Sunday, 1 July 2012

செஞ்ச பாவம்தான் என்ன...?(1 )



இம்மண்ணில் -
பிறந்ததா!?

இம்மண்ணை -
நேசிப்பதா! ?

எம்மண்ணில் நாம்-
பிறக்கணும் என-
முடிவெடுக்க முடியாததா!?

சிறுபான்மை-
மக்களாக-
இருப்பதா!?

பெரும்பான்மையாக-
சுதந்திரத்திற்காக-
மடிந்ததா!?

ஷாஜகான்-
நாட்டுக்கு தலைநகர்-
டில்லியை உருவாக்கியதா!?

வருமானம் கொட்டும்-
தாஜ் மகாலை-
கட்டியதா!?

ஆட்சி மாறும்போதெல்லாம்-
காட்சி மாறால்-
கொடியேற்ற உதவும்-
செங்கோட்டை அமைத்ததா!?

கப்பம் கட்டிய-
கோழைகளிடையே-
கடும்சினம் கொண்டு-
பகதூர் ஷா-விடுதலைக்காக
வீறுகொண்டதா!?

சிறையில் கிடைக்கையிலே-
தன் தவ புதல்வங்கள்-
தலையை தாம்புலதட்டில்-
கண்டும் கலங்காமல்-
இருந்ததா! ?

போராளிகள் இப்படிதான்-
காட்சி அளிப்பார்கள்-என
அவர் மகிழ்ச்சியுற்றதா!?

மரணதருவாயிலும்-
அடக்கம் செய்ய இந்தியாவில்-
இடம் இல்லையா!?-என
கலங்கியதுவா!?

"அடிபடிந்தவர்களின்"-
வாரிசுகள் - அரசபரம்பரை
என பந்தா செய்வதா!?

பகதூர் ஷாவின் குடும்பம்-
இன்றும் வாடகை வீட்டில்-
இருப்பதா!?

கவச உடைகூட-
அணிய கால அவகாசம்-
எடுத்துகொள்ளாம-"திப்பு"
போராடி மடிந்ததுவா!?

வலிகள்தான்-
எத்தனை!

வலைபதிவு-
உணருமா-!?அந்த
வலிகளை!?

(தொடரும்......)




15 comments:

  1. நீங்கள் கூறும் எதையும் நான் கேள்விபட்டது கூட கிடையாது. கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. seenu!

      thellaam anamathu varalaaruakal!
      melum solkiren!

      nantri!
      vanthathukku!

      Delete
    2. seenu!

      ithellaam namathu varalaarukal!

      melum solkiren!

      nantri vanthathukku!

      Delete
  2. வலிகள்தான்-
    எத்தனை!

    வலைபதிவு-
    உணருமா-!?அந்த
    வலிகளை!?
    ///அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  3. வலிகளின் வலிகளை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  4. புரியுது - தொடருங்கள்

    ReplyDelete
  5. அருமை தொடருங்கள்!

    ReplyDelete
  6. ஆரம்ப வரிகளே சிந்திக்க வேண்டியது....:)

    ReplyDelete
  7. எப்போதும்போல சமூகச் சிந்தனையோடு நல்லதொரு கவிதை.தொடர் கவிதையா சீனி ?

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      nalla irukkiyalaa....?

      ungal varavukkum karuthukkum
      mikka nantri!

      Delete