அரக்க பறக்க-
ஓடுகிறோம்-
வாழ்நாள்-
முழுவதும்!
ஒரு கணமாவது-
நிதானித்திட-
மறக்கிறோம்!
சிலர் வாழ்வதற்காக-
பணத்தை தேடி கொண்டு!
பலர் பணத்தினுள்-
வாழ்வை தேடி கொண்டு!
உச்சி வெயிலின்-
உக்கிரத்தை -
அனுபவிக்காதவர்கள்-
உண்டோ!?
பசியில் கொதிக்கும்-
வயிற்றின் வலியை-
அறிந்தவர்கள்-
நம்மில் எத்தனை பேர்-
உண்டோ!?
"குடிச்சவனுக்கு"-
தெரியாது-
சாக்கடையும்!
சந்தனமும்!
பசியில இருக்கும்-
உறவுகளை-
மறக்கலாமோ-
பந்தங்களும்!
பாசங்களும்!
முதியோர் இல்லங்கள்-
பெருகி வரும்-
காலம் இது!
"முடியாதவர்களையா-"
கவனிக்க போகுது!?
அன்று -
தானிய அமைச்சர்-
அதிகமாக நோன்பிருந்தார்!
பிரதானிகளில்-
ஒருவர்-காரணம்
அறிய ஆவல் கொண்டார்!
பதிலும் கிடைத்தது-
நான் பசியின் -
வலி அறிந்தால்தான்-
மக்களின் பசியை-
புரிந்து கொள்ள முடியும்-
என்றார்!
இன்று-
"விலைவாசியை கட்டுபடுத்த-
என்னிடம் மந்திர கோல் இல்லை"
"தானியங்களை பாதுகாக்க-
சாக்குகள் இல்லை"-என
"பொறுப்பாக(!!!)-
பதிலுரைத்தவர்!
இவரை ஆதரிக்கும்-
ஒரு அணி!
"இருப்பதை"-
இடிப்பார்கள்!
"இல்லாததை"-
இருக்கு-என்பார்கள்!
சேது திட்டத்திற்கு-
பாதை - திட்டங்கள்-
வகுத்தவர்கள்!
ஆட்சி இழந்ததும்-
"சேதுவுக்கு" மத-
சாயம் பூசுபவர்கள்!
இவர்கள்-
ஆதரவில்-
ஒருவர்!
இது மற்றொரு-
அணி!
"இவர்கள்"-
"ஆண்ட போதும்"-
"ஆளும்போதும்"-
மாறிடவில்லை!
நாட்டின்-
நிலை!
இவர்கள் ஆதரிப்பவர்களால்-
மாறும் என-
நம்பலாமோ!-
இனி!?
ஆண்டிடும் காலம்தான்-
வாராத -
"பசியிலிருந்து விடுதலை"-
தர ஒரு அணி....!!
//சிலர் வாழ்வதற்காக-
ReplyDeleteபணத்தை தேடி கொண்டு!
பலர் பணத்தினுள்-
வாழ்வை தேடி கொண்டு//
உண்மையான வரிகள்...
riyaas!
Deleteungal muthal varavukku mikka nantri!
அருமையான கருத்துடன்
ReplyDeleteஅழகிய நதி போன்று
நடைபோட்டுச் செல்லும்
இப்பதிவு அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
mikka nantri!
Deleteayya!
அரசியல் நாட்டு நடப்பை அப்பட்டமாக சொல்லி உள்ளீர்கள்
ReplyDeletemana saatchi !
Deletemikka makizhchi!
//பலர் பணத்தினுள்-
ReplyDeleteவாழ்வை தேடி கொண்டு!//
வார்த்தைகள் உங்களிடம் சிக்கிக் கொள்ளும் பொது அற்புதமான வரிகளாக மாறுகின்றன. அருமை நண்பா
தாகம் நிறைந்த கவி...நண்பா
ReplyDeletekuruvi!
Deletemikka nantri!
பல வரிகள் சாட்டையடி ! வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி !
ReplyDeletebalan!
Deletemikka nantri!
"இவர்கள்"-
ReplyDelete"ஆண்ட போதும்"-
"ஆளும்போதும்"-
மாறிடவில்லை!
நாட்டின்-
நிலை!
உண்மை நிலையை உரக்கச் சொல்லும் வரிகள் அருமை.
அருமையான கருத்துள்ள கவிதைங்க நண்பரே.
ReplyDeleteஎன்று திருந்துவார்களோ.. இந்த பாவ பிறவிகள்..!
ReplyDeleteகவிதை வழக்கம் போல் நச்!
வரிகளில் ஒரு வேகம் இருக்கின்றது ...
ReplyDeleteஇந்த நாட்டை மாறி மாறி ஆளும் மனிதர்களிடம் இல்லாமல் போனதின் விளைவு ...
அழகிய படைப்புக்கு என் வாழ்த்துக்கள்
arasan!
Deleteungal muthal varavukkum-
karuthukkum mikka nantri!