Monday, 30 June 2014

வரதட்சணையெனும் ..!!

இளைஞனே!
ஏன் செய்கிறாய் !?
நிந்தனை !

எதற்கு கேட்கிறாய்!?
வரதட்சணை !

பாறைப்போன்ற
உனது வாழ்வில்
பூச்செடியாய் படர்ந்திட வாராளே.!!
அதற்காகவா..!?

கோடைப்போன்ற
உனது இளமைக்கு
வசந்தமாக வாராளே.!
அதற்காகவா.!?

ஒற்றை மரமான உனக்கு
வாழை மரமாக சந்ததி தர வாராளே.!!
அதற்காகவா..!?

படுக்கைக்கு பாயாகவும்
நோயின்போது தாயாகவும் மாறிட வாராளே.!!
அதற்காகவா.!?

ஒரு "ஒப்பந்தத்தினால்"
உன்னுடன் வாழும் நாளெல்லாம் பயணிக்க வாராளே.!!
அதற்காகவா.!?

சொல்!
எதற்கென்று சொல்!?

வரதட்சணையெனும்
பிச்சைக்காசு தான்
உனக்குத்தேவையென்றால்!

உனது பாலினம்
ஆணினம் இல்லையென்பதை
ஒத்துக்கொள்.!!

       


4 comments:

  1. ஒவ்வொரு வரியும் சவுக்கடி! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வலிகள் சுமந்த வார்த்தைகள்

    ReplyDelete