Monday, 30 May 2011

கண்டதுண்டா!

கருவறையின் காரிருள்
கண்டதுண்டா-அதுவே
அவளின் கூந்தல்!

கருப்பாக இளம்பிறையை
கண்டதுண்டா!-அதுவே
அவளின் புருவம்!

அமாவாசையும் ,பௌர்ணமியும்
சங்கமிப்பதையும் கண்டதுண்டா!-
கருப்பும் வெள்ளையுமாய்
அவளது கண்கள்!

பூக்கள் பூக்கும் சப்தம்
கேட்டதுண்டா!-கேட்கலாம்
அவளது சிரிப்பில்!

நிலவின் முதுகை
கண்டதுண்டா!-அதுவே
அவளது முகம்!

ஆடை மறைத்து கொண்டது
மிச்சத்தை!

பார்த்தல் எழுதுவேன்
சொச்சத்தை!

அவள் பொன்னான
படைப்பு!

யாரும் கண்டிராதவற்றின்
கூட்டமைப்பு!

எண்ணியதை எழுதிவிட்டேன்
எழுத்தில்!

நேரில் சொல்லிவிட
துணிவில்லை மனதில்!

இன்னுமா புரியவில்லை!

வாசனை இல்லாத-
மல்லிகையா!?

அன்பே!
மல்லிகை உனக்கு -என்ன
தோழியா!?

அது பூத்து சிரிப்பது கூட-
நீ !
சொல்லியா!?

அன்பிற்கு உரியவளே!-

மலரின் மொழி-
அறிந்த உனக்கு ,!

என் மனதின் வலி -மட்டும்
தெரியவில்லையா!!?

வெற்றி நிச்சயம்..!

முத்து வேண்டுமானால்-
கடல் அலையை-
எதிர்கொள்!

தேன் வேண்டுமானால்
தேனீக்கள் கொட்டுவதை-
தாங்கி கொள்!

பூக்கள் வேண்டுமானால்-
பூச்சிக்கள் கடியை-
தாங்கிகொள்!

வெற்றி வேண்டுமானால்-
விடா முயற்சியை-
மேற்கொள்!

அதற்கு முன்னால்-
உனது தாழ்வு மனப்பான்மையை-
கொல்!

சத்தியம்!
வெற்றி நிச்சயம்!!

ஏன்!?

வான் மழையை-
பூமி மறுப்பதில்லை!

வண்டுகளின் வருகையை-
பூக்கள் தவிர்ப்பதில்லை!

நிலவினை மேகம்-
துரத்துவதில்லை!

நதி நீரை-
கடல் கடிந்து கொள்வதில்லை!

உயிரே!நீ
உடலான என்னை
வெறுப்பதேன்!?

பொருந்துமா!

விட்டு கொடுப்பவர்கள்
கெட்டு போவதில்லை --
என்றான் அவன்!
சரி என்று ,
விட்டு கொடுத்ததினால்
கெட்டு போனாள்--
அவள்!!

தெரியுமா!?

மேகத்திற்குள்-
மழை!

மின்னலுக்குள்-
மின்சாரம்!

மலருக்குள்-
தேன்!

எல்லோரும் அறிந்த-
ஒன்று!

எத்தனை பேருக்கு -
தெரியும் !

என்னுள்தான்-
நீ என்று!?

கருப்பு நிலாக்கள!

கருத்த வானிலோ-
ஒரு வெள்ளை நிலா!

என்னவளின் -
வெளுத்த முகத்திலோ -
இரு கருப்பு நிலாக்கள்!!-

 அதுதான்-
இரு கரு விழிகள்!

மகளாக தாய்!

என்னை முக்குளித்து -
முத் தெடுதவளை!-

நான்!
முக்குளித்த போது-
முத்தாக-
 கிடைத்தவள்!

முடியவில்லை..!

தண்ணீர் கூட குடித்திடுவேன்-
தலை கீழாக -
நின்று!

பார்க்க கூட முடியவில்லை -
  என்னவளே !-
  உன்னை-
நேருக்கு நேராக -
நின்று!

விலகுவேனா?

நீர் அடிச்சி-
நீர் விலகுவதா!?

நண்பா..!நீ அடிச்சி -
நான் விலகுவதா?

இல்லவே இல்லை!

எல்லையுண்டு -
கடலுக்கு!

எல்லையுண்டா?-
கற்பனைக்கு!!

இழப்பதிலும் லாபம்!

உயிர் இழப்பதுண்டு -
லட்சியவாதிகள்!

அதிலும் உயிரோட்டம் -
அடைவதுண்டு-
 இலட்சியங்கள்!!

'தடுப்பு'எது?


மரங்களுக்கு -
வேலிகளால் -
தடுப்பு உண்டு!

ஊடுருவும் -
வேர்களுக்கு -
தடுப்பு உண்டா?

போராடும் மக்களை-
தடுக்கலாம்!

போராட்டக்காரர்களின்-
நியாயமான குரலின்-
பரவலை தடுக்க-
முடிவதுண்டா!?

வலியும் வேண்டும்!

சீவிய-
 பாலையில் தான் -
பதநீர் வரும்!

பிளந்த -
பூமியில் தான் -
தண்ணீர் வரும்!

சானையிட்டால் தான் -
அறிவாளுக்கும்-
கூர்மை வரும்!

இருண்ட -
இருளில் தான் -
அழகு எனும்-
 நிலவு வரும் !

உடல்பயிற்சியின் -
வலியில் தான் -
உடலுக்கு-
 வலிமை வரும்!

காயம்பட்ட -
உள்ளத்தில் தான் -
கவிதை வரும்!

தோல்வியை -
தாங்குபவனுக்கு தான் -
வெற்றி வரும் !

அவமானம்!

என்னை -
அவமானம் படுத்த வேணாம் -
என்றது!

ஊழல் வாதிகள் மேல் -
வீசப்பட்ட-
'அழுகிய தக்காளி!'

Sunday, 22 May 2011

பார்த்"தாயே....!"


 தாயே!
நான் -
கருவறையில்-
 உதைத்தேன்-
கால்களால்!

இன்னும் நான்-
வதைக்கிறேன்-
வார்த்தைகளால் !

இரவு நேரங்களில் -
என்னை "சுற்ற "விட மாட்டாய் -
நான் கெட்டு  விடுவேன் -
என்று!

இன்னுமா!
நம்புகிறாய்-
தாயே!
நான் -
நல்லவனென்று!

சிப்பிகளே!
நீங்கள்-
முத்தை போல் கருவில்
சுமந்தீர்கள் !

சொத்து சேர்க்கும்-
வேகத்தில் சென்று விட்டோம்-
தூரத்தில்!

செல்வமுள்ள மகனானாலும் -
பெத்தவளுக்கு சோறு கொடுக்காதவன்-
செத்த பிணமே!

வாழும்போது -
பெத்தவளுக்கு-
ஒரு வா[ய்] சோத்தை போடாதவன்!

செத்த பின்னே ஊருக்கே -
சோத்தை போடுவான் -
'கத்தம்'என்ற பெயரில்!

கோழி மிதித்து -
குஞ்சுகள் செத்ததில்லைதான்-
ஆனால்-
குஞ்சு மிதித்து -
நொந்த கோழிகள் -
எத்தனையோ!

அப்பாவி தாயே!

நான் -
உன்னை திட்டினாலும் -
என்னையே-
சுற்றி வருகிறது -
உன் ஆவியே!

தறுதலை!
எனக்கு உன் பாச பார்வை -
மட்டுமே தருகிறது-
ஆறுதலை!

கருவில் சுமந்தும் -
மாதகணக்கில் பாலூட்டினாய் -
எனக்கு !

கொஞ்சம் கூட -
பாசம் காட்டவில்லை-
நான் -
உனக்கு!

உனக்கே -
இந்த கதி!

நாகரிக-
தாய்மார்களே!
"புட்டி "பால் -
கொடுக்குறீர்களே-
அப்படியானால் -

உங்களின் கதி!?

மழலை அழுகையின் மொழி பெயர்ப்பு!

தகப்பன்மார்களே!

திராணி உழைப்பதற்கு
இல்லைஎன்றால் -உங்களுக்கெதற்கு
திருமணம்!?

தாய்மார்களே!

கூந்தல் குறைவுக்கு-
ஒட்டு முடி!

முக அழகை கூட்டிட-
மேக்கப்பு!

தாய் பாலுக்கு -இப்போ
புட்டி பால் !

பாசம் தர என்ன!-
பணி பெண்ணா!?

பெத்தவுடன் தீர்ந்து -
விட்டதா கடமை !

பாசத்தை ஊட்டாமல் -
ஊட்டசத்தை மட்டும் -ஊட்டி
வளர்ப்பது மடமை!

எங்களின் எதிர்கா லத்திற்கு -
உழைப்பதாக கூறுவது -
உங்களின் அறியாமை !

நிகழ்காலத்தை கொன்று விட்டால் -
எதிர்காலம்
எங்கே இருக்கு!

மழலைக்கு தேவை -
இனிப்பு கலந்த -
பசும்பாலல்ல !

பாசம் கலந்த -
தாய் பால் !

இப்போதைக்கு-
 எங்களுக்கு -
பாசம் தான் !

பணமல்ல....!

எல்லை மீறல்!

ஊருக்குள் சென்றது -
கடல் அலை!

எல்லை மீற -
கடலுக்கு -
கற்று கொடுத்தது -
யார்!?

கடற்கரைகளில் -
எல்லை மீறும்'

காதலர்கள் அல்லாமல்-
வேறு -
யார்!?

மழலை பேச்சு!

தெரியாத -
மொழி !

விளங்கும்-
 கவிதை!!

பொறுத்தது போதும்...

கலங்குவதில்லை-
 கதிரவன் -
கண் விழிக்கவில்லை -
நீ என்பதால்!

அடைந்தே -
கிடைப்பதில்லை
பறவை-
 கூட்டினுள் !

நீ அடைந்தே -
கிடக்கிறாய் -
வீட்டினுள் -
என்பதால்!

விவசாயி-
 வெயிலுக்கு பயந்தால் -
நமக்கு -
உணவு எங்கே!

நாம் இமையை -
திறக்க-
முயற்சிக்க விட்டால் -
நமக்கு பார்வை தான்-
 எங்கே!?

சோதனையை -
தாங்காத -
சாதனையாளன் -
இங்கே எங்கே!?

தோல்விகளில் -
பாடம் படி!
திறந்தே இருக்கிறது -உனக்கு
வெற்றி படி!

உனக்காக!

எல்லோருக்கும்-
 ஆச!
தொலைபேசியில்-
 பேச!

தொலைபேசிக்கு -
ஆச!
அன்பே!
நீ எடுத்து பேச!