Sunday 17 November 2013

என்னடா செல்லம்..!!(சிறு கதை)

              "என்னடா செல்லம் .! வந்துகொண்டுதான் இருக்கேன்"! "சாரிமா கொஞ்சம் லேட்டாச்சி..!!உரையாடல் நடத்திக்கொண்டே விரைவாக தனது பைக்கை செலுத்தினான் இளைஞன் அவன்.

           இவன் பார்க்கபோவது தனது தொலைபேசியில் தவறுதலாக வந்த அழைப்பில் எண்ணங்கள் சிறகடிக்க கைபேசியும் திரும்ப திரும்ப அடிக்க மௌனம் உடைந்து வார்த்தைகள் வளர்ந்து பலமுறை சந்திக்க முனைந்து இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது..!

         அவள் சொன்ன இடம் வந்து விட்டது.அண்ணா பூங்கா.உள்ளுக்குள் சிறுவர்கள் விளையாடிகொண்டிருந்தார்கள்.பெற்றோர்கள் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.வயதானவர்கள் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு "இழந்தவைகளை"எண்ணி கொண்டிருந்தார்கள்.மாலை நேரம் 6.30 என்பதால் கொஞ்சம் குளுமையாக இருந்தது.மேகங்கள் வட்டமிட்டு இருந்ததால் குளிர்காற்று உடலை சிலிர்க்க செய்தது.

          இவனது பார்வை பாவையை தேடியது.தேடல் மாமரத்தின் கீழ் நிலைக்குத்தியது.ஆம் மாங்காய்கள் அங்கு சிதறிக்கிடந்தன.மாங்கனியைபோல அவள் நின்று கொண்டிருந்தாள்.
நடுக்கத்துடனும் நிறைய ஆசைகளுடனும் அவளை நெருங்கினான்.

         அறிமுக உரையாடல்கள் நடந்தன.அவ்வுரையாடல் முடிந்ததும்  வார்த்தை தடை பட்டன.
      கண்கள் காதல் பேசின .நேரம் கடந்து கொண்டிருந்தன.

"என்னை உனக்கு பிடிச்சிருக்கா ..!?அவன் கேட்டான்.

அவள் மௌனித்தாள்.

""மணி  ஒன்பதரையாச்சி கிளம்புங்க...!! இது பூங்கா காவலாளி.

"கிளம்பிறோம் சார்.! என சொல்லிக்கொண்டே அவரது கையில் நூறு ரூபாயை திணித்தான்.

"சரி சரி! என சொல்லிகிட்டே அவர் கிளம்பிட்டார்.

அவர் போன கொஞ்ச நேரத்தில் அவனுக்கொரு இன்ப அதிர்ச்சி .
அவள் அவன் எதிர்பாராதபோது முத்தமிட்டாள்.

       இவன் "வாங்கியதை" கொடுக்க முயற்சித்தான்.அவள் ஓட்டம் பிடித்தாள்.இவன் துரத்தினான்.நேரம் பத்துமணிக்கு மேல் ஆனதால் கூட்டம் முழுவதுமாக குறைந்திருந்தது.இவனுக்கு சந்தோசமாக இருந்தது.
    
          ஓடியவள் மூச்சு வாங்கியவளாக ஒரு மரத்தின் கீழ் நின்றாள்.நல்ல இருளாக இருந்தது.இவன் ஆசை அலைமோத நெருங்கி கொண்டிருந்தான்.அவள் செல்ல சிரிப்புடன் "வேணாம் !வேணாம்"-
என்றாள்.

              படார் என மூக்கில் விழுந்தது .முத்தமல்ல அவனது முகத்தில் முரட்டு குத்து.சராமரியாக கண்கள் கன்னங்கள் மாறி மாறி விழுந்தது அடிகள்.நிலை தடுமாறினான் .அரைமயக்கதிற்கு உள்ளானான்.

              அவனது பணம், கை பேசி பைக் சாவி, தங்க சங்கிலி எல்லாம் கையாடபட்டது அடிதவர்களால் .அவர்களோடு உதவி புரிந்தாள் "மாங்கனி".இவன் முனங்கிக்கொண்டே ஏமாற்றாட்டதை உணர்ந்தான்.

                 இவனது பல்சர் கிளம்பி போகும் சப்தம் இவனுக்கு கேட்டது.இவனது முனங்கல் சப்தம்
யாருக்கும் கேட்கவில்ல்லை....!!
           

5 comments:

  1. கனகச்சிதமாகக் காரியத்தைச் சாதித்துள்ளாள் நங்கை.

    நல்ல அறிவுரைக் கதை. இன்று திருடர் கூட்டம் எப்படியெல்லாம் முயற்சி செய்து தம் கைவரிசையைக் காண்பிக்கின்றார்களெனக் கண்முன் காட்சியாகச் சிறுகதையில் காட்டினீர்கள்.

    அருமை! ரசித்தேன் உங்கள் கற்பனை மற்றும் எழுத்துத் திறமையை. .

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. உங்களிடமிருந்து வித்தியாசமான பகிர்வு... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல கதை..வாழ்த்துக்கள் சீனி!

    ReplyDelete
  4. சிறுகதை அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  5. தில்லியில் இது போல முகப்புத்தகத்தில் பெண் உருவம் வைத்து ஏமாற்றிய ஒரு ஆண் கதை நடந்தது.....

    நல்ல சிறுகதை.

    ReplyDelete