Sunday, 22 May 2011

பார்த்"தாயே....!"


 தாயே!
நான் -
கருவறையில்-
 உதைத்தேன்-
கால்களால்!

இன்னும் நான்-
வதைக்கிறேன்-
வார்த்தைகளால் !

இரவு நேரங்களில் -
என்னை "சுற்ற "விட மாட்டாய் -
நான் கெட்டு  விடுவேன் -
என்று!

இன்னுமா!
நம்புகிறாய்-
தாயே!
நான் -
நல்லவனென்று!

சிப்பிகளே!
நீங்கள்-
முத்தை போல் கருவில்
சுமந்தீர்கள் !

சொத்து சேர்க்கும்-
வேகத்தில் சென்று விட்டோம்-
தூரத்தில்!

செல்வமுள்ள மகனானாலும் -
பெத்தவளுக்கு சோறு கொடுக்காதவன்-
செத்த பிணமே!

வாழும்போது -
பெத்தவளுக்கு-
ஒரு வா[ய்] சோத்தை போடாதவன்!

செத்த பின்னே ஊருக்கே -
சோத்தை போடுவான் -
'கத்தம்'என்ற பெயரில்!

கோழி மிதித்து -
குஞ்சுகள் செத்ததில்லைதான்-
ஆனால்-
குஞ்சு மிதித்து -
நொந்த கோழிகள் -
எத்தனையோ!

அப்பாவி தாயே!

நான் -
உன்னை திட்டினாலும் -
என்னையே-
சுற்றி வருகிறது -
உன் ஆவியே!

தறுதலை!
எனக்கு உன் பாச பார்வை -
மட்டுமே தருகிறது-
ஆறுதலை!

கருவில் சுமந்தும் -
மாதகணக்கில் பாலூட்டினாய் -
எனக்கு !

கொஞ்சம் கூட -
பாசம் காட்டவில்லை-
நான் -
உனக்கு!

உனக்கே -
இந்த கதி!

நாகரிக-
தாய்மார்களே!
"புட்டி "பால் -
கொடுக்குறீர்களே-
அப்படியானால் -

உங்களின் கதி!?

1 comment:

  1. கோழி மிதித்து -
    குஞ்சுகள் செத்ததில்லைதான்-ஆனால்-
    குஞ்சு மிதித்து -
    நொந்த கோழிகள் -எத்தனையோ!

    பார்த்"தாயே....!"
    பார் தாயே....!"

    ReplyDelete