Monday, 16 July 2012

"நடந்திடும்" கவிதை....!



சிரிப்பதும்-
அழுவதும்!

அழுவதற்கு முன்-
சிணுங்குவதும்!

தூக்கிட அழைத்திடும்போது-
தாயோட ஒட்டிகொள்வதும்!

அவசரகதியில் செல்லும்போது-
தூக்கிட சொல்லி-
கை அழைக்கும்போது!

பிஞ்சு விரல்களால்-
உன் தலையை -
சொரிந்து கொள்வதும்!

அவ்விரல்கள் கொண்டு-
என்தலையில்-நீ!
அடிப்பதுவும்!

என் தாயிக்கு வலிப்பதுபோல்-
உன் கையில் செல்லமாய்-
அடிப்பதுவும்!

"பெருசு"களின் -
கவலைகளை -
மொக்கை வாய் சிரிப்பிலே-
போக்குவதும்!

மடித்த ஆடைகளை-
கலைத்து போடுவதும்!

விளையாட்டு பொருட்களை-
உடைத்திடுவதும்!

நீ!
வாய் பேசிட சப்தம்-
எழுப்பிடும்போதும்!

உறவுகள் ஒவ்வொருவரும்-
"தன்னை" அழைத்ததாக-
எண்ணி கொள்வதும்!

உன்னை குளிக்க வைக்க-
நீ!- குடும்பத்தையே-
நனைந்திட வைப்பதுவும்!

உன்-
அப்பனாவது பரவாயில்லை-
உன்னை விட!

என்னை குழந்தையின்போது-
குளிக்க வைத்த ஆச்சா(பாட்டி)-
சொல்லி விட!

உன் சேட்டையோ-
என் சேட்டையை மிஞ்சி விட!

"கூடுதலா" மரியாதை-
கிடைத்து விட!

சிறுமகிழ்வு-
என் மனதோட!

என் எண்ணங்களின்-
எழுத்தை கவிதை என்கிறார்கள்!

பெருந்தன்மையாக-
பெரிய மனதுடையவர்கள்!

மழலைகளே-
உங்களது அசைவுகளெல்லாம்-
மொழி பெயர்த்திட முடியாத-
கவிதைகளாக தெரிகிறீர்கள்!


23 comments:

  1. //"பெருசு"களின் -
    கவலைகளை -
    மொக்கை வாய் சிரிப்பிலே-
    போக்குவதும்!//

    மொக்கை வாய் சிரிப்பொன்று போதுமே... எதையும் சாதிக்க....

    நல்ல பகிர்வு சீனி. வாழ்த்துகள்.

    வெங்கட்
    புது தில்லி.

    ReplyDelete
  2. அடடா! மிக மிக மிக மிக மிக அருமை நண்பா! எவ்வளவு ரசனையான வரிகள்! விரும்பி படித்தேன் நண்பா! கவிதையின் ஒவ்வொரு வரிகளும் இனித்தது.

    ReplyDelete
  3. மழலைகளே-
    உங்களது அசைவுகளெல்லாம்-
    மொழி பெயர்த்திட முடியாத-
    கவிதைகளாக தெரிகிறீர்கள்!//

    அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varukaikku mikka nantrikal!
      ayya!

      Delete
  4. வார்த்தைகளை பிய்த்து போட்டு அருமையான கவிதைகளை படைத்துக்கொண்டிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. விரும்பி படித்தேன்...ரசித்தேன்...

    ReplyDelete
  6. நிஜம் தான் அண்ணா!அவர்களது சிறு அசைவும் ரசிக்கவைக்கும்! விழிகள் மூடியும் மூடாமலும் தூங்கத்தவிப்பதும், அரைத்தூக்கத்தில் உளருவதும் கொள்ளை அழகு!

    ReplyDelete
    Replies
    1. sako!

      naan ezhuthida ninaithu maranthitta-
      visayam! neengal sonnathil mikka makizhchi!

      nantrikal!

      Delete
  7. நடந்திடும் கவிதை - நன்றாக உள்ளது நண்பரே!

    ReplyDelete
  8. ஒவ்வொரு வரியும் அருமை...
    முடிவில் :
    ///மழலைகளே, உங்களது அசைவுகளெல்லாம், மொழி பெயர்த்திட முடியாத, கவிதைகளாக தெரிகிறீர்கள்...///
    இதற்கு மேல் என்ன வேண்டும்...? சூப்பர்....!

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
  9. உண்மை தான்! குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
    அருமையான கவிதை!!

    ReplyDelete
    Replies
    1. mano..!

      ungal muthal varavukku mikka nantri!

      Delete
  10. நடந்திடும் கவிதை........தவளும் மழலைகளுடன் விளையாடுகிறது நண்பா அருமை

    ReplyDelete
  11. மொழி பெயர்க்க முடியா கவிதைகள்.......அருமை சகோ..

    ReplyDelete
    Replies
    1. satees!

      ungal alavillaa paasathukkum-
      karuthukkum mikka nantri!

      inainthiruppom!

      Delete
  12. வீட்டுக் குழந்தையை விடாமல் ரசித்த அழகு கவிதையில் !

    ReplyDelete