இரவு நேரத்தில்
வாகனச் சன்னலோர
பயணத்தின் போதும்!
மேகங்கள் சூழ்ந்து
இருட்டும்போதும்!
மலையுச்சியில்
நிற்கும்போதும்!
பச்சை வயல்வெளியில்
நடக்கும்போதும்!
தண்ணீரால் ததும்பியிருக்கும்
கண்மாய் கரையை கடக்கும்போதும்!
அடர்ந்த காட்டினுள்
செல்லும்போதும்!
பங்குனி மாத
அதிகாலையின் போதும்!
சட்டையில்லாத போதும்!
சட்டைப்பித்தான்
இடைவெளியில் நுழைந்தும்!
குளிர்காற்றே!
நீ!
என்னைத்
தொட்டும் சென்றுள்ளாய்!
தொடர்ந்து
தழுவியும் உள்ளாய்!
கண்ணை மூடி
அனுபவிக்க வைத்துள்ளாய்!
கன்னத்தில் அறைந்து
திரு திருவென முழிக்கவும்
வைத்துள்ளாய் !
கண்ணயர்ந்து
தூங்கச் செய்துள்ளாய்!
அடிக்கடி
தூக்கத்தை கலைத்தம் உள்ளாய்!
கொஞ்ச காலமாக
என்னை
நீயோ..!!
உன்னை
நானோ.!!
தொலைத்துக்கொண்டோம்!
அல்லது
மறந்து விட்டோம்!
இதோ
நான்
சன்னலோர "இருக்கையில்" !
கையில்
சரித்திர நாவலொன்று
இருக்கையில் !
என் முகம்
தீண்டுகிறாய்!
பிஞ்சு விரல்களால்
முகத்தை தடவுதல்போல்!
மெல்லிய முத்தத்தைப்போல்!
தீண்டுகிறாய் !
கலைத்துப்போன
எனக்கு!
உன் தீண்டல் தேவைதான்
இப்போதைக்கு !
தழுவு!
ஆரத்தழுவு!
நான் ஆறும்வரை
தழுவு!
நானும் என்னமோ நினைச்சேன்... ஹிஹி...
ReplyDeleteகுளிர்காற்று தழுவட்டும்... அடிக்கும் வெயிலுக்கு இதமாய் இருக்கட்டும்.
ReplyDelete