Tuesday 19 November 2013

கன்று குட்டி.(சிறு கதை)

         "ம்ம்ம்மாஆ ...ம்ம்மா..."என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது."தனக்குள்"இருந்த மற்றொரு உயிரை வெளியில் தள்ள வேண்டிருந்தது.பசுவின் கண்களில் வலியும் அவஸ்தையும் கலந்து இருந்தது.உலகின் எந்த உயிரும் பிரசவம் என்பது சவமாவதின் வலியை தருவது. 

                    மாட்டின் சொந்தகாரரும் மற்ற சிலரும் பசுவோடு போராடிகொண்டிருந்தார்கள்.குட்டி ஈன்று விட உதவிகொண்டிருந்தார்கள்."ஹே"என சின்ன பிள்ளைகளும் விளையாடி கொண்டிருந்தார்கள்.பெரியவர்கள் அச்சிறுவர்களை விரட்டினார்கள்.

                    மீண்டும் பசுவின் அலறல் தொடங்கியது.வெளியில் தள்ளியது.கண்டொன்று பிறந்தது.
அக்கன்று "கிடாரி கன்று"(பெண் கன்று) பசுவின் உரிமைக்காரருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி .அதன் வாயிலாக குட்டிகள் விருத்தி ஆகுமென்று.

                   எல்லோரும் சந்தோசமாக இருக்கும்போது அவ்வீட்டினுள் ஒரு அறையில் நடுத்தர வயது பெண்ணொருத்தி தலையணையில் தலை புதைத்து குப்புற படுத்து கிடந்தாள்.

              "அடியே ...!படுத்தே கிடந்தா என்ன அர்த்தம் எந்திரிச்சி,வேலை வெட்டியா பாரு..!"ஊரு உலகத்துல இல்லாததா .!?" என சொல்லிக்கொண்டே டிங் டிங் என வெத்தலையை இடித்துகொண்டிருந்தாள் கிழவி ஒருத்தி.

          மேலும் தொடர்ந்தாள்-"முதல்ல நீ! பெத்த இரண்டும் பொட்டையா பொறந்திரிச்சி.!இதுவும் பொம்பள புள்ளையா இருக்கும்னு "கரைச்சிட்டு " வந்தாச்சி ..! இதுக்கு போய் படுத்து கிடக்குறியே விவஸ்த கெட்டவ..!!என பொருமிக்கொண்டே வெத்தலையை இடித்தாள்.
     
            இடிபட்டது வெத்தலை மட்டுமில்லை.மனித சமூகத்தின் மனிதமும்தான்.....!!!

6 comments:

  1. பெண் குழந்தை என்றால் வெறுப்படையும் மனிதன் பெண் கன்று என்றால் மகிழ்வது விநோதம்தான் நல்ல கதை

    ReplyDelete
  2. பெண் குழந்தை வதம்.....

    நல்ல கதை சீனி....

    ReplyDelete
  3. அந்தக் கிழவியை அப்பவே வெத்தலைபோல் இடித்துவிட்டு இருந்திருக்கலாம்...

    ReplyDelete
  4. மனித சமூகத்தின் மனிதமும் தான்... உண்மை...

    ReplyDelete
  5. இந்த வேறுபாடுகள் இப்போது 90% இல்லை என்று சொல்லலாம்... சிலரே இன்னமும் இப்படி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. அருமையாக எழுதறீங்க கதையும்! தொடருங்கள்!

    ReplyDelete