Saturday 30 November 2013

நான்கு முனை சந்திப்பு..!(சிறு கதை)

            நான்கு சாலைகளை இணைக்கும் போக்குவரத்து விளக்கு நிற்கும் இடம் அது.மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் இடம்.பலதரப்பட்ட மனிதர்கள் பல்வேறு மன சுமையுடன் செல்லும் இடம் அது. 

          அவ்விடத்தில் ஒரு சுவர் .அதனருகினில் ஓடும் சாக்கடை கால்வாய் நாற்றத்தை தந்தது.அது போதாதென்று மனித கழிவுகளும் கிடந்தது.தெரு நாய்கள், மேலும் கால் நடைகள் படுத்து கிடந்தது. 

          போவோரெல்லாம் விறு விறுவென்று சுவற்றை பார்த்தார்கள்.விகாரமாக பார்த்தார்கள்.வில்லங்கமாகவும் பார்த்தார்கள்.பிஞ்சுகளை "பழுக்க"வைத்தது."பழுத்தவைகளை" "அழுகிட" வைப்பது.எது எப்படியோ மோசாமான காட்சிதான் அது.அப்படியென்ன ..!?அச்சுவற்றில் எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.  

             "வனஜா இருக்கா தினுசா" -"பாப்பா போட்ட தாழ்பாள்"மேலும் கிளு கிளுப்பான காட்சிகள் .இன்று இப்படம் கடைசி.இதுபோன்ற சுவரொட்டிகள் .எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு ஆடை குறிப்புகள்.சுவர் முழுக்க அப்பட்டமான காட்சிகள் கொண்ட சுவரொட்டிகள்.

              அதன் ஓரத்தில் "பெண்கள் நாட்டின் கண்கள்"எனும் விளம்பரம்.சில மாடுகள் சுவரோடு உரசி தன் உடல் அரிப்பை தீர்த்தது.ஒரு மாடு மட்டும் "பெண்கள் நாட்டின் கண்கள்"எனும் வாசகம் கொண்ட சுவரொட்டியை நாக்கினால் நக்கி ஈரப்டுத்தியது.கொஞ்சம் இலகுவானவுடன் பல்லினால் கடித்து தின்ன ஆரம்பித்தது.

      தாலிக்கு தங்கம் இலவசம் கொடுத்து .அந்த தாலிக்கு பங்கம் விளைவிக்கும் டாஸ்மாக் தெருவெங்கும் இருப்பது போல.ஊரான் கண்களுக்கு அங்கங்களை வியாபாரமாக்கி விட்டு அது என்ன .!?பெண்கள் நாட்டின் கண்கள் என கடுப்புல அந்த சுவரொட்டியை கடிதிருக்கும்போல.அந்த அறிவுள்ள மாடு.

2 comments: