வரிசையாக வைக்கப்பட்ட-
நான்கு அடுப்புகள்!
கழுவி கொவுத்தி-
வைத்திருக்கும்-
சட்டிகள்!
ஒரு பக்கம்-
தேங்காய் திருக-
ஒரு கூட்டம்!
பூண்டை தோல் -
உரிக்க ஒரு-
கூட்டம்!
அரிசியை ஓட்டை-
போட்டு -எடுத்து செல்லும்
எலி கூட்டம்!
சிறு உதவிகளுடன்-
அன்றைக்கு உதவும்-
இளையர்கள்!
டேய் !-
மாப்ள!-
மருமகனே!-என
உறவு முறையுடன்-
கூப்பிடும்-
பெரியவர்கள்!
தெரிந்து செய்த-
தப்புகளுக்கு-
கிடைக்கும் பெரியவங்க-
திட்டுகள்!
அதே வயது ஒத்தவர்-
"ஏன்பா!? சின்ன பசங்கள-
திட்டுறே"!என கிடைக்கும்
ஆதரவுகள்!
திட்டுகள் நமக்கு-
ஒன்றும்-
புதிதில்ல!
அதைபற்றியெல்லாம்-
கவலை பட்டதே-
இல்லை!
ஆதரவா சொன்ன-
வார்த்தையாலே!
எங்கோ உரைக்கிறது-
பட்ட மிளகாய்-
கடித்தது போல!
உதிரும் இலைகள்-
முளைப்பதுண்டு-
கிளைகளிலே!
"உதிர்ந்த "உறவுகள்-
திரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!
"மறைந்த "உறவுகளை-
நினைக்கையிலே!
கண்களோ குளிக்கிறது-
கண்ணீரிலே!
இரண்டு சட்டி கஞ்சி-
ஊரில் வாங்கிட -
வருபவர்களுக்கு!
மற்ற இரண்டும்-
பள்ளியில் நோன்பு-
திறப்பவர்களுக்கு!
மாலை நேர-
வேலை-
தூக்கு சட்டியுடன்-
குழந்தைகள்!
தூக்கு சட்டிய தூக்கியவர்களை-
தூக்கி கொண்டுவரும்-
"வாப்பாக்கள்"!
அந்தி பொழுதும்-
வந்தது!
வரிசையாக வைக்க பட்ட-
நோன்பு கஞ்சிகளுடன்-
குண்டாளங்கள்!
அதன் அருகில்-
வைத்திருக்கும்-
பேரீத்தம் பழங்கள்!
பிரயாணத்தில்-
இருந்தவர்கள்!
வியாபாரம் செய்ய-
வந்தவர்கள்!
பெரிவர்கள்!
சின்னவர்கள்!
அவர்களுக்கு பிடித்த-
இடங்களில் அமர்ந்தார்கள்!
யாரையும் "ஒதுங்கிட"-
சொல்லவில்லை!
அந்த உரிமை-
எவருக்கும் இல்லை!
இறைவா!
உன்னுடைய உணவை கொண்டே-
என்னுட நோன்பை திறக்கிறேன்-
என்னிடம் இருந்து ஏற்றுகொள்வாயாக!
என்பதை அரபியில்-
சொல்லப்பட்டது!
அதனை அனைத்து-
வாய்களும் சொல்லியது!
பேரீத்தம் பழங்களை-
தின்றார்கள்!
கஞ்சிய -
குடித்தார்கள்!
எனக்கோ தோன்றிய-
சில எண்ணங்கள்!
பார பட்சம்-
காண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!
பாகு பாடு இல்லாம-
நோன்பை திறக்கவா!?-
நோன்பு கஞ்சி முறை...!!!?
கஞ்சி இதமான-
சூட்டுடன்-
தொண்டையில்-
இறங்கியது!
எல்லோர் பசியை போக்க-
கஞ்சி காய்ச்ச உதவியதை-
எண்ணுகையில்-
மனதின் ஓரத்தில்-
இனித்தது....!!
இனிமையான கவிதை.... வாழ்த்துகள் சீனி.
ReplyDeletenaga raj!
Deletesako!
mikka nantri!
/// உதிரும் இலைகள் முளைப்பதுண்டு - கிளைகளிலே !
ReplyDelete"உதிர்ந்த" உறவுகள் திரும்புவதில்லை ! - இவ்வுலகிலே!
"மறைந்த" உறவுகளை நினைக்கையிலே.... கண்களோ குளிக்கிறது - கண்ணீரிலே! ////
மேலே உள்ள வரிகளை படிக்கும் போது கண்கள் கலங்கின.. நன்றி..
sakotharaa !
Deletemikka nantri!
நோன்புக் கஞ்சி தந்த சிந்தனைகளை சிறப்பாய் கவி வடித்தீர்கள்.
ReplyDeleteநோன்புக் கஞ்சி தந்த சிந்தனைகளை சிறப்பாய் கவி வடித்தீர்கள்.
ReplyDeletenizam sako!
Deletemikka nantrikal!
//பார பட்சம்-
ReplyDeleteகாண கூடாதுன்னு-
பள்ளி சீருடை!
பாகு பாடு இல்லாம-
நோன்பை திறக்கவா!?-
நோன்பு கஞ்சி முறை...!!!?//
அழகா சொன்னீங்க
mana saatchi!
Deletemikka makizhchi!
"உதிர்ந்த "உறவுகள்-
ReplyDeleteதிரும்புவதில்லை!-
இவ்வுலகிலே!////////அழகு நண்பா
நோன்புடன் நான் படித்த ஒரு ரீ மேக் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்
நோன்பு பிடித்துப் பார்.....
நோன்பு பிடித்துப் பார்,
உன்னை சுற்றி
சம்சா, பெற்ரிஸ்
தோன்றும்....
ஒரு முறை
பல் துலக்குவாய்....
கஞ்சி வாளி
உன் நண்பனாகும்....
சஹருக்கு உன்னை
எழுப்பினால்,
வருடங்கள் நிமிடம்
என்பாய்....
மாலை ஐந்து மணி
ஆனதும்
நிமிடங்கள் வருடம்
என்பாய்....
காக்கை கூட
"நீ நோன்பா..."
என கவனியாது...
ஆனால்,
உலகமே கேட்பதாய்
உணர்ந்து கொள்வாய்....
பதினைந்து நோன்புதான்
பிடித்திருப்பாய்..
நோன்பை கண்டுபிடித்தவன் போல்
கதை கதைப்பாய்....
இருபத்தேழாம் நாள்
மட்டும் விழித்திருப்பாய்,
காலை எட்டு மணிக்கே
நோன்பு வாட்டுது என்பாய்.....
நோன்பு பிடித்து பார்......
sako !
Deletemikka nantri!
kavithai enge padiththathu!
nalla irukku!
அருமை நண்பா!
ReplyDeletesuvadukal!
Deletemikka nantrikal!
நோன்பின் சிறப்பைச் சொல்லும் இனிய கஞ்சியும் அந்த உணர்வும் ஒரு புனிதம்!சகோ!
ReplyDeleteநோன்பு கஞ்சி சுவையாக இருந்தது.
ReplyDeletearounaa!
Deletemikka nantri!
வணக்கம் சீனி.அன்புக்கு முதல் நன்றி சொல்லிக்கொள்கிறேன் !
ReplyDeleteநோன்புக் கஞ்சி சொல்ல மட்டுமே கேட்டிருக்கிறேன்.சமைத்தே தந்துவிட்டீர்களே.அந்த ஆண்டவனின் அருளையும் கொஞ்சம் வாங்கித் தந்துவிடுங்கள் !
hema!
Deleteungal varavukku mikka nantri!
iraivan nal vazhi kaattuvaanaanaaka....
நோன்புக்கஞ்சியைப்பற்றிய கவிதை நோன்புக்கஞ்சியாக,மணத்து சுவைத்தது.பழைய நினைவுகளையும் கிளறி விட்டது.அருமையான கவிதை சகோ.
ReplyDeletesadika
Deletemikka nantri sako!
நோன்பு கஞ்சி... சுவை +++
ReplyDeleterevari!
Deletemikka nantri!