உலகம் அறியாதவ-
மவனையே உலகம்னு -
இருந்தவ!
வீட்ட விட்டு-
வர மாட்டா!
தேவையில்லாம -
வீட்டு படிய கூட -
தாண்ட மாட்டா!
மணந்தவனுக்கும்-
மாமியாருக்கும் -
வேலைக்காரி இவ-!
வீட்ல-
உறவுன்னு சொன்னா-
புருசங்குறவன் -
கழட்டி போட்ட-
ஜட்டியும்!
அடி புடிச்ச -
கரி சட்டியும்!
துவைப்பதில்-
தொடங்கும் -
கழுவுவதில் முடியும் -
இவளது-
நாள் காட்டியும்!
திண்ணையில கோழி -
'பிய்ய' பேன்டாலும்!
'பிய்ய' திண்டது போல-
"கட்டுனவன்" -
குடிச்சிட்டு-
வந்தாலும்!
உரலுல மாட்டுன -
உம்மியாட்டம் இவ!
சொல்லால கொல்லுரவ-
மாமியாருங்குரவ!
இவளுக்குன்னு -
இருக்கும்-
ஒரே சந்தோசம்!
மகன் என்கிற-
உலகம்!
கஷ்டத்துல கூட -
கண்ணு கலங்கினது இல்ல!
பெத்த புள்ள மேல -
படிக்கணும்னு!
ஊரே விட்டு கிளம்புனா-
பட்டணதுக்குனு!
மொத மொதல்ல -
அவ கன்னத்தை-
ஈரமாக்கியது -
கண்ணீரு!
படிப்ப முடிச்சதும் -
மவன் இருப்பான் -
நம்மோட என-
இவ நெனச்சா!
படிப்பை முடிச்சான் -
பட்டணத்தில!
'பய'மவன் உறுதியா -
இருந்தான் -
கடல் தாண்டி
பொழைக்க போறதுல!
பயணம் போனான் !
பணம் அனுப்புவான்!
அப்பனுக்கோ கட்டிங் -
கோட்டர் ஆனது -
சந்தோசத்துல !
அப்பன பெத்தவளுக்கோ -
இருப்பு கொள்ளல!
இவன பெத்தவளோ !
துடிச்சா கழுத்து அறுபட்ட -
சேவல போல !
போன் அடிக்கிறப்ப எல்லாம்-
இவ மனசு கெடந்து துடிக்கும்!
தவம் இருந்து பெத்தா!
பாத்து பாத்து வளத்தா!
இப்ப -
மவன் மொகத்தை-
பார்க்க தவமா கிடக்குறா!
ஒரு தடவ வந்துட்டு போ-
சொல்லுவா இவ!
பாப்போம்!?என-
சொல்லுவான் அவன்!
பாசத்துக்கு ஏங்கியவ!
படுத்த படுக்கை ஆனா இவ!
பாவி மகளுக்கு -
படுக்கையே-
பாடையானதே!
கன்னத்தை ஈரமாக்கி -
இருந்தது -கண்ணீரு!
மொத கண்ணீரு-
புள்ளைய பிரிச்சதாலே!
இன்னைக்கு அழுவுனது -
புள்ள கூட புரிஞ்சிகளையே!-
என்ற வருத்ததாலையோ!
அதோட உண்மையை-
அந்த கண்ணீருக்கும் -
நெஞ்சுல ஈரம்-
உள்ளவங்களுக்கு தான்-
புரியும்!
இதனை-
ஒத்த கால்ல-
ஆடி கொண்டே-
சொல்லுது -
தல வாச கதவு..!
அன்பின் சீனி - பெத்த மனம் பித்து - பிள்ள மனம் கல்லு - என்ன செய்வது - கொண்டவனும் மாமியாரும் பிள்ளையும் ..... யாருமே இவளின் நிலையினை அறியவில்லையே ....... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் சீனா!
Deleteஉடனடி வரவிற்கும் -அனைத்துக்கும்
கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!
வாழ்த்துக்களுக்கும்!
மிக மிக நன்றி!