Monday 25 April 2011

காயம் படு !

துளையிடும் வரை-
அது வெறும் -
மூங்கில் குழல் !

துளையிட்ட -
பிறகேஅது -
புல்லாங்குழல் !

இன்பத்தில் சிரிப்பவன்-
சராசரி மனிதனாகிறான் !

துன்பத்திலும் சிரிப்பவனே!-
ஞானி ஆகிறான்!

ஒரு தாயிக்கு !

தாயே!
தாயோட காலடியில் தான்-
சொர்க்கம் என்பதே-
 நபி மொழியே!

என் காலின் -
"அடியை"-
வாங்கி இருக்கிறாயே!

குழந்தை பருவத்தில் -
நெஞ்சியிலும்!
வாலிப பருவத்தில் -
மூஞ்சியிலும்!

கோழியே!
குஞ்சு என்னை-
நீ!
 அடித்ததும் இல்லை -
மிதித்தும் இல்லை!

இந்த-
இரண்டையும் தவிர -
எதுவும் -
நான் உனக்கு -
செய்ததும் இல்லை !

ஊரார்-
சொல்வதுண்டு -
உன்னை -
நல்ல பிள்ளை -
பெத்தவள் என்று!

எத்தனை -
பேருக்கு தெரியும் -
ஒரு -
நல்லதாய்தான் -
என்னை பெற்றவளென்று!

நீ அழுதாய் -
என்னை திட்டி விட்டு -
புரியவில்லை -
அந்த கண்ணீரின்
அர்த்தம் அன்று !

புரிந்தபின் -
நீ !
என் அருகில் இல்லை-
இன்று!

வக்கும் இல்லை-
வசதியும் இல்லை -
உன்னை "-
"பொன்னகையுடன் "பார்க்க !

ஆனாலும் -
ஆசை கொள்கிறேன் -
உன்னை -
புன்னகையுடன்  பார்க்க!
வெட்ட வெட்ட
முளைக்குது மீசை!
மறைக்க மறைக்க
எழுகிறது ஆசை!

Monday 18 April 2011

விட்டு கொடுக்கலாமா !


விட்டு கொடுப்பவர்கள்-
கெட்டுபோவதில்லை -என்றான் !
அவன்!

சரி !என்று-
" விட்டு கொடுத்ததினால் -"
"கெட்டு"
போனாள்-
 அவள்!

கண்ணீர்!!

உப்பு கரிக்கும்-
 கடல் நீர் !

அதுதான்-வரதட்சணை கொடுக்க முடியாத -
ஏழை தகப்பனின் -
கண்ணீர்!!

தோழியே!

நீ நல்லவளா -
என்பதல்ல கேள்வி !

நான் !
உன் நட்புக்கு உரியவனா -
என்பதுதான்-
விடை தெரியாத -
கேள்வி !

Monday 11 April 2011

தற்கொலையாளி

தற்கொலையாளி!

சாக துணிந்தவனுக்கு -
வாழ துணிவில்லை !

அதெப்படி ??

கலையை ரசிப்பவன்-
கலைஞன் ஆகிறான்.

கவிதையை ரசிப்பவன் -
கவிஞன் ஆகிறான்

வானொலியை நேசிப்பவன்-
நேயர் ஆகிறான்

பத்திரிக்கை வாசிப்பவன் -
வாசகன் ஆகிறான்

பெண்ணே !
உன்னையே நினைப்பவன் -
ஏன் பைத்தியம் ஆகிறான் !