Friday, 15 November 2013

நன்றி! நன்றி!! (1000 மாவது கவிதை)

முளையிடும்-
கிளையினை-
கால்நடைகள்-
கடித்திடாமல்-
தடுக்கும்-
வேலிகள்!

விரக்தியின்போது-
அதன் சாயலைக்கூட-
துடைத்திடும்-
குழந்தையின்-
பிஞ்சுவிரல்கள்!

அடைமழை-
நின்றபின்பும்-
இலைகளின்-
தங்கி இருக்கும்-
மழை துளிகள்!

பிரிந்து-
" சென்றபின்னும்"-
இனிமை தரும்-
நினைவுகள்!

இதுபோலாகவே!
என் எழுத்தினை-
இவ்வளவு தூரம்-
பயணிக்க வைத்தீர்கள் !

கருத்துகளையும்-
ஆலோசனைகளையும்-
தந்தீர்கள்!

உங்களனைவருக்கும்-
மனமுவந்த-
நன்றிகள்!

இத்தனையும்-
எனக்கு !

அமைத்தளித்த-
இறைவனுக்கு! ?

காலமெல்லாம்-
கண்ணீர் வடித்தாலும்-
கண்ணின் ஒளிக்கு-
அது ஈடாகாது!

இதில்-
எண்ணற்றவற்றை-
அள்ளி சொரிந்தவனே-
உனக்கு -
நன்றி செலுத்திட-
வழியேது!?

இறைவா!
உன்னையே -
நான் வணங்குகிறேன்!

உனக்கு மட்டுமே-
வணக்கத்தை-
உரித்தாக்குகிறேன்!

//இனி கதைகளும் எழுதிட முயற்சிக்கிறேன்.இத்தருணத்தில் சொல்லி கொள்கிறேன்///






6 comments:

  1. அருமை! 1000மாவது கவிதைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
  2. எண்ணங்களைக் குவியலாக்கி
    இயற்றினீர் ஆயிரம்படைப்பு!
    மின்னிடும் வைரம்போன்றே
    மிகப்பெருமை தந்ததுமக்கே!
    எண்ணிக்கை ஏன்தோழா..
    எழுதிடு இன்னுமின்னும்!
    கண்டிடலாம் புகழ்மேலும்
    காலமெலாம் நண்பர்கூட!!

    மேலும் பல படைப்புகளைத்தந்து மின்னிடும் தாரகையாய்
    வலையுலக வானில் மிளிர நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துக்கள் சீனி! இன்னும் பல ஆயிரம் கவிதைகளும் பல ஆயிரம் கதைகளும் படைக்க இனிய வாழ்த்துக்கள்!
    இந்தக் கவிதையும் அருமை! அனைவருக்கும் நன்றி சொல்லி இறைவனுக்கே எல்லாம் அர்ப்பணித்து படைத்த வித அழகு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  4. 1000 கவிதைகள்..வியக்க வைக்கிறது.படிப்பதற்கு அலுக்காமல் நச்சென்று கவிதை சொல்லி பிரம்மிக்க வைக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் சகோ..இன்னும் பல்லாயிரம் கவிதை எழுதி அசத்துங்கள்.வாசிக்க காத்திருக்கிறோம்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துகள்....

    ReplyDelete