இருக்கும் ஒரு மிடறு-
தண்ணீரை அடுத்தவருக்கும்-
பகிர்ந்து அருந்துபவனுக்கு!
நதி நீரை-
கடலில் விட்டாலும்-
அண்டை மாநிலத்துக்கு-
கொடுக்க மறுக்கும்-
அழிச்சாட்டிய காரர்களுக்கு!
சில பல காரணங்களால்-
பேசாமல் இருந்தும்-
மனதார நேசிப்பவர்களுக்கும்!
வாய் கிழிய வாழ்த்தி விட்டு-
மனதுக்குள்-
புழுங்குபவர்களுக்கு!
அட்டூழியங்கள் செய்து கொண்டு-
ஆட்சி கட்டிலில்-
அலங்கரிப்பவர்களுக்கு!
அநீதி இழைக்கபட்டவன்-
நீதி கிடைக்காமலே-
இறப்பவர்களுக்கு!
அநாதை சொத்தை ஆட்டையவும்-
அவர்கள் சோத்தில் மண்ணள்ளி-
போட்டவர்களுக்கும்!
அனாதைகளிடம்-
ஆதரவாக நடந்தவர்களுக்கும்!
கோள் மூட்டி-
பல உறவுகளை-
பிரித்தவர்களுக்கு!
பிறர் மீது தவறிருந்தும்-
உறவுகள் பிரிந்திட கூடாதுன்னு-
"அதை"தாங்கி கொண்டவர்களுக்கு!
கடன் கேட்கும்போது-
அலையா அலைந்து-
கேட்க போனவனை-
அடிக்க முயல்பவனுக்கு!
வாங்கிய கடனை-
கட்ட முடியலையே-
மனம் குமுறுபவர்களுக்கு!
கட்டியவளை-
கண்ணியத்துடன்-
நடத்துபவர்களுக்கு!
கண்ணியம் எதற்கு-
கட்டியவளுக்கு-என
நடப்பவர்களுக்கு!?
நியாயவான்களுக்கு-
நியாயமும்-
அநியாயகாரனுக்கு-
தண்டனையும்-
கொடுக்க அதிகாரம்-
உலகில் யாருக்கு-
இருக்கு!?
நிச்சயமாக-
சத்தியமாக-
ஒரு நாள்-
படைத்தவனிடம்-
நியாயமான -
தீர்ப்பு இருக்கு!
மாஷா அல்லாஹ்
ReplyDeleteமிக அருமையான கவிதை
இண்ட்லி போன்ற திரட்டிகளில் இணைத்து விடுங்கள் நண்பரே பேஸ்புக்கில் பகிரவா?
ReplyDeleteunadanadi varavirkku !
Deletemikka nantri!
indliyil inaithu vittutten!
face bookkil thaaraalamaaka pakirnthu kollungal!
தினமும் எப்படித்தான் இப்படி அருமையாய் கவிதை எளுதுகிரீர்களோ!
ReplyDeletesuvaduakal!
Deletemika
nantrikal!
அழகு நண்பா.....
ReplyDeleteசாட்டையடி போல் உணரலாம்
அத்தனையும்அருமை!
ReplyDeleteathisaya!
Deletemikka nantri!
சமூக நடவடிக்கைகளை உற்றுப் பார்த்தோமானால் வாழ்வே வெறுக்கும் சிலசமயங்களில் சீனி !
ReplyDeleteசீரிய சிந்தனை.தொடருங்கள் சகோ
ReplyDeletesadigah!
Deletemikka nantri!
sako!
அருமையான வரிகள்...
ReplyDeleteஅநியாயக்காரனுக்கு அவன் மனமே ஒரு நாள் மிகப்பெரிய தண்டனை கொடுக்கும்.
நன்றி...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
balan sir!
Deletemikka nantri!
sir!
நண்பரே... சாட்டையை எடுத்த விட்டீர்களா....?
ReplyDeleteஇந்த அடி அடிக்கிறீங்க....
தொடருங்கள்.... வாழ்த்துக்கள்.
//நிச்சயமாக-
ReplyDeleteசத்தியமாக-
ஒரு நாள்-
படைத்தவனிடம்-
நியாயமான -
தீர்ப்பு இருக்கு!//
நிச்சயம் நல்ல தீர்ப்பு உண்டு! நற்கவிதைக்கு பாராட்டுகள்.