Monday 25 November 2013

பாரம்....! (சிறு கதை)

             தேசிய நெடுஞ்சாலை .இரு வழி சாலையில் கனரக வாகனங்களும் ரக ரகமான வாகனங்களும் மின்னலை தோற்கடிக்க முன்னூட்டம் காண்பது போல் பயணித்து கொண்டிருந்தது.அதிலொரு வாகனம் பயணத்தை யாருமே இல்லாத இடத்தில் ஒரு ஓரமாக நிறுத்தியது.உள்ளிருந்த இரு நடுத்தர வயதுடைய ஆடவர்கள் கண்ணசைவில் பேசினார்கள்."அதை"வெளியே தள்ளு என்கிற சம்பாசனை.!

              ஒருவன் முதலில் இறங்கினான்.பவ்யமாக "அதை"தாங்களாக இறக்கினான்.ஓரமாக "நிறுத்தி விட்டு"காரினுள் சென்று கதவடைத்தான்."முடிஞ்சதுடா.."என வாகனத்தை விரட்டினார்கள்.

               அவர்கள் விட்டு சென்றது
என்ன!? உபயோக படாத பொருளா..!? இல்லை உயிரற்ற பிணமா!? என்ன "அது"!? விட்டு சென்றவர்கள் யார்..!?இதனை அறிய பின்னோக்கி செல்லனும்.சிலவருடங்கள் பின்னோக்கினால் சிறு கதை ,பெரும் கதையாகிடும்.அதனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்ததை பார்ப்போம்.

                      இரண்டு தெருதாண்டி ஒருவன் வேகமாக வந்தான்.அந்த வேக நடையில் ஒரு கோபம் தெரிந்தது.வந்த நடை ஒரு அலுவலகத்தின் மேலாளர் அறையை அடைந்தது. கதவை திறந்து வேகமாக சென்றான்.வேகமாக திறந்த கதவு அசைந்து கொண்டிருந்தது.

   "என்னைய என்ன.!?கேனபயன்னு நினைச்சியா!?இன்னைக்கி தேதியென்ன..!? இன்னும் உன் வீட்டுக்கு "கொண்டு"போகாமல் இருக்கே.!?வந்தவன் கொந்தளித்தான்.கோபத்தை வார்த்தையில் கொப்பளித்தான்.

        "என்னையவும் என்னடா செய்ய சொல்றே..!?சனியனை  சுமந்தமாதிரி இருக்கு ..!?இப்படியே எவ்வளவு நாளைக்கு காலம்தள்ள..!?மேலாளர்.

    "அதுக்கு என்ன செய்ய சொல்றே!நான் தான் கிடைச்சேனா!?-வந்தவன்.

    " பொறு !யோசிப்போம்...!!-மேலாளர்.

    ஆடிய கதவு தள்ளாட்டத்தை நிறுத்தி விட்டது.கதவு சாத்திகொண்டது.பேசியது என்னவென்று தெரியவில்லை.முகபாவனைகளும் உடல் அசைவுகளும் ஒரு திட்டம் தீட்டபடுவது மட்டும் உறுதிபடுத்தியது. 

             "சரி நீங்க சொன்ன மாதிரியே..! முடிச்சிருவோம் ..!!-கதவை திறந்து கொண்ட வந்தவன் சொல்லிவிட்டு சென்றான்.

        அத்திட்டதைதான்  இன்றைக்கு செயல்படுத்தினார்கள்.தாய் இறந்து விட்டார்.பார்வையில்லாத தகப்பனைதான் "அது"வாக நெடுஞ்சாலையில் "தள்ளி"விட்டு சென்றார்கள்.அக்கயவர்கள்.

        குடும்பப்பாரத்தை சுமந்தவரை ஒரு பாரமாக எறிந்து சென்று விட்டார்கள்.

      இது கற்பனை கதையல்ல.நிஜகதையில் கொஞ்சம் கற்பனை .

7 comments:

  1. உண்மை நிகழ்வா? மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா/ நடுங்க வைக்கிறது

    ReplyDelete
  2. கொடுமை! ஆனால் உண்மையில் இது போன்று நடக்கத்தான் செய்கின்றன!

    ReplyDelete
  3. மனிதர்கள் வடிவில் அரக்கர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கசக்கும் உண்மைகள் காட்சிகள் மாற காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே..

    ReplyDelete
  4. இப்படியும் சில மனிதர்கள்.... கொடுமை....

    ReplyDelete