அரசு அனுமதி பெற்ற-
''இடம்'' தான்!
படித்த என் மகன்-
அங்கு வேலைக்கு-
போவது பிடிக்கவில்லை-
எனக்கு தான்!
என்னை தான் -
இந்த ஊர் -
தூற்றியது -
''சாராய -
வியாபாரி''-என!
என் மகனையும்-
தூற்றனுமா!?-
"தண்ணி " விக்கிறவன்-
என!
நான்-
காய்ச்சி -
வித்த போது!-
துரத்தி பிடித்த -
காவல் துறை!
தெரு தெருவுக்கு-
''மது 'விக்க மட்டும் -
அனுமதித்தது-
என்ன-
முறை!?
''குடிசை தொழில்''-
செய்த-
எனக்கு லத்தி அடி-
கிடைச்சது!
''கட்டடத்துல ''-
தொழில் செய்றவங்களுக்கு- மரியாதை
கிடைக்குது!
''சில்லறை'' வியாபாரத்துக்கு -
தடையாம்!?
''மொத்த வியாபாரத்துக்கு-''-
அனுமதியாம்!?
இது என்ன !?-
கொடுமைங்கய்யா!?
விஷ சாராயத்தால்-
பலர் சாவாம்!
இங்க்லீஷ் பேர் -
வச்சத குடிச்சா-
ஆரோக்கியமா!?
''சாராய விக்கிரியே''-
உனக்கு வெட்கம் இல்ல-
என -கேட்ட -
ஊர் பெருசுகளே!
இப்ப -
டெண்டர் எடுக்க -
வரிசை கட்டி-
நிக்கிறீங்களே-
உங்களுக்கு -
அறிவு இல்ல!?
நான் திருந்திட்டேன்!
தொழிலை விட்டுட்டேன்!
அயோக்கிய தொழிலை -
விட்டுட்டேன்!
அயோக்கியன் என்கிற பேர்-
என்னை இன்னும் விடல!
சொல்லுங்க நீங்களே!
யோக்கியனு பேர்ல-
''பார்''நடத்துறவங்கள-
என்னனு -
-சொல்ல!?
//நான்-
ReplyDeleteகாய்ச்சி -
வித்த போது!-
துரத்தி பிடித்த -
காவல் துறை!
தெரு தெருவுக்கு-
''மது 'விக்க மட்டும் -
அனுமதித்தது-என்ன
முறை!?//
இது சரியான நெத்தி அடி- இல்ல இல்ல
போலீசுக்கே கொடுத்த லத்தி அடி
கடுகு சிறுத்தாலும் -
ReplyDeleteகாரம் குறையாது!
அதிக வார்த்தை எழுதுவதை ,
ஒத்த வரியில ,
மொத்தவரியையும்,
முழுங்கி விடுகிறது!
உங்கள் விமர்சனம் !
அசரத்!
உங்களுடைய கருத்து .
என்னை திருத்தும் -
என்று நம்புகிறேன்!
இன்னும் உங்களிடம்,
கருத்துகளை எதிர்பாக்கிறேன்!