சூரியன் கோபத்தை வெப்பமாக கக்கியது.தார்சாலை அதன் பங்கிற்கு அனலை துப்பியது.இதில் பெட்டிக்கடை வானொலியொன்று "தீபிடிக்க தீபிடிக்க முத்தம் கொடுடா .."பாடலை பாடிக்கொண்டு கடுப்பை கிளப்பிகொண்டிருந்தது.
அந்த மதிய வேளையில்..
ஜனங்கள் அவரவர் வேலையில் மூழ்கி கொண்டு,வரவும்போவதுமாக பேருந்து நிலையம் இருந்தது.
ஒரு உணவகத்திலிருந்து வெள்ளையும் சொள்ளையுமாக மூன்று பேர்கள் வந்தார்கள்.அவர்களது நடையில் ஒரு "கெத்து"தெரிந்தது.
அம்மூவர் படை தேநீர் கடையை வந்தடைந்தது.
"அய்யா..! பசிக்குது ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா..!!"அவர்களிடம் யாசித்தது ஒரு வயாதானவர். பரட்டைத்தலையும் குழிவிழுந்த கண்களும் அவரது ஏழ்மையை சொன்னது .பரிதாபத்தை உண்டு பண்ணியது.
மூவரில் ஒருத்தன் இன்னொருவனுக்கு கட்டைளையிட்டான் ."அங்கே போய் ஒரு சாப்பாடு பார்சல் வாங்கி இவருக்கு கொடு " என்றான்.
நீங்க நல்லா இருப்பீங்கய்யா....!! என நன்றி சொன்னார்.
அதை கண்டுக்காமல் கடைக்குள் பிரவேசித்தார்கள்.கடையிலுள்ள வாடிக்கையாளர்களும் முதலாளியும் பவ்யமாக பணிந்தார்கள்.
"என்னடா..!!அலைய விடுறியே என்ன..!?தேடி வரணுமோ..ம..."!வார்த்தைகள் தடித்தன வந்தவர்களிடமிருந்து.
"இல்லண்ணே..!!கொடுக்க வச்சிருந்த காசு பாப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சி ...அதுல செலவாயிருச்சு அண்ணே..!!எப்படியும் இரண்டு நாள்ல தந்துறேன்..!!என கெஞ்சினார் கடை முதலாளி.
"அதெல்லாம் முடியாது சாயங்காலம் வருவேன்.கொடுத்துரு பணத்தை இல்லையினா மரியாதை கெட்டுரும்..!!மரியாதையை கெடுத்துட்டு மறுபடியும் கெட என்ன இருக்கு ஆனாலும் எச்சரித்து விட்டு போனான்.
அதேநேரத்தில் சாப்பாடு வாங்கபோனவன் பார்சலை முதியவரிடம் கொடுத்து விட்டு அவனோட சென்றான்.ஆம் அவன் ஒரு கந்துவட்டிக்காரன்.வசூலுக்கு பக்கத்துக்கு ஏரியாவிற்கு சென்றான்.தன் படையுடன்.
சில நாழிகைகள் கழித்து அந்த மூவரும் அத்தேநீர் கடையை கடந்து சென்றார்கள்.அப்போது இரு நாய்கள் ஒரு உணவு பொட்டலத்தை கடித்து குதறி தரையில் சிந்தி கொண்டிருந்தது .அப்பெரியவரும் "பாவப்பட்ட"பணத்தால் வாங்கப்பட்ட சாப்பாடை சாப்பிடவில்லை.நாய்களும் சிந்தியதேயொழிய சாப்பிடவில்லை.
ஆனால் அந்த கந்து வட்டிக்காரன் போடும் "எச்சிதுண்டுகளுக்கு "ஆசைப்பட்டு இரு பிச்சைகார நாய்கள் சென்றது கந்து வட்டிகாரனுக்கு பக்கபலமாக....!!

ஆசை : கொடுமை...
ReplyDeleteஇருந்தாலும் கந்து வட்டிக்காரனிடம் கொஞ்சமேனும் ஈரம் இருந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteகந்து வட்டிக் கொடுமையை காட்சியாய் சொல்லியவிதம் அருமை!
ReplyDeleteகந்து வட்டியின் கொடுமை..... உங்கள் கதையின் வாயிலாக......
ReplyDeleteஅருமை.