Monday, 31 October 2011

கொடுமை!

மனித பிறப்பு!
இரு-
 உறுப்புகளின்-
இணைப்பு!

எப்படி-
 வந்தது?
உயர்ந்தோன்-
தாழ்ந்தோன் என்ற -
இருமாப்பு!?

காதலர்கள் கவனத்திற்கு!பைக்கில் பட்டுன்னு-
"பற்றி" கொள்ளும் -
எண்ணெய் கிடங்கு-
(பெட்ரோல் டேங்-)
இருப்பதால்!

ஒட்டி கொண்டு -
செல்லாதீர்கள்-
சட்டுன்னு-
"பற்றி"கொள்ளும்-
காதல் 'தீ' -
உங்களிடம்-
இருப்பதால்!

மானம்!

சகதியில்-
 புரண்டு -அதை
உடம்பில் -
ஒட்டி கொண்டு-
மானத்தை -
மறைக்கிறது-
'எருமை' ஜாதி!

ஆடை அணிவதாக -
சொல்லி கொண்டு -
அம்மணமாக -
தெரிகிறார்களே-
மனித ஜாதி!!

Friday, 28 October 2011

மெருகு!

கூர் தீட்டிய -
வாளை போல!

அழகை -
மெருகூட்டி -
கிளம்பி விட்டாள்-
கலந்து கொள்ள -
திரு விழாவுல!

எத்தனை-
 பேர் துடிக்க -
போறானுங்களோ-
கழுத்து அறுபட்ட -
சேவலை போல-
இவ போகும்-
வழியில!

சீரழிவு!

குடும்பம்-
 சீரழியாம -
இருக்க!

குடும்பத்தோட-
சீரியல்-
 பார்க்காம -
இருங்க!

மின்சாரமே....

மின்சாரமே!
மின்சாரமே!-என்ற
 பாடலை பாடியது!-
வானொலி!

மின்சாரம் -
இல்லாததால்-
'பேட்டரியில்!'

ஒரே இடம்தான்!

வெளிச்சத்தில்-
 இருக்கும்-
இடம்!

பலருடைய-
 வாழ்வை -
இருளாக்கும் -
இடம்!

'டாஸ் மாக் ' -எனும்
கொடூரம்!

மாற்றம்!

பெற்றோர்களுக்கு!

ஆண்பிள்ளை -
சாகும் வரை!

பெண்பிள்ளை -
'போகும்'வரை!


ஆணின் இடத்தில் -
பெண்ணையும் !

பெண்ணின் -
இடத்தில்-
ஆணையும்!

மாற்றி-
வையுங்கள்!

காலம் -
மாறி விட்டது!

Wednesday, 26 October 2011

எச்சில்!


காரிதுப்புது!
கூட்டமாக -
வாழும் -
பறவைகள் !

சொந்தங்களிடம் -
ஒட்டாமல்-
 வாழும் -
மனிதர்களை -
பார்த்து!

சுமை!

'சுமை'யாக-
 நினைக்கிறோம்-
'சுமந்தவளை'!

'சுமக்கும் 'போது -
அவள் நம்மை-
'சுமை'யாக -
நினைத்து-
"கலைச்சி"-
இருந்தால்....!!?
'கோடிகள்'!


தாய்-
தெரு கோடியில-
கிடக்குறத எண்ணாம-
கோடி 'பணத்தை "-
எண்ணுபவன்!

பங்களாவுல -
வசித்தாலும்!-
அவன்-
பங்களா வாசி அல்ல-
பஞ்ச பரதேசி!

இருப்பதும் /இல்லாததும் !

வேகம் இருந்து -
விவேகம் இல்லாதது -
இளமை!

விவேகம் இருந்து -
வேகம் இல்லாதது -
முதுமை!

விதைக்கும் போது-
மழை வராது!
மழை வரும் -
அறுவடையின் போது!

காசு இல்லாத போது -
காதல் வந்தது!

காசு வந்த போது -
அவளுக்கு-
கல்யாணம்-
 ஆகி போனது !

ருசியா தின்ன -
வாய்ப்பில்லை -
வறுமையின் போது!

வசதியும் வாய்ப்பும்-
வந்த பின்-
நோயானது -
உடம்பானது!

தலை வலின்னு -
முனங்குனாலே-
தைலத்தோட வருவா -
பெத்தவ !

தாயோட கையை -
தட்டி விட்ட -
காலமுண்டு!

தலை போற -
விசயத்திலும்-
தலை கோர கூட -
விரல்கள்-
இல்லாத போது-
கலங்கி-
நிற்கிற காலம்!-
இப்போது!

அருகே இருந்தவளிடம் -
அன்பா-
பேசுவதில்லை!

'அனைத்தும்' -
முடிந்த பின் -
அழுவதில்-
 புண்ணியமில்லை!

இல்லாத ஒன்றுக்கு -
இருப்பதை இழக்கிறோம்!

இருப்பதை மறந்துட்டு -
இல்லாததற்கு ஏங்குகிறோம்!

"வாடா"-"வாடி"!


'வாடி'-என்று-
 அழைப்பான்!
காதல் பூ-
 'வாடா'மல் -
இருந்தது!

'வாடா'-என்று -
அழைத்தாள்-
காதல் பூ -
'வாடி'-
போனது!

தாய்-ஆனவன்!

மகனே!
நடையாய் -
நடந்தேன்-
பள்ளிக்கு!

நீ!
கல்வி -
பயில வேண்டும் -
என்பதற்கு!

உன்னை -
என் நெஞ்சில் -
சுமந்தேன்!

செத்த பின் -
என்-
உடலை தோளில்-
சுமப்பாய் -
என்பதற்காக!

நீ!
பிறந்தவுடன் -
காலமானாள்-
உன் தாய்!

உனக்காக -
தாயாக -ஆனவன்
நான்!

என் இளமை-
 பசிக்கு -
தேடவில்லை -
மறுமணம்
எனும் உணவை!

பயம்தான்-
வருபவள்
உன் வயித்து-
 பசிக்கு  தருவாளோ -
உணவை!

நீ!
பொருளியல் படிக்க -
பொருளாதாரத்தை-
 இழந்தவன்-
நான்!

உன் வீட்டில் -
இடமுண்டு
செல்ல பிராணி -
என்ற பெயரில்-
நாய்க்கு!

இடமில்லாமல் தான் -
போனதோ-!?
உன்னை செல்லமா -
வளர்த்த எனக்கு!

மனதின் வலியை-
எழுத-
தெரியவில்லை!

வரும் -
கண்ணீரை-
அடக்க முடியவில்லை!

சுமையை-
 கொடுத்தவனிடம்-
சுமையை -
கொடுத்து விட்டு -
போனாள்-
உன் அன்னை!

பெரும் சுமையாக -
கருதுகிறாயடா-
என்னை!

என்னை -
மறந்து விட்டாய் -
என் நிலையை -
உன் மகன்
பார்த்து வளர்கிறான்-
நீ !-
அதை ''மறந்து விடாதே'....?

Monday, 24 October 2011

குணம்!மிருகத்திடமும் கூட -
இல்லாத குணம்!

மனிதனிடம் உள்ள -
குணம் !

'தீண்டாமை' எண்ணம்!

கொலைக்காரி!


அன்று -
கனவுகளால் -
கொன்றவள்!

இன்று -
நினைவுகளால்-
 கொல்பவள்!

'முன்னாள் ' -
காதலி!

மரணம்!


மண்ணுக்கும் -
உடலுக்கும் உள்ள-
உறவை-
இணைக்கும் -
பாலம்!

அவளின் சிரிப்பு!

அவள் -
சிரிக்கும்போதெல்லாம்-
பௌர்ணமி தான்!

சிரிக்க -
மறுக்கும்போதெல்லாம்-
சந்திர கிரகணம் தான்!

ஆம்-
அவள் செவ்விதனுள்-
முப்பத்திரண்டு-
நிலவுகள் தான்!

போதை !


அதிசயம் -
ஆனால்-
உண்மை!

ஆறறிவை-
"ஐந்தறிவாக"-
 ஆக்கும்!

விமர்சனம்!


நம்மை -
செதுக்கும் -
உளி!

அர்த்தங்கங்கள்!
பெரியவர்கள்!
அழகாக -
பேசினாலும் -
அர்த்தமற்று -
இருக்கும்!

குழந்தைகள்!-
ஒரு சப்தம் -
ஆயிரம் அர்த்தங்கள்-
இருக்கும்!

கடமை !


மற்றவைகள்-
 தினமும் -
செய்து விடுகிறது -
கடமைகளை!

மனிதர்களை -
தவிர்த்து !

செல் போன்!
நம் நேரத்தை-
 அரிக்கும் -
புற்று நோய்!

காதல்!


அன்று-
காவியம் -
படைத்தது!

இன்று-
கருவை -
கலைப்பது!

இரவு!

னிமையானது தான் !

தனிமையில் -
உள்ளவர்களுக்கோ!
கொடுமையானது!

இளமை!சூடான சட்டியில் -விழும்
தண்ணீர் 'சொட்டு'!

சரித்திரமாக.....


தோல்விகளை கண்டு -
துவளாதிரு!-
அது உன்னை-
வெற்றிக்கு அழைத்து -
செல்லும்!

வெற்றிக்கு பின்-
இறுமாப்பு கொள்ளாதிரு!-
அது உன்னை-
சாதனையாளன் ஆக்கும்!

சாதனையை நினைத்து -
மயங்காதிரு!-
அது உன்னை-
சரித்திரத்தில் -
இடம் பெற செய்யும்!

வெற்றி!ஆயிரம் விழுதுகள் கொண்ட -
ஆலமரத்தின் தொடக்கம் -
சிறு விதை!

வானுயர்ந்த -
கட்டடங்களின் -
ஆரம்பம் -
சிறு சிறு கற்களின் -
இணைப்பு!

மனித உடல் -
அதனின் மூலம்-
கண்ணுக்கே -
புலப்படாத-
உயிரணு!

காட்டாற்று  வெள்ளம் -
சிறு சிறு மழை துளிகள் !

கொஞ்சம் கொஞ்சமாக -
சேரும் தீச்சுடர்கள்-
பெரும் தீ சுவாலை ஆகிறது!

அது போலவே!
பெரும் வெற்றியை தருவது -
விடா முயற்சியாவது!

Sunday, 23 October 2011

விடாத கருப்பு!
நெருக்கம் அதிகம்-
இருளுக்கும்-
 எனக்கும்!

விளக்காக வந்தாள்-
என் வாழ்வின் -
இருளுக்கு!

என் கருப்பு முகத்துல -
தெரிஞ்சது-
வெளுப்பான சிரிப்பு -
இருந்தது!

இருட்டாதா?என -
மனம் ஏங்கும்!

அப்போ தானே -
தண்ணி எடுக்க வருவா -
ஊர் கிணத்துக்கு !

இருளும் நானும் -
ஒண்ணுதான்!

இரண்டுக்கும் -
நிறம்-
கருப்புதான்!

ஊரே விரும்பும் -
அழகு பெண்ணவள்!

என்னையவா?கட்டிக்க -
விரும்புவா -
அவள்!?

காரணங்களாக -
இருக்கலாம்!

என்னிடம் உள்ள -
நிறமோ!
இல்லாத பணமோ!?

கருப்பு தாவாணி கட்டி -
வரும்போதெல்லாம்-
என் மனதில் சிலிர்ப்பு!

ஆடையாக என்னையே -
கட்டி கொண்டதாக -
நினைப்பு!

இலவசமே ஆனாலும்-
வண்ண தொலை காட்சி -
வேணாமே!

கருப்பு -வெள்ளை -
போதுமே!

கருப்பு நானாக -
வெள்ளை அவளாக !

கடலில் சேர்ந்த -
ஆத்து தண்ணிய பிரிக்க -
முடியாது!

கருப்பான என்னிடம் -
ஒரு-
இனிப்பான காதல் இருந்தது-
யாருக்கும் தெரியாது!

இரவு வேளையில் -
எனக்கு-
வேலை!

காயங்கள் தரும் -
அவளது நினைவை!

அண்ணாந்து பார்ப்பேன்-
வானில் நிலவை !

வைக்கோல் பொம்மையை -
காட்டியதால் -
மனுஷன் பாலை கறக்க-
இடம் தரும் -பசு!

நிலவை பார்த்த பின் -
அவளது முகத்தை பார்த்ததாக -
அமைதி கொள்ளுது-
மனசு!

முறையா இது!?உனக்கே -
இது முறையா!?
நான் என்ன -
அழையா விருந்தாளியா!?

தலையை ஆட்டி ,ஆட்டி -
வர சொல்கிறாய் !

வந்த பின்னும் -
விடாமல் -
இன்னும் .இன்னும் -
என்கிறாய்!

உன் ஆசை தீர்க்காம -
நான்-
போகலாமா!?

நீயும் -
விடுவதா இல்லை!
நானும் -
ஒதுங்குவதா இல்லை!

பேராசைதான்-
 உனக்கு-
ஆசை தான் -
இல்லையா !?
-எனக்கும்!

கொட்டி -
தீர்ந்த பின் -
ஏன்-!?
சாய்ந்து விடுகிறாய்!

ஊரு-
 உன்னை குற்றம்-
சொல்லாது !
என்னை தான் -
சொல்லும்!

சாலையில்-
 சாய்ந்து போன -
மரத்தை பார்த்து !
கேள்வி கேட்டது -
மழை காற்று!

நண்பர்களே!தடையாக இருக்கும் -
முட்டை தோடை-
முட்டி ,முட்டி உடைத்து-
வெளியேறுது கோழி குஞ்சு!

நண்பா!
தடை களை கண்டு -
தளர்ந்து விடலாமா?

நீ என்ன?

குஞ்சியை விடவா-
இருக்கிறாய்-
குறைஞ்சி..!!

Thursday, 20 October 2011

தாய் பால்!
கொஞ்சங்கூட -
தாய் பாசம்-
புள்ளைக்கு-
 இல்லையா!?

கொஞ்சமாவது -
தாய் பாலை-
புள்ளைக்கு-
 கொடுத்தார்களா!?

கெட்டு விடுமாம் -
அழகு!

கெட்டு போனதே -
தாய் மேல்-
உள்ள அன்பு!