பார்பதெல்லாம் -
தெரியுதே-
பாவை உந்தன்-
பதிப்பாக!
சாக்கடையை -
கடந்தாலும் -
பூக்கடையாக -
வாசம் வீசுதே-
உன் நினைவாலே!
என் உயிர்-
நீ என்று -
சொன்னவளே!
சொல்லாமல் -
கொள்ளாமல்-
அதான் போனாயோ!?
புகை படம் கூட -
எடுக்க வில்லை -
உன் முகத்தை!
'புகை'படத்தில் -
வைக்கலாமோ?-
உன் முகத்தை!
உன்னை-
என் மனதிலும்-
மாட்டி வைக்க வில்லை!
அவ்வளவு தூரம்-
என் மனம்-
சுத்தமில்லை!
எங்கு-
நான் உன்னை-
வைக்க!?
இடம் தேடி -
அலைகிறேன்-
கால் கடுக்க!
தூக்கத்துல -
உன் பேரை-
உளறுனதை -
சொல்வேனா!?
எழுத ஆரம்பிச்சா-
உன் பேரை-
எழுதுதடி -
என் பேனா!
என்கவலை-
கரையுது-
கண்ணீரிலே!
பேனாவின் -
கண்ணீர் தான்-
கவிதையோ...!?
காதல் தோல்வியின் தாக்கம் அழகான கவிதையாக வந்திருக்கிறது. என் மனதில் ஒட்டிக் கொண்டது. அருமை!
ReplyDeletesir!
ReplyDeleteungal varavukkum -
karuthukkum mikka nantri!