சந்தி சிரிக்க-
வைக்கிறாய்ங்க-
அந்தரங்கங்களை!
''ஒளி '' பதிவு செய்திட -
துடிக்கிறாங்க -
அந்தரங்கங்களை !
தெருவுக்கு அடிச்சி -
இழுத்துட்டு வருவான்-
''உறவு '' கொள்ளும்-
நாய்களை!
தெருவுல போட்டு -
விக்கிறான் -''உறவு'' கொள்ளும்
பட காட்சிகளை!
இன்றைய உலகின் -
பெரிய பிரச்னை எது!?
சரி எது -
தவறு எது-
விளங்காதது!
ஆடை அலங்கார -
விளம்பரத்துக்கும்!
வருவாள் குறைச்சல் -
இல்லாமல் -
அலங்கோலத்துக்கு!
மானம் காக்க தானே-
ஆடை!
அதை முழுசா போட்டா-
என்ன பிழை!
ஆடை குறைப்பால் -
தெரிவது தேகங்கள் தான்!
அவர்களின் அறிவும் -
திறமையும் அல்ல!
''படுக்கை அறை''-
வரை வந்து விட்டது -
ஆபத்து!
''மத்த 'இடங்களில் -
என்னாகும் என்று -
எப்படி சொல்வது!
பெண்களின் உரிமை -
பாதுகாக்க-
எத்தனை தண்டனைகள்!
எத்தனை வழி முறைகள்!
அதெல்லாம் தடுத்து-
விட்டதா -பெண்களுக்கு
எதிரான வன்முறையை!
படம் எடுப்பான் -
பெண்ணுரிமை ஓங்குக -
என்று!
'ஒழுங்கான ''ஆடை போட்டு-
எத்தனை பேர் -
நடிக்க வைக்கிறாங்க !
ஆட விடுறான்-
''லோ -கிப்புல''!
மானம் மரியாதை-
போயிருச்சி ''லோ''உல!
கதாநாயகன் தேடுவான்-
கலாசார மிக்க -
வாழ்கை துணையை!
பாடல் காட்சியில் -
ஆட விடுவான் -
உள்ளாடையுட!
சினிமா-
மோகத்துல போனா!
அவங்க சீரழிஞ்சி -
போனா!?
கற்பு என்பது -
கண்ணியம் கொண்டது!
ஆகி விட்டதோ-
கடை சரக்கா!?
கண்ணியம் காப்பது தானே-
ஆடை!
அதை குறைக்கும் என்றால்-
அதன் பேர் இல்ல -
ஆடை!
வெள்ளம் வருவதுக்கு-
முன்னால் தடுத்து கொள்ளுங்கள்!
உங்களை ஒளி பதிவு -
செய்யும் முன் மானத்தை -
காத்து கொள்ளுங்கள்!
எடுபடுமா?-
என் பேச்சு -தெரியல!
''பெண்களுக்கு ஆபத்து'--என
செய்தி படிச்சேன்-
பத்திரிக்கையில!
அன்பின் சீனி
ReplyDeleteஎன்ன செய்வது ....... க்லாச்சாரக் காவலர்கள் என்ன செய்கிறார்கள் - பெண்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் காட்டும் வீணர்களை என்ன செய்யலாம் ............ சிந்தனை கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் சீனா!
Deleteஉங்கள் பொறுப்பு என்னை-
வியப்பில் ஆழ்த்துகிறது!
உடனடி வரவிற்கும் -
கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!