Wednesday, 28 December 2011

''அணை''!

அப்ப-
அடிக்கிற கை தான் -
அணைக்கும்பாங்க!

இப்ப-
அணையின் பேரால -
அடிச்சிக்க வக்கிறாங்க!

ஏன் ?-
இந்த மனிதனுக்கு -
இந்த புத்தி !

அதுதான் -
இந்த ஈன புத்தி!

நிலங்களை தான் -
பிரிச்சான்!

நீரையும்ல --
அடைச்சி வச்சிட்டான்!

கடலுல கலக்க -
போற -
நதிய!

நடுவுல தடுத்தா-
என்ன முறை!

தண்ணியை -
''சேர்த்து ''வைக்க தான் -
அணையே!

''சேர்ந்து''இருந்த -
மக்களை!-
பிரிக்க இல்லையே!

கர்நாடக -
காவேரி ஆறு!

ஆந்திரா -
பாலாறு!

கேரளா-
முல்லை பெரியாறு!

தமிழ் நாட்டுக்கு-
ஏன் கொடுக்குறீங்க -
தகராறு!

உலகில் உள்ளவர்கள் -
எல்லாம் ஒரே குடும்பம்தான்!

இதுல எதுக்கு -
கலவரம் தான்!

உலகில் எங்கோ -
இயற்கை சீற்றம் என்றால்-
ஓடி உதவும் நாம்!

ஒரு நாட்டுக்குள்ள -
வீண் பீதியை கிளப்பலாமா!?

மனிதன் -
மன கணக்கு!
பெரும்பாலும் ஆகிடும் -
தப்பு கணக்கு!

அதுக்கு மேல -
''ஒருவனிடம்' -
ஒரு கணக்கு-
இருக்கு!

நாட்டுக்கே பேராபத்து-
மக்கள் தொகையினு-
சொன்னாங்க!

உலகில் ''வளருற '-
நாடுகள் இந்தியாவும்-
சீனாவும்னு -
சொல்றாங்க!

நீயும் -
நானும் -
பிறக்கையில
செலவுக்கு -
கொண்டு வந்தோமா!?
பணங்களை!

உலகில் தான் -
தேடியது - என்பது பொய்யில்லையே!

வெறும் வலையோட -
போற மீனவனும்!

வெறும் வயிரோட -
போற பறவையும் !

''மடி''நிரம்பி திரும்புதே-
அது யாராலே!

அனைத்து உயிருக்கும் -
உணவளிக்க ''ஒருவன்'' -
இருப்பதை மறவாதே!

''படைத்தவன்'' -பகிர்ந்து
அளிப்பவன்!

அவனின் அருளை -
தனக்கு மட்டும் வைத்து-
கொள்பவன் -
"மகா கொடியவன்''!

மெதுவா...

தினம் தான்-
கழுவுகிறாய்-
பாத்திரங்களை!

கோதி விட்டு கொள்கிறாய்-
முகத்தில் ஆடும் -
நெத்தி முடியை!

லாவகமாக -
சொருகிகொள்கிராய்-
காதுகளுக்கு இடையே!

மீண்டும் முகத்தில் -
முடி விழுவதும் -
நீ கோதி விடுவதும் -
தொடர்கிறதே!

அதே போல் தான் -
என் மனசும் உசுரும் -
உன்னை சுத்தி வருவதை -
எப்போது உணர்வாய்!

Monday, 26 December 2011

சகோதரிகளே.....

சந்தி சிரிக்க-
வைக்கிறாய்ங்க-
அந்தரங்கங்களை!

''ஒளி '' பதிவு செய்திட -
துடிக்கிறாங்க -
அந்தரங்கங்களை !

தெருவுக்கு அடிச்சி -
இழுத்துட்டு வருவான்-
''உறவு '' கொள்ளும்-
நாய்களை!

தெருவுல போட்டு -
விக்கிறான் -''உறவு'' கொள்ளும்
பட காட்சிகளை!

இன்றைய உலகின் -
பெரிய பிரச்னை எது!?

சரி எது -
தவறு எது-
விளங்காதது!

ஆடை அலங்கார -
விளம்பரத்துக்கும்!

வருவாள் குறைச்சல் -
இல்லாமல் -
அலங்கோலத்துக்கு!

மானம் காக்க தானே-
ஆடை!

அதை முழுசா போட்டா-
என்ன பிழை!

ஆடை குறைப்பால் -
தெரிவது தேகங்கள் தான்!

அவர்களின் அறிவும் -
திறமையும் அல்ல!

''படுக்கை அறை''-
வரை வந்து விட்டது -
ஆபத்து!

''மத்த 'இடங்களில் -
என்னாகும் என்று -
எப்படி சொல்வது!

பெண்களின் உரிமை -
பாதுகாக்க-
எத்தனை தண்டனைகள்!
எத்தனை வழி முறைகள்!

அதெல்லாம் தடுத்து-
விட்டதா -பெண்களுக்கு
எதிரான வன்முறையை!

படம் எடுப்பான் -
பெண்ணுரிமை ஓங்குக -
என்று!

'ஒழுங்கான ''ஆடை போட்டு-
எத்தனை பேர் -
நடிக்க வைக்கிறாங்க !

ஆட விடுறான்-
''லோ -கிப்புல''!

மானம் மரியாதை-
போயிருச்சி ''லோ''உல!

கதாநாயகன் தேடுவான்-
கலாசார மிக்க -
வாழ்கை துணையை!

பாடல் காட்சியில் -
ஆட விடுவான் -
உள்ளாடையுட!

சினிமா-
மோகத்துல போனா!

அவங்க சீரழிஞ்சி -
போனா!?

கற்பு என்பது -
கண்ணியம் கொண்டது!

ஆகி விட்டதோ-
கடை சரக்கா!?

கண்ணியம் காப்பது தானே-
ஆடை!

அதை குறைக்கும் என்றால்-
அதன் பேர் இல்ல -
ஆடை!

வெள்ளம் வருவதுக்கு-
முன்னால் தடுத்து கொள்ளுங்கள்!

உங்களை ஒளி பதிவு -
செய்யும் முன் மானத்தை -
காத்து கொள்ளுங்கள்!

எடுபடுமா?-
என் பேச்சு -தெரியல!

''பெண்களுக்கு ஆபத்து'--என
செய்தி படிச்சேன்-
பத்திரிக்கையில!

முக நூல்! [பேஷ் புக்]!

உதவியது-
நட்பு வட்டாரம்-
விரிவடைய!

தவறியது-
கிட்ட இருக்கும்-
நட்புகளை-
 இணைத்து விட!

எட்ட இருப்பவர்களுக்கு-
குறுந்தகவல் அனுப்பி -
கொண்டே!

ஆகிவிட்டோம்-
பக்கத்தில்-
 இருப்பவர்களை-
மறந்துகொண்டே !

Saturday, 24 December 2011

இது நியாயமா!?


அரசு அனுமதி பெற்ற-
''இடம்'' தான்!

படித்த என் மகன்-
அங்கு வேலைக்கு-
போவது பிடிக்கவில்லை-
எனக்கு தான்!

என்னை தான் -
இந்த ஊர் -
தூற்றியது -
''சாராய -
வியாபாரி''-என!

என் மகனையும்-
தூற்றனுமா!?-
"தண்ணி " விக்கிறவன்-
என!

நான்-
காய்ச்சி -
வித்த போது!-
துரத்தி பிடித்த -
காவல் துறை!

தெரு தெருவுக்கு-
''மது 'விக்க மட்டும் -
அனுமதித்தது-
என்ன-
முறை!?

''குடிசை தொழில்''-
செய்த-
எனக்கு லத்தி அடி-
கிடைச்சது!

''கட்டடத்துல ''-
தொழில் செய்றவங்களுக்கு- மரியாதை
கிடைக்குது!

''சில்லறை'' வியாபாரத்துக்கு -
தடையாம்!?

''மொத்த வியாபாரத்துக்கு-''-
அனுமதியாம்!?

இது என்ன !?-
கொடுமைங்கய்யா!?

விஷ சாராயத்தால்-
பலர் சாவாம்!

இங்க்லீஷ் பேர் -
வச்சத குடிச்சா-
ஆரோக்கியமா!?

''சாராய விக்கிரியே''-
உனக்கு வெட்கம் இல்ல-
என -கேட்ட -
ஊர் பெருசுகளே!

இப்ப -
டெண்டர் எடுக்க -
வரிசை கட்டி-
 நிக்கிறீங்களே-
உங்களுக்கு -
அறிவு இல்ல!?

நான் திருந்திட்டேன்!
தொழிலை விட்டுட்டேன்!

அயோக்கிய தொழிலை -
விட்டுட்டேன்!
அயோக்கியன் என்கிற பேர்-
என்னை இன்னும் விடல!

சொல்லுங்க நீங்களே!

யோக்கியனு பேர்ல-
''பார்''நடத்துறவங்கள-
என்னனு -
-சொல்ல!?

Thursday, 22 December 2011

முடியல...

வெண்ணிலவை-
ரசிக்க தெரிந்த -
எனக்கு-!
தொட்டு விட-
முடியல !

என் பெண்ணிலவை!-
கவிதையில் -
வடிக்க தெரிந்த -
எனக்கு-
காதலை சொல்ல-
முடியல!

டாஸ்மாக்கின் சாதனை!

அன்று-
இந்திய குடிமகன்!

இன்று-
''குடி'' மகனான -
இந்தியன்!

இரண்டும் ஒண்ணுதான்!

கடலும்-
காதலும்-
ஒண்ணுதான்!

ஒரு குவளை தண்ணீர்-
அருந்த முடியவில்லை!-
தாகத்தில் இருப்பவனுக்கு!-
கடல்!

எவ்வளவு காதல்-
தன்னுள் இருந்த போதும்-
ஒரு ஏழைக்கு -
கிடைப்பதில்லை-
காதல்!

பார்க்க....

தவமாக -
இருந்தேன்-
உன்னை காண!

''தாகமாக-''
இருக்கிறேன்-
உன்னை கண்ட -
பின்னே!

Sunday, 18 December 2011

ஒன்றிணைவோம்.....

எனதருமை -
சமூகமே!


கருப்பு-
-வெளுப்பு-
இனங்களை -
இணைத்தது!

ஆண்டான்-
அடிமை-
முறையை-
ஒழித்தது!

உயிர் -
உள்ளவர்கள் -
தானா!?-
பெண்கள் -
சந்தேகமாக!
இருந்தது -
மடமைகாலம்!

அக்காலத்திலேயே!
பெண்ணுக்கு -
உரிமை -
வழங்கியது !

ஓடி -
ஒளிந்தார்கள்-
பெண்குழந்தை-
 பிறந்தால்!

அவர்களையே-
எண்ணவைத்தது-
பெண் குழந்தை-
 பிறந்தது-
தன் பாக்கியத்தால்!-
என!

பதினெட்டாம் -
நூற்றாண்டில்தான்-
பெண்ணுக்கு -
ஓட்டு உரிமை -
கிடைத்தது!

ஆயிரம் -
வருடங்களுக்கு-
முன்னாலேயே-
சொத்துரிமை-
வழங்கியது!

மண்ணை -
ஆள்வதற்கு-
முன்னால்-
மக்களின்
மனங்களை -
ஆண்டது!

கிழக்கையும்-
மேற்கையும் -
சமாதானத்தால்-
இணைத்தது!

இதெல்லாம் -
எது-!?
இஸ்லாம் -
அல்லாமல்-
வேறேது!?

இஸ்லாமிய -
தம்பதிக்கு-
பிறந்து விட்டால் !-
பெற்று
விட்டோமா!?-
பெரும் பேறு!

நாம் என்ன -
செய்தோம்
மார்க்கத்திற்கு -
கைம்மாறு!

பிரிந்த -
உறவுகளையும்-
உடைந்த -
உள்ளங்களையும்-
இணைத்தது-
இஸ்லாம்!

இணைந்து -
வாழ சொல்கிற-
இஸ்லாமிய -
கொள்கையை -
வைத்து கொண்டு!

பிரிந்து-
 போகலாமா!?-
கருத்து வேறுபாடு -
பட்டு கொண்டு!

மார்க்கம் -
என்பது-
கண்ணாடியை -
போன்றது!

அதன் முன் --
எப்படி காட்சி -
அளிக்கிறோமோ-
அப்படிதான் -
காட்டும்!

தன் குடும்ப -
தவறை-
ஒலி -
பெருக்கியில் -
முழங்கமாட்டான்-
எவனும்!

மாசு மறுவற்ற -
மார்க்கத்தை -
மாசு படிய பேச -
அனுமதித்தவன்-
யார்!?

இறைவன் -
சொல்கிறான் -
''ஒரே ஆண் -
பெண்ணிலிருந்து-
படைத்ததாக -
உலகில் உள்ள-
அனைவரையும்!

இன்னும் -
சொல்கிறான்!
உடல் உறுப்புகளை -
போன்றவர்கள் -
ஈமான்-
கொண்டவர்கள்-
 என்றும்!

பங்காளி -
பிரச்சனையை -
பேசி தீர்க்கலாம்!

உறுப்புகளுக்கு -
இடையே-
பிரச்சனையானால்-
எப்படி-
பேசி தீர்க்க!?

''கூடுதல்''-
 விசயங்களுக்காக -
ஏன் இந்த-
 ஊடல்!?

துளிகள் பல -
இணைந்தால்தான்-
கடலெனும் -
சமுத்திரம்!

ஒவ்வொரு -
துளியாக -
பிரிந்தால் -
அதுவே-
அழியும்!

ஒன்றிணைந்தால் தான் -
சமூகம் படைக்கும் -
சரித்திரம்!

பிளவு பட்டால் -
அதுவே தரித்திரம்!

மேடை -
பேச்சாளர்களே!
முடிந்தால்-
ஒற்றுமை எனும்-
கட்டிடத்தின் பக்கம் -
அழையுங்கள் -
மக்களை!

இல்லைஎன்றால்-
ஒற்றுமை எனும்-
கட்டிடத்தை-
 உடைக்க -
வீசாதீர்கள் -
பேச்சு-
என்ற -
கடப்பாறையை!

பார்ப்பதெல்லாம்-
மஞ்சளாக -
தெரியும் -
மஞ்சள் -
காமாலைகாரனுக்கு!

அது உலகின் -
தவறல்ல!

அவன் -
கண்ணின்-
கோளாறு!

''கருத்து வேறுபாடு -
வந்தால்-இறைவனிடமும்
தூதரிடமும் -ஒப்படைத்து
விடுங்கள்--இது இறைமறை!

இறைவன் கட்டளைக்கு-
கட்டுபடுவோம்!
அதுக்காக -
ஒன்றிணைவோம்!

நம்மால் -
இஸ்லாத்திற்கு-
ஒரு லாபமும் இல்ல!

இஸ்லாத்தால்தான்-
நாம் அடைந்த பயன்-
கொஞ்சம் அல்ல!

அழித்து இருக்கிறான் -
இறைவன்-
மாறு செய்த-
மக்களை!

உருவாக்கியும் -
இருக்கிறான்-
இறைவன்-
அவனுக்கு -
கட்டு பட்டு-
நடக்கும்-
மறு சமூகத்தை!

நமக்கு-
மங்கோலியர்கள்-
தெரியும்!

மொகலாய-
 மன்னர்கள் -
தெரியும்!

ஆனால்-
மங்கோலியர்கள் -
வம்சத்தில்தான் -
மொகலாய மன்னர்கள்
-வந்தார்கள்-என
எத்தனை பேருக்கு -
தெரியும்!?

வாழ்வு எனும் -
வெள்ளத்தில் -
ஒற்றுமை
எனும் கயிற்றை-
பிடித்தால் -
நாம்-
வாழலாம்!

இல்லைஎன்றால்-
நாதியற்று-
 பிணமாகலாம்!

உங்களுக்கு-
எது தேவை!

வேற்றுமையா!?-
ஒற்றுமையா!?

Friday, 16 December 2011

''ஜி''!

ஆங்கிலேயனுக்கு-
அலர்''ஜி''!

காந்தி''ஜி''!
ஜின்னா''ஜி''!
நேதா''ஜி''!-இந்த
3 ''ஜி'' களால்!

இன்றைய தலைவர்களுக்கு-
அலர்''ஜி''!
2 '' ஜி'' யால்!

ஏன் -கேடு!

என் தமிழ் நாடே!-
உனக்கு-
ஏன் -
இந்த கேடே!

திறக்க மறுக்கும்-
அணைகளால்-
பஞ்ச காடாகிறாய்!

திறந்தே இருக்கும்-
''தண்ணி''கடையால்-
சுடுகாடாய் -
ஆகிறாயே!

Thursday, 15 December 2011

லட்சிய வாதியே!

லட்சியம் -
கொண்டவனே!
அலட்சியம் -
கொள்ளாதவனே!

நீ-
இல்லை-
ஊதினால் -
அணையும் -
மெழுகு வர்த்தி!

காட்டையே ஒரு -
கை பார்க்கும் -
காட்டு தீ!

குமுறி கொண்டிருக்கும் -
எரிமலைக்கு-
முன்னால்-
குறை சொல்பவர்கள் -
எத்தனை நாளைக்கு!?

பாய்ந்து செல்லும்-
நதிக்கு !-
தடை ஏற்படுத்த-
தைரியம் இருக்குமா!?-
பாறைக்கு!?

நீயும்-
அப்படி தானே!

இகழ்பவர்கள் -
முன்னால்-
வாய் இளிசிட மாட்டாய்!

புகழ்பவர்கள்-
சொல்லில்-
புதைந்திட மாட்டாய்!

நீதிக்காக -
முடிந்ததையும் -
செய்வாய்!

முடியாததையும் -
செய்ய-
முயற்சிப்பாய்!

லட்சியம் -
ஜெயிக்க-
''மட்டும்''-
விரும்ப மாட்டாய்!

லட்சியம் ஜெயிக்கும் -
வரை விடமாட்டாய்!

மண்ணை விட்டு -
பிரிந்து இருக்கலாம்-
லட்சிய வாதிகள்!

உலகை விட்டு-
போனதில்லை -
இலட்சியங்கள்!

இன்றைய நிகழ்வு-
நாளைய வரலாறு!

இன்றைய லட்சியவாதிகள்-
நாளைய சரித்திரங்கள்!

இதெல்லாம் முடியுமா!?-என
சிலர் பேசலாம்-
எகத்தாளமாக!

நியாயம் வெல்லும் வரை-
தொடரும் -
இவர்களின்-
போராட்ட களம்!

அவதூறுகளை -
வீசலாம்-
குப்பைகளாக!

லட்சியவாதிகள்-
நெருப்பை போல!

நெருப்பை -
குப்பை '-
மூடிக்கொள்வதாக-
தெரியும்!

குப்பைகளை -
எரித்து விட்டு -
நெருப்பு-
வெளியே வந்தே தீரும்!

'மத வெறியன்''-
என்றார்கள் -
வீரன் திப்புவை!

உண்மை உலகிற்கு -
தெரிய வந்தது-
அவர் மேல்-
அது இட்டு கட்டு-
என்று!

நம் முன்னோர்கள்-
வாழவில்லை-
செம்மண் சகதியாக!

வாழ்ந்தார்கள்-
செங்கோட்டையில் -
சிங்கங்களாக!

நாம பொறந்த -
மண்!

நாம ஆண்ட-
மண்!

தலை நகரம் -
டெல்லி!

கொஞ்சம் -
கொஞ்சமாக-
அரிக்குது-ஊழல்
எலி!

ஆட்சியை நமதாக்குவோம்!
நாட்டை பொதுவாக்குவோம்!

எஸ்.டி.பி.ஐ. இல் இணைவோம்!இதனை
ஒரே குரலில் முழங்குவோம்!

Wednesday, 14 December 2011

பார்வை!

பூக்களுக்குள்-
ஆயுதமா!?
ஆயுதம் போல்-
தெரியும் பூவா?

புரியாத-
இலக்கணமா!?-
புரியும் -
கவிதையா!?

சஞ்சல படுத்தும்-
சல்லாபமா!?-
சாந்தம் தரும் -
சந்தனமா!?

பனி காலத்தில் -
நெருப்பா!?-நெருப்பாக
கொட்டும் ஆலங்கட்டியா!?

காலையில் வாசம் -
வீசும் ''தாளிப்பா?-
தாளிப்பால் கூடும்-
பசியா!?

குளிர்விக்கும் -
குற்றாலமா!?-
குற்றாலத்தையே-
காய வைக்கும் -
கோடையா!?

பறவை -தேடும்
உணவா!?-
பறவைக்காக-காத்திருக்கும்
உணவா!?

நீர் தேடும்-
ஆணி வேறா!?-என் வாழ்வின்
தேடல் தான்-உன் பார்வையா!?

பதில் தேடுகிறேன் -உன்
ஒத்த பார்வைக்காக!

இத்தனை வார்த்தை -
வந்து விட்டது -
வரிவரியாக!

தமிழுக்கு-
பஞ்சமில்லை தான்!

எனக்கு தான்-
அறிவு கொஞ்சம் ''கூட ''-
இல்லை!

மாத்தி யோசி!

இளமையில் ''கல்''-
முது மொழி!

இளமையில் ''கள்''-
டாஸ் மாக்கின் புது மொழி!

முரண் பாடு...

திரையரங்கை-
எரிச்சிடவா?-
கிழித்து விட்டதே-
ஆணி-உன் காலை
அல்லவா!?-
வீர வசனம்-
காதலிக்கும் போது!

எரிஞ்சி விழுந்ததது-
வார்த்தை!

பார்த்து வர-
வேண்டியது தானே-
கழுதை!கழுதை!!-
திருமணம் ஆகி -
சில மாதங்களே-ஆனா போது!

Monday, 12 December 2011

தேசிய நெடுஞ்சாலை!

வெட்ட பட்ட-
மரங்கள்-
சாலை வசதிக்காக!

நாளைய -
தலை முறைக்கு-
காற்று- இல்லாமல்
ஆக்கிட்டோம் -
சுவாசிக்க!

விரிவான-
பயணத்திற்கு-
தயாராகிட்டோம்!

சந்ததிகளை -
''திரும்பா பயணத்திற்கு''-
உருவாக்கிட்டோம்!

கிராமம்!

அடையாளங்கள்-
அனைத்தையும்-
இழந்து விட்டு!

பேருந்து நிலைய-
பலகையில்-மட்டும்
இருக்கிறது-
''கிராமம்' என்ற ,-
அடையாளம்!

திரும்புதல்!

எங்கு புறப்படிகிறதோ-
அங்கே சேரும்-
நகர பேருந்து!

நாமளும் -
அப்படிதான்-

மண்ணுல வளருரத -
சாப்பிட்டு-

பின்னால் -
மண்ணு நம்மள -
சாப்பிடுது-!

உணர்ந்து வாழ தான்-
மறந்துட்டோம்!

Friday, 9 December 2011

ஓடி போலாமா.....?

பரிதவிப்பார்கள்-
பார்வைகளுக்காக!

பாதி உலகை-
ஆள்வதாக-
எண்ணி கொள்வார்கள்!

பார்வைகள்-
பார்த்து கொண்டாலே!

கால் தூசாக -
தோணும்-
பணம் -
காசெல்லாமே!

காதலை -
எதிர்ப்பவள்!

நஞ்சை கொடுத்தவள்-
போல் -
தெரிவாள்!

நெஞ்சுல பால-
கொடுத்தவளும்!

உதறிட சொல்லும்-
ஊர் உலகையும்!

காதலே-
உலகமாக-
தோணும்!

அட்டை கத்திகளுக்கு-
அரண்டது போக-!

அரிவாளையும்-
முத்தமிட செய்யும்!

உதவுபவர்கள்-
மட்டும் -
தெரிவார்கள்-
உத்தமர்களாக!

எதிர்ப்பவர்களோ-
தெரிவார்கள்-
பரம எதிரியாக!

கனவுகள் வரும்-
கண்ணை-
முழித்து கொண்டு-
இருக்கையிலேயே!

காதலிப்பவர்கள்தான்-
வருவார்கள்-
அந்த-
கனவிலும் கூட!

காதல்-
அடி முட்டாளையும்-
அறிவாளியாக்கும்!

அறிவாளியையும் -
அடி முட்டாளாக்கும்!

முகம் பாக்குற -
கண்ணாடியும்!

ஒருவரை ஒருவர்-
முகம் பார்த்து கொள்ளும் வரை-
இருக்கும்-
முன்னாடியே!

இத்தனை -
வருட -
வாழ்வும்!

நேசிப்பவர்கள்-
ஒத்த வார்த்தையில் கூட -
வீழும்!

காதல் -
காவியம் படைத்ததுண்டு!

கல்லறைகளையும்-
தந்ததுண்டு!

நமக்கு-
காவியம்-
படிக்க -
தெரிந்ததே-
ஒழிய!

கல்லறையின்-
கதறல்கள்-
கேட்பதில்லை!

வரமாக-
தெரிந்த -
காதலும்!

பாரமாக-
 தெரியும்-
அதே காதல்!

உயிர் காதல் என்று -
ஓடி விடுவார்கள்-
ஊரை விட்டு!

ஒரு உயிரை --
வயித்துல கொடுத்துட்டு-
ஓடிடுவான்-
அவளை விட்டு!

எண்ண வேண்டாம்-
கொச்சையாக எழுதுவதாக!

பச்சை உண்மை -
அதுதான்!

விவாகரத்து -
வழக்குல!

எழுபத்தஞ்சு சதவிகிதம்-
காதல் திருமணத்துல!

வந்த வழக்கு-
இத்தனை!

வராத வழக்கு-
எத்தனையோ!

உங்களுக்கு-
தெரியுமா!

கூட்டி கொண்டு போய்-
குடும்பம் நடத்துவது -
எத்தனை ?

அநாதை பிணங்கள்-
எத்தனை!?

அலற -அலற -
கைவிட பட்ட-
குப்பை தொட்டி -
குழந்தைகள் -
எத்தனை எத்தனையோ!

நடக்குது இங்கே!

ஓடி போன ஆண்மகன்-
திரும்பி வந்தால் -
வீட்டோட -
சேர்த்து கொள்வதும்!

பெண் மகள்-
திரும்பி வந்தால்-
வீட்டோட சேர்ந்து -
"கொல்வதும்!"

காதல் என்பது-
சரியா?தவறா?-
என்பது கேள்வி அல்ல!

காமத்துக்காக-
காதல் எனும் -
வார்த்தயை பயன்படுத்துகிறார்கள்-
என்பதும் பொய்யல்ல!

எச்சரிக்கையாக இருங்கள்!

காட்டில் இருப்பது-
குள்ள நரிகள்!

நாட்டுக்குள்ளே-
இருக்கிறார்கள்-
காம வெறிநாய்கள்!

மப்பு.....

ஊத்துறான்-
வாயில-
பிராந்தியை!

வயிறே-
வெளியே-
தள்ளுது -
வாந்தியாக!

தினமும்-
குடிக்கத்தான் செய்கிறான்-
மனிதன்-
''மதி' கெட்டவனாக!

சேட்டைகள்!

குழந்தைகளின்-
சேட்டைகள்!

நாம்-
படிக்க தவறிய-
கவிதைகள்!

Wednesday, 7 December 2011

என் வீடு!

அன்று-
தேவையில்லாததை-
சேர்த்து -
வைக்கும்-
இடமாக-
 இருந்தது!

இன்று-
தேவதைகளின் -
கூடாரமானது-
என் மகள்கள் -
பிறந்ததும்!

சேர்ந்தால்தான்.....

கணவன்
+
மனைவி
=குழந்தை!

ஹை
+
கூ
=கவிதை!

சேர்ந்து-
 வாழ்வதில்தான் -
வாழ்வு -
அர்த்தபடுகிறது!

என்ன ?கொடுமைடா!

வாழ உரிமை -
கேட்டால்-
அத்து மீறல் -என
வழக்கு பாயுது!

தற்கொலை பண்ணி -
சாக-
போறவன் -
மேலேயும்-
''தற்கொலை' முயற்சின்னு-
வழக்கு பாயுது!!

Tuesday, 6 December 2011

பொஞ்சா''தீ'''..!

வீட்டுக்கு -
வெளிச்சம் தரும்-
ஜோ''தீ''!

வாய்!

ஆசன வாய் -
போல!

நாற்றம் வருது-


உணவு உட்கொள்ளும் -
வாய்ல!

உபயம்-
பீடி,சிகரெட்!

கனவு!

தூங்கினால் போதும்-
கனவு வர!

தூக்கத்தை இழக்க-
வேண்டியுள்ளது-
''கனவு''களை-
நனவாக்க!

முன் கூட்டியே...!

ஒரு நாளைக்கு-
நூறு முறை-
சிரிக்குதாம்-
குழந்தைகள்!

தெரிந்து இருக்கிறது-
குழந்தைகளுக்கு!

பின்னாட்களில்-
சிரிப்பதற்கு-
இந்த உலகம்-
வாய்ப்பு -
தராது-என்று!

கல்லூரி மாணவர்களே....!

படித்து-
கிழிகிறதா..!?

பரீட்சைக்கு-
கிழிக்கபடுகிறதா!?-
உங்கள்-
புத்தகங்கள்!

தயாராக இருங்கள்!

உங்கள் -கல்லூரி
வாழ்க்கைக்கு -
பிறகு!

நீங்கள் -
சாதிக்கும் வரை!

கடும் சொற்களால் -
உங்களை கிழித்து -
எறிய காத்து இருக்கிறது-
இந்த-
உலகம்!

Monday, 5 December 2011

என் நாட்ல.......

முக்கால் பாகம்-
தண்ணீர்!

ஒரு பாகம் தான்-
தரை!

இது தான்!-
உலகம்!

மூன்று பக்கம்-
கடல் அலை!

தலயில -
பனி மலை!

இது தான் -
என் தேசம்!

இல்லாத வளங்களில்லை-
என் நாட்ல!

இல்லாதவங்களும் -
அதிகம் உள்ளது -
என் நாட்ல!

அகிம்சை போதித்தவரும் -
உண்டு!

அகிம்சையை கொன்றவனும் -
கொடுமைக்கார கோட்சேயும்-
உண்டு!

ஆயுதம் வேண்டாம் -
என்றவருக்கு!

முடிவு கட்டி விட்டது-
துப்பாக்கி குண்டு!

நாட்டின் முதுகெழும்பு-
விவசாயம் என்றார் -
காந்தி-
அந்நாளில்!

அந்நிய செலவாணி-
பெயரில் களவாணிகளை-
தருவிப்பவர்கள்-
ஆளுகிறார்கள்-
இந்நாளில்!

எத்தனை மொழி-
எத்தனை இனம்-
அதனால்தான் -
என் நாட்டுக்கு!

துணை கண்டம்-
என்ற பேர் -
இருக்கு!

வந்தாரை வாழ வை-என்ற
தத்துவமும் உண்டு!

பக்கத்து மாநிலத்துக்கு-
தண்ணி தராத -
கேவலமும் உண்டு!

அடச்சி வச்ச -
அரிசியை -
எலி தின்னுது-
ஏழைக்கு எடுத்து கொடு-
என்றது -
நீதி மன்றம்!

உன் வேலையை பாரு -
என்கிறது!-
நாடாளு மன்றம்!

பெண்களை-
 புனிதமா -
பேசுவாங்க!

மணிக்கு ஒரு கற்பழிப்பு-
நடக்குதுங்க!

பொருளாதாரம் உயர்தாம்-
சதவிகித கணக்குல!

இட ஒதுக்கீடு கொடுக்க -
மாட்டேன்கிறார்கள்-
சதவிகித அடிப்படையில!

உலக யுத்தம் -
நடக்கையில !-
அணிசேரா கொள்கை -
கொண்டது -
என் நாடு!

இப்போதோ -
அந்நிய கொள்கையை -நிறைவேற்றுவதுதான்-
என் நாடு!

ஹசரத் மகலும்-
ஜான்சி ராணியும்-
ஆட்சியில் இருந்து -
நாட்டுக்காக போராடி-
உயிரையே இழந்தாங்க!

ஆட்சியில உள்ளவங்களோ -
வழக்கு விசாரணையவே -
இழுத்து அடிக்கிறாங்க!

வெள்ளையன் -
வருகைக்கு முன்னால்-
நாட்டில் மன்னராட்சி!

அவன் வந்த பின் -
நடந்தது -
அடிமை ஆட்சி!

ஹைதர் அலியும்-
கட்டபொம்மனும்-
போராடியது-
வீர வரலாறு!

இப்ப ஆளுரவங்களை-
ஒத்த வரியில சொல்லிடலாம்-
''படா பேஜாரு''!

இனி ஆட்சியையும்-
மாறனும்!

மக்கள் அவலகாட்சியும்-
மாறனும்!

அதற்கு-
மக்களும்-
மாறனும்!

நல்லவர்கள் கையில்-
 ஆட்சி வரணும்!

நல்லா இழு!

உனக்குள்ளே !
என்னை -
புதைக்கிறாய்!

மண்ணுக்குள்ளே!
உன்னை -
புதைப்பேன்!

பிடிவாதத்துடன்-
விரலுக்கிடையில்-
புகைந்து கொண்டிருக்கும்-
''பீடி''!

தேவதாஸ்கள்!

அன்று-
நாயோட-
அலைஞ்சவன்!

இன்று-
கையில போனோட -
அலையிறவன்!

டிப்ஸ்!

டிப்ஸாக தரும்-
பணத்தை மனம் -
விரும்பவில்லை!

சாப்பிடுவதையும்-
தன் குழந்தையும்-
பணி பெண்ணை -
''பார்க்க ''வைத்து-
சாப்பிட்டதால்......!

குளியல்!

குளிக்கிறதும்-
குளிக்கிறவங்களையும்-
பிடிக்காது-
இது வரை!

தினம்தோறும்-
''என்னவள்''-குளிப்பது
தெரியும் வரை!

Friday, 2 December 2011

துப்பட்டா!செருப்பு-
கால்ல !

லோலாக்கு-
காதுல!

கண்ணாடி -
கண்ணுல!

சுடிதார் துப்பட்டா-
ஏன் மறைக்க -
வேண்டியதை -
மறைக்கிறது1
இல்ல!

''காரி' துப்பட்டா -என
நினைக்குது !

இடுப்புல தொங்கும் -
துப்பாட்டா!

பெண் மனசு!


இனிமையானவனே!
என் இளமைக்கு-
இனிதானவனே!

எவ்வளவு காலத்துக்குத்தான் -
என்னை பார்த்து கொண்டே-
இருப்பாய்!

உன் நேசத்தை -
எப்போது-
எனக்கு -
தெரிவிப்பாய்!

புரிந்து கொள்ள -
மாட்டாயா!? -
என்-
ஜன்னலோர -
சாடையை!

உன்னை-
 பார்க்க தானே-
இன்னும்-
 ''சீவி'' முடியாமல்-
இருக்கிறேன்-
 சடையை!

ஆண்களோட காதல் -
கோலத்தை போல!

காத்துக்கோ-
மழைக்கோ -
தாங்குறது -
இல்ல!

பெண்களோட காதல்-
கல்லுல எழுதுன -
எழுத்தை போல!

கல்லே உடைந்தாலும்-
எழுத்து அழியிறது -
இல்ல!

மழையை எதிர்பார்க்கும்-
பாலை வனம் -
அங்கே!

மனதில் உள்ளதை-
சொல்ல மாட்டாயா!?-
என ஏங்கும்-
''பாவை மனம்''-
இங்கே!

ஒன்னுக்கு மேல -
காதலிச்சா-
ஆண்கள் -
மன்மத குஞ்சு!

ஏறடுத்து பார்த்தாலே-
எங்களுக்கு-
கேவலமான -பேச்சு!

சொல்லிவிட வேண்டுமா!?-
காதலை -
நானாக!

பூக்கள் பூக்கிறதை-
புரிந்து கொள்கிறதே-
வண்டுகள் -
தானாக!

உன் நேசத்தை -
சொல்ல -
துணிவில்லாதவனே!

என் அப்பனின் -
''விருமாண்டி''மீசைக்கு-
நீ !
என்ன -
பயபடாதவனா!?

நீயோ!
காப்பாத்த-
நினைக்கிறே-
உன் தாயோட-
''வாக்கை''!

எனது மௌனமோ -
என் குடும்ப மானத்தை -
காக்க!

சரிபடாது -
இந்த காதல்-
எனக்கு!

உன் நிலைமையும் -
புரிந்து விட்டது -
எனக்கு!

மழை தயாள-
மனம் கொண்டது!

அதனால்தான் -
கடலிலும் -
கொஞ்சம்-
கொட்டுது!

காதலும் -
அப்படித்தானோ!

இணைந்திட-
முடியாதவர்களுக்கும் -
கொஞ்சம் -
வருதோ!?

தா [டா]ஸ்ஸ்!காதலால் -
கெட்டு அலைஞ்சான்-
தேவதாஸ்!

நாட்டையே -
கேடு கெட்டு-
அலைய வைக்குது-
''டாஸ் மாக்!''

Thursday, 1 December 2011

புயல்!வானிலை அறிக்கை -
பொய் சொல்லுது!

வங்க கடலில் -
புயல் மையம் கொண்டுள்ளதாக-
சொல்கிறது!

என் அழகு ''புயல்'-
என் ஊர்ல குடிகொண்டு -
இருப்பதை-
சொல்ல மாட்டேங்குதே!

ஓட்டம் !

உயிரணு -
வருது-
கோடி!

கர்பபையைஅடையுது-
ஒன்னே ஒன்னு -
ஓடி!


கருவிலேயே -
ஓடி இடத்தை பிடித்தவர்கள் -
நாம!

கலிவுலகில்-
போராடி வெற்றி பெற -
மாட்டோமா!?

''உம்மாளே....!! $எலும்பும்-
 தோலுமானவளே-
என் உம்மாவே!

நெஞ்செலும்பு கறி-
வாங்கி ஆக்கி-
போட்டவளே!

உன் வயித்து பசிய -
அறியாதவளே!

என் வயிறு-
பசியறியாம -
பார்த்து-
 கொண்டவளே!

விறகு கட்டு-
வாங்காம -
காட்ல விறகு -
பொறக்குனவளே!

உன் கையில -
ரேகை கொஞ்சம் -
முள் குத்திய காயம் -
அந்த ரேகையவும் -
மிஞ்சும்!

மிச்சம் புடிச்சி -
பேங்குல போட்டு -
வச்சியா!?

உண்டியலில்-
 கூட்டி -
வச்சியா!?

இல்லை -
இல்லவே-
இல்லை!

உன் புள்ளைங்க -
வயித்ததேன் -
நிரச்ச!

உனக்கு-
 தெரிந்ததெல்லாம் -
''கை' நாட்டு!

நான் போட்டு பாக்கல-
உனக்கு நகை நட்டு!

பொழுது விடியிறதுக்கு -
முன்னேயே -
வேலையை
ஆரம்பிசஅவளே!

பொழுது அடஞ்சும் -
வேலை முடிஞ்ச -
பாடில்ல !

எம்மாவே!

ஆம்பள புள்ளைய -
பெத்தவனு-
பொம்பளைங்க-
சொல்லுசிங்க!

நெஞ்சை -
நிமிர்த்தி கொண்டு -
அலைச்சேன்!

உம்மாவே!
இந்த ஆம்பள புள்ள -
என்ன பண்ணி-
 ''கிழிச்சேன்;'!

சொந்தகார-
 பொம்பளைங்க -
எண்ணம்!
வெளிநாட்ல இருந்து -
எவ்வளவு -
அனுப்புவானுங்களோ-
என்று!

உன் எண்ணமோ-
சாப்பிட்டானுங்களா-
இல்லையோ-
என்று!

மண்ண பானையாவும் -
மண்ணா போன -
பானையாவும்  போறது-
 குயவன் கையிலே!

சிற்பத்தை-
 ரசிக்கிறவங்களுக்கு -
சிற்ப்பியின் கை வலி -
தெரியிறது இல்ல!

மண்ணா போன -
என்னை ''மாளிகை'' -
ஆகினவளே!

''பார்த்து,பார்த்து'-
வளர்த்தவளே!


சிங்கபூர்ல -
சீமாங்குறான்!

சவூதி ஷேக் -
தன் சோக்குல-
 என்கிறான்!

மலேசியா மன்னர் -
மச்சாங்குறான்!

பெத்த தாயை -
நினைக்க-
 மாட்டேங்குறான்!

உனக்கு பிடித்தமா-
நான் நடக்கல-
நீ !
வாழும் காலத்துல!

காலமாகி போன பின்னே-
பிளைட் புடிச்சி -
வந்து என்னத்த -
'கிழிக்க''!?

கண்ணு கலங்காம -
தாயை வச்சி இருந்தவங்களை -
தேடி அலைகிறேன் -
இந்த காலத்துல!

உன் கண்ணு கலங்காம -
நான் நடந்து கொள்ள-
கையேந்தி நிக்கிறேன்-
இறைவனிடத்திலே!

Wednesday, 30 November 2011

உருப்படவா!?
திருமணம்-
 நடக்கும் போது-
ஆயிரம் உறவுகள் -வேண்டும்
உங்களை வாழ்த்த!

உறவுகளை -
அறுத்து எரிஞ்சி -
விட்டு போகலாமா!?-
தனி குடுத்தனம்-
நடத்த!?

மீசை!உன்னை விட -
என் மீது-
 அதீத ஆசை!
இருக்கிறது -
உன் மீசைக்கு!

நீ !
முத்தமிட -
எத்தனிக்கும் போதெல்லாம்-
''நெரிஞ்சி'' முள் -
ஒத்தனம்-
கொடுப்பது -
அதுதானே!

ஒழிக!

கண்களில் -
ஆரம்பித்து!

இதயத்தில்-
 புகுந்து!

திருமணத்தில் -
சேருமானால் !

வாழ்க -
அந்த காதலெனும்-
நேசம்!


காதலெனும் பேரை -
சொல்லி!
''கட்டி''பிடிக்கிறதும் -
''கட்டில் ''வரை செல்லுமென்றால்!

ஒழிக -
அந்த கர்மம்!

குப்பை!

நீ!

முற்றத்தை-
" கூட்டுகிறாய்-"
என்பதால்!

எத்தனை முறை -
''கூட்டி''அள்ளினாலும்-
உதிர்ந்து கொண்டே-
இருக்கிறதே!

''வெட்கம் கெட்ட-
வேப்ப மரம்!

Sunday, 27 November 2011

தூக்கி எறிகிறார்கள்....!(யூஸ் அன்ட் த்ரோ !)


பயன்படுத்தி விட்டால்!-
தூக்கி எறிகிறார்கள்-
''பிளாஸ்டிக் குவளை''-
''தண்ணீர் பாக்கெட் ''-களை!

அந்த பட்டியலில் -
இன்று -
இணைத்து விட்டார்களோ -
''பெற்றோர்களை!''

சிற்பி!


கல்லை செதுக்கி -
அழகாக்குபவர்-
சிற்பி என்றால்!

தலையை-
 அழகு படுத்தும்-
''முடி வெட்டும்''-
சகோதரனும் -
சிற்பிதான்!

டிக்.டிக் டிக்!அழுதிடும் குழந்தை-
பிறந்த பின்!

அழுகையை நிறுத்திடும் -
தாய் நெஞ்சோட -
வைத்த பின்!

காரணம் !-
குழந்தைக்கு -
முதல் சப்தம் !

தாயோட-
 இதய துடிப்பின்-
சப்தம்!

நமது -
அழுகையை -
நிறுத்திய -
அம்மாவை!

அழும் கண்களோட -
தெருவுல நிறுத்திடாதீங்க -
அந்த ஆத்மாவை!

தொடர்புடைய இடுகை....

Saturday, 26 November 2011

முன்னோர் சொல்!பணம் என்றால்-
பிணம் கூட -
வாய பிளக்கும் -
என்றார்கள்!

உணர்வற்ற பிணம்-
பிளக்கலாம் -
தன் மானம் உள்ள -
மனிதன் -பிளப்பானா?
என்பதுதான் -
கேள்விகள்!

பணம் ''பத்தும்'-
செய்யும் -என்று
எழுதினார்கள்!

அடுத்ததாக -
பதினொன்றை
எண்ணவில்லை-
எண்ணி இருந்தால்-
லட்சங்கள் -
லட்சியவாதியிடம்-
தோற்றிருக்கும் -என்பதை
எழுதி இருப்பார்கள்!

பணம் பாதாளம் -
வரை பாயும்-
என்றார்கள்!

''பாயும்'என்றவர்கள் -
பாதாளத்தை விட்டு-
பாதுகாக்குமா!-
பாதியிலேயே-
விட்டுடுமா-
என்பதை சொல்லவில்லை!

''மாலை''என்ற -
வார்த்தை ஒன்று!

அர்த்தங்கள் -
இருக்கிறது
இரண்டு!

மாலை நேரத்தையும்-
பூ ''மாலை'யையும் -
குறிக்கும்!

முன்னோர்கள் -
சொல்லியதெல்லாம் -
நல்லதுக்கு!

இப்ப உள்ளவங்க -
மாத்திகிறாங்க -
''தேவைக்கு!'''

பொம்பள புள்ள...!


ஒரு தாய்-
நம்மை பெத்தாள்-
குழந்தையாய்!

நமக்கு பிறக்கிறது-
குழந்தை -ஒன்னு
தாயாக!

நீந்த சொல்லி கொடுக்க
தேவை இல்ல -மீன் குஞ்சுக்கு !

பாசத்தை பரி சோதிக்க -
தேவை இல்ல -பொம்பள
புள்ள -பெத்தவனுக்கு!

கிணத்துல தண்ணி-
இருந்தால்தான்-வரும்
வாளியில !

நெஞ்சில இரக்கம்-
கொஞ்சம் கூட -
உள்ளவனுக்கு தான்-பொறக்கும்
பொம்பள புள்ள!

அன்று-
பெண்குழந்தையை -
உயிரோட புதைத்ததை-
காட்டு மிராண்டி தனம்-
என்கிறது -இன்றைய
வரலாறு!

இன்று-
கருவை பரிசோதித்து -
விட்டு ''கலைப்பதை'-
''காவாலி ''தனம் -என
சொல்லும் -நாளைய
வரலாறு!

பெத்தவங்களுக்கு-
உதவுற ஆம்பள புள்ளையையும்-
உதவாதபெண் குழந்தையையும் -
விரல் விட்டு-எண்ணி விடலாம்!

அவ்வளவு குறைவுதான்!


திருந்தாதவனும் -
திருந்துவான்-
பெண்பிள்ளை -பிறந்த பின்!

திருந்தாதவனோ-
இருக்கிறான்-மனிதன்
என்ற வேடத்திற்குள்!