Monday 22 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(19)

அப்துல்லா-
ஆமினா-
"வாழ்ந்த"-
வாழ்வு!

பிறந்தார்-
ஒரு-
ஆண் மகவு!

பேரன் பிறந்ததை-
அப்துல் முத்தலிபு-
அறிந்தார்!

உள்ளம்-
குளிர்ந்தார்!

குழந்தையை-
அள்ளி அணைத்து-
காபத்துல்லா-
சென்றார்!

"முஹம்மது"-என
பெயர் சூட்டி மகிழ்ந்தார்!

குடும்பம்-
மகிழ்ச்சியில்-
திளைத்தது!

அரபு மக்களின்-
வழக்கப்படி-
ஏழாம் நாள்-
கத்னா (விருத்த சேனம்)-
செய்யப்பட்டது!

அன்றைய -
அரபுக்களிடம்-
ஒரு வழமை-
இருந்தது!

செவிலித்தாயிடம்-
குழந்தைகள்-
வளர்வது!

காரணங்களும் -
இருந்தது!

தெளிவாக-
மொழி பேசுவதற்கு!

உடல்வலிமையாக-
வளர்வதற்கு!

குழந்தைகளை-
தத்தெடுத்து-
வளர்பதற்கு!

வந்தார்கள்-
செவிலித்தாய்கள்-
மக்காவிற்கு!

எல்லா குழந்தைகளையும்-
செவிலிதாய்மார்கள்-
எடுத்தார்கள்!

ஒரு குழந்தையை-
தவிர்த்தார்கள்!

காரணம்-
தகப்பன் இல்லாத-
நிலை!

ஊதியம்-
கிடைக்குமா!?-என்கிற
மன நிலை!

மிஞ்சியது-
ஒரு குழந்தையும்!

ஒரு தாயும்!

தாயவள்-
"ஹலீமா"-என்பவராவார்!

குழந்தை-
முஹம்மது(ஸல்)-
ஆவார்!

அத்தாய்-
குழந்தையை-
தூக்கி சென்றாள்!

வரலாறுகள்-
அவளது பெயரையும்-
சுமக்கும் என்பதை-
நினைத்திருப்பாள்!?

(தொடரும்....)

//முஹம்மது (ஸல்) பிறந்தது.
கி.பி.571 ஏப்ரல் 20அல்லது 22.
ரபியுல் அவ்வல் 9 ம் நாள்.
திங்கள் கிழமை//

//சல்லலாஹு அலைஹிவசல்லம்-
இதன் சுருக்கமே(ஸல்) என எழுதபடுகிறது.//







3 comments:

  1. வரலாற்றை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete

  3. //சல்லலாஹு அலைஹிவசல்லம்-//
    இந்த வாசகத்திற்கான பொருள்தெரிந்தால்
    இன்னமும் மகிழ்வு கொள்வேன்
    வாழ்த்துக்களுடன்...


    ReplyDelete