Wednesday, 18 April 2012

சிசு கொலை...

பொறியும்-
முட்டையும்-
போடும்-
குட்டியும்-
வேண்டும்-
பொட்டைகளாக!

பிறப்பது-
பெண் பிள்ளை-
என்றால்-ஏண்டா
வெறுக்குறோம்-
அறிவு கெட்ட மட்டைகளாக!
---------------------------------------
பெண் என்றால்-
பேயும் இறங்கும்னாங்க!

பெண் குழந்தையினா-
ஏன் பேயா-
மாறுறாங்க!?
----------------
குப்பை கூலமாக்குது
மாடிகளையும்!

சடலங்களாக -
மிதக்க வைக்குது-
ஜாம்பவான்களையும் !

இதன் பேர் -
சுனாமியா?

கரு கலைப்பதும்-
கள்ளி பால்-
கொடுப்பதும்-
பச்சிளம் பூக்களை-
அழிப்பவர்கள்-
சுனாமியின்-
பினாமியா!?
-----------------
கோடி பூக்களையும் -
தோற்க வைக்கும்-
ஒரு மழலையின்-
சிரிப்பு!

அதை கொல்பவன்-
எப்படி ஆவான்-
மனித பிறப்பு!?
-------------------
கொடுபாதாக செயல்-
பூமிக்கு தெரிந்து-
இருக்குமோ!?

அது குலுங்கி அழுவதுதான்-
நில நடுக்கமோ!?
------------------
ஒரு நாளாவது-
வாழுதே-
ஈசல் கூட!

கலைக்க சொல்பவனே-
ஈசலை விட!

பெண் சிசு-
கேவலமாடா!,?
-------------------
இருந்தாங்களே-
நம் முன்னோர்கள்-
குருவி கூட்டை கூட-
கலைக்காம!!

இருக்கிறோமே-
மானுடத்தின்-
மடியான-
பெண் சிசுக்களை-
அழிக்கிறோமே!
-----------------------
இஷ்டப்பட்டு கொடுத்தான்-
குருவுக்கு-
தட்சணையாக!

இப்ப-
கஷ்டபடித்தி -
கேக்குறான் -பள்ளியில
லஞ்சமாக!

அப்போ-
அப்பன் விரும்பி-
செய்தான்-
சீர் செனத்தி!

இப்போ-
சீதனம்-
கேக்குறான்-
மிரட்டி!

அம்மா ! தாயே!-
கேட்பவன்-
பிச்சைகாரனா!,?

அதாட்டியமா-
கேப்பவன்-
மாப்பிள்ளை வீட்டு காரனா!?

இப்பாதக செயலுக்கு-
வரதட்சணையே-
இருக்குது-
முதல் காரணமா!?

வரதாட்சனை-
வாங்குவோம் ஆனால்-
நாம் என்ன ஆண் மகனா!?

திருந்த எண்ணும் மகனையும்-
கட்டாய படித்தும்-
தாய் மார்களே -
நீங்க ஒரு பெண்ணினமா!!?
-------------------------------
ஆணுக்கு பெண் ஆடை!
பெண்ணுக்கு ஆண் ஆடை!
இறைவன் வாக்கு!

பெண்ணெனும் ஆடையை-
கிழித்து (அழித்து)-விட்டு
அம்மணமா-அலையவா-
இந்த போக்கு!?
------------------

20 comments:

 1. அத்தனையும் நறுக்கென்று கேட்கும் கேள்விகள்..
  கணைகளாய் பாயட்டும் இச்சமுதாயத்தில்...

  ReplyDelete
  Replies
  1. makenthiran!

   ungal muthal -
   varavukkum -
   karuthukkum -
   mikka nantri!

   Delete
 2. சவுக்கடி கேள்விகள் ...

  ReplyDelete
  Replies
  1. sasikala!

   ungalukku -
   nantrikal!

   Delete
 3. பெண் சிசு கொலை தற்போது குறைந்துவிட்டாலும் வரதட்சினைதான் கவலையை ஏற்படுத்துகிறது. சமூகத்தை நோக்கிய கேள்விகள். தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. maniyan!

   ungal varavukku mikka nantri!

   Delete
 4. நல்ல கவிதை நண்பா

  ReplyDelete
  Replies
  1. seythali!

   ungal karuthukku-
   mikka nantri!

   enge !?
   poneenga ivvalavu naalaa-
   ungalin karuthukkaaka-
   engiyathu-

   seeniyum-
   kavithaiyum!

   Delete
 5. போட்டு தாக்கிவிட்டீர்களே சாட்டைஅடி கேள்விகள் - திருந்துமா? திருத்துவோமா?

  ReplyDelete
  Replies
  1. mana saatchi!

   neenga vanthathukku
   mikka nantri!0

   Delete
 6. பெண்ணெனும் ஆடையை-
  கிழித்து (அழித்து)-விட்டு
  அம்மணமா-அலையவா-
  இந்த போக்கு!?
  >>>
  செம தாக்கு தாக்கிட்டீங்க. பெண் சிசு வதைக்கு எதிரான உங்கள் கவிதைக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அனல் பறக்கும் கவிதை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ayya!
   ungalukku mikka nantrikal!

   Delete
 8. இந்தக் கவிதைபோலவே நேற்றும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன் சீனி.பெற்ற தகப்பனே 3 மாதப் பெண்குழந்தையை கொலைசெய்ய முயற்சித்திருக்கிறார் !

  ReplyDelete
  Replies
  1. hemaa!
   ungal varavukku-
   mikka nantri!

   Delete
 9. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் பரிந்துரை செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_08.html

  ReplyDelete
 10. bro!

  ungal varavukkum-
  pakirnthathukkum mikka nantri!

  ReplyDelete