைகளினாலும்-
வறுமைக்கு உள்ளானார்கள்!

கொடைத்தன்மையும்-
தயாளதன்மையும்-
கொண்டிருந்தார்கள்!

பிறருக்கு-
நஷ்ட ஈடு ஏற்றுக்கொண்டு-
உயிர்களை காப்பார்கள்!

தன்னால் முடியாது-
என்றாலும்-
முயல்பார்கள்!

மதுவில்-
மலந்தார்கள்!

மதுவால்-
கொடைத்தன்மை-
பெருகும் -என
எண்ணினார்கள்!

சூதிலும்-
திளைத்தார்கள்!

ஜெயித்தால்-
தன் பணத்தை மட்டும்-
எடுத்து விட்டு!

செல்வார்கள்-
மிச்சபணத்தை-
ஏழைகளுக்கு-
கொடுத்து விட்டு!

எதை இழந்தாலும்-
ஒப்பந்தத்தை-
நிறைவேற்றுவார்கள்!

அதில் -
சமரசம்-
இல்லாதிருந்தார்கள்!

சமல் அல் என்பாரிடம்-
ஒருவர்-
சிலகவசங்களை-
கொடுத்திருந்தார்!

அதனை-
மன்னன் -
"ஹாரிஸ்"-என்பவர்
அபகரிக்க முற்பட்டார்!

அவர்-
மறுத்தார்!

சமல் அல்-
மகனை-
மன்னர் -
பிணையாக -
பிடித்தார்!

ஆனாலும்-
"கொடுக்க"-
மறுத்தார்!

தன் மகனின்-
இறப்பை பார்த்தார்!

அம்மக்களிடம்-
செயல் உறுதி-
இருந்தது!

அநீதத்தை -
எதிர்க்கும் -
ஆர்வம் இருந்தது!

பகட்டில்-
வெறுப்பு இருந்தது!

எளிமை-
பிடித்திருந்தது!

ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்-
இப்பண்பு-
இலட்சியத்திற்காக-
உழைப்பதற்கு-
உந்துதலானது!

(தொடரும்...)







3 comments:

  1. // பகட்டில் வெறுப்பு இருந்தது... எளிமை பிடித்திருந்தது... //

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. //கடல் நீர்-
    கரிப்பதால்!-
    மீன் குழம்புகள்-
    ருசிக்க மறுப்பதில்லை !//

    நல்ல எடுத்துக்காட்டு....

    தொடருங்கள்.... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. நீங்கள் சொல்லிச் சென்ற உவமைகள் அருமை
    தொடர்கிறேன்

    ReplyDelete