Wednesday, 4 July 2012

மகளே...



என் உயிரின்-
வழி வந்த-
உயிரே!

உயிரணு ஒன்னை-
உருவமாக்க இடம்-
தந்தவளின் -உரு
கொண்டவளே!

என் வாழ்வு-
விளங்கவில்லை-உன்
தாய் "வரும்வரை!"

என் தாயின் பாசம் -
புரியவில்லை- நீ!
எனக்கு மகளாக-
பிறக்கும் வரை!

பாடசாலை கேள்வியை-
என்னிடம்- கேட்பாய்!

தெரியாததுபோல்-
தலை அசைத்தால்-
"ஐயோ" என செல்லமாய்!

உன் தலையிலேயே-
தட்டி கொள்வாய்!

என் தாயிடம்-
அதே கேள்வியை கொண்டு-
செல்வாய்!

என் தாயோ-
வாழ்வில் பாடம்-
படித்தவள்!

வகுப்பு பாடம்-
அறியாதவள்!

என் தாயோ தெரியாது என-
தலையாட்டினாள்!

யாருக்குமே தெரியல-
என- சொல்லி கொண்டு!

பதிலை நீயே -
சொன்னாய்-
அதட்டி கொண்டு!

இங்கே நீ!
ஆசிரியை ஆனாய்!

என் தாயோ-
மாணவி ஆனாள்!

கேட்பதுண்டு-
சிலர்!

சந்தோசம் கிடைப்பது-
வெற்றியிலா! ?

தோல்வியிலா!?

வித்தியாசப்படும்-
யாரிடம் தோற்கிறோம்-
என்பதிலே!

இதுவே -
என் பதிலே!

கல்வி கற்பதில்தான்-
உள்ளது- கண்ணியம்!

ஆடை குறைப்புதான்-
சுதந்திரம் என்பது-
போலி பெண்ணியம்!

சீன தேசம் சென்றேனும்-
சீரிய கல்வியை தேடு-
நபிகளார் மொழி!

"அறியாதவர்கள்"-
விமர்சனத்திற்கும்-
அடைத்து வைப்பவர்களுக்கும்-
நபிகளார் மீதா!?-
பழி!?

என் ஈராக்குலைகலான-
பெண் குழந்தைகளே!

இன்று-
உலகில் சுதந்திரம்-
என்ற -மாயை உள்ளது!

அது-
"எப்படியும்" வாழலாம்-
என்கிறது!

வாகனம் ஓட்டுபவனுக்கே-
கட்டுபாட்டு விதிகள்-
இருக்கு!

கட்டுப்பாடு -
தேவையில்லையோ-
மனித வாழ்விற்கு!?



12 comments:

  1. படித்த பின் ஏதோ இனம் புரியாத உணர்வு
    இன்னதென்று சொல்ல முடியவில்லை
    அற்புதம் என்ற ஒரு வார்த்தையும் ஈடாகா

    ReplyDelete
  2. கட்டுப்பாடு -
    தேவையில்லையோ-
    மனித வாழ்விற்கு!?

    //கண்டிப்பாக தேவை அன்பரே

    ReplyDelete
  3. மனமே கட்டுப்பாடு .தெளிவு படுத்தும் வரிகள்.

    ReplyDelete
  4. அழகான வரிகள் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  5. முத்தான கவிதை சீனி ஐயா.

    ReplyDelete
  6. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_26.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
    Replies
    1. balan sir!

      ungal
      thakavalukku mikka nantri!
      sir!

      Delete
  7. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_26.html) சென்று பார்க்கவும். நன்றி !
    ஃஃஃஃஃஃஃஃஃஃஃ


    அதே... அதே...

    ReplyDelete
    Replies
    1. soundar sir!

      ungal muthal varavukkum
      karuthukkum-
      mikka nantri sir!

      Delete