Sunday 1 December 2013

புது முகம்..!(சிறு கதை)

          சூரியன் மறைவதற்கான அறிகுறியானது.மாலை நேரம்தான் அது.வெப்பம் குறைந்துகொண்டிருந்தது.சூடான ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு வீட்டை நோக்கி வந்தார்கள்.அவர்களின் வேகத்தை கண்டு அவ்வூரின் பெரியவர்களும் என்னமோ ஏதோவென்று பின் தொடர்ந்தார்கள்.வரும் வழியிலேயே "வேகத்தின் காரணத்தை " புரிந்துகொண்டார்கள்.

          அவ்வீடு வந்துவிட்டது.பழைய மாடி வீடு அது."வாழ்ந்து கெட்டதை"சொல்லாமல் சொல்லியது.வளர்ந்திருந்த கட்டிடமும் அதிலிருந்த சிதிலமும்.
வீட்டிற்கு முன் கூடியவர்கள்.

       "அடியே ..!நீ!வெளியே வாரியா...!?நாங்க உள்ளே வரவா..!?இது ஒருவன்.

     "அவ எப்படிடா வருவா..!?......!! காதில் விழக்கூடாத வார்த்தையில் இன்னொருவன். 

இப்படியான வார்த்தைகள் கொட்டியது.ஆத்திரமும் அசிங்கமும் கலந்தவைகளாக.

          வீடு பூட்டி இருந்தது .உள்ளே நோயாளி தகப்பனும்  ,வயதான தாயும் ,18 வயது பெண்ணும் ,25 வயது பெண்ணும் ,30 வயதை தாண்டிய பெண்ணும்,
இருந்தார்கள்.தேடி வந்தது இதில் மூத்த பெண்ணைத்தான் .இவர்களுடன் ஒரு புதியமுகமும் இருந்தது.45 வயது கடந்திருக்கும்.யார் இந்த பெண்மணி கதையின் ஓட்டத்தில் அறிந்துகொள்வோம்.வெளியில் சப்தமும் வார்த்தைகளும் தடித்தன.இவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.அந்த புதிய முகம் கதவை நோக்கி நடந்தாள்.கதவை திறந்தாள்..!வெளியிளிருந்தவர்களுக்கு அதிர்ச்சி யார் இவளென்று..!!

        "ஏய்..! நீ யாரு..!?அவளை வர சொல்லு...!ஒருவன்.ஊர் பெரியவர் அவ்விளைஞனை தடுத்தார் .தொடர்ந்தார்.

       "யாரம்மா..!?நீ..! புதுசா இருக்கே..!என்றார்.

    "அய்யா பெரியவரே!கொஞ்சம் உக்காந்து பேசுவோமே..!?என்றார் பெண்மணி.

        "அதெல்லாம் முடியாது..!அவளை கூப்பிடு..!இது கூட்டத்தில் ஒருவன்.

        " அட !பொறுமையா இருங்கப்பா..!? என்றவர்."சரி! உக்காருங்க எல்லோரும்..!என அவர் உட்கார்ந்துவிட்டார்.

           அவ்வீட்டு திண்ணையில் முக்கியஸ்தர்களும் .மற்றவர்கள்  நின்றுகொண்டும் பார்த்துகொண்டிருந்தார்கள்.
    
       "சரிம்மா..!! யாரு நீங்க..!?-இது பெரியவர்.

          "நான் கருணை காப்பக நிர்வாகி .அந்த பெண்ணோட நிலையை நீங்க புரிஞ்சிக்கணும்..!என அப்பெண்மணி பேசி கொண்டிருக்கும்போதே..!

       "அந்த "ஓடி போனவளுக்கு"நீங்க என்ன வக்காலத்தா..!?என ஒருவன் கேட்டு விட்டான்.

          பொறுமையாக இருந்த அப்பெண்மணி.கொதித்து விட்டார்.
"ஆமாங்க ! அவ ஓடி போனவள்தான் .எவன் கூடவும் ஓடி போகல.வீட்டை விட்டுதான் ஓடி போனாள்.தானொருத்தி முதிர்கன்னியாக இருப்பதால் மற்ற தங்கசிகளுக்கு வரன் அமையாதுன்னு ,தன்னை மாய்த்து கொள்ள வந்தவளை,சிலர் காப்பாற்றி எங்க காப்பகத்தில் சேர்ந்தாங்க.இவ்வளவு பேசுறீங்களே உங்களோட வரதட்சணை எனும் பிச்சை காசாலேதானே !இப்படி பட்ட கேவலமெல்லாம் நடக்குது,அதை ஏன் நீங்க நிறுத்த முடியல.உங்க ஊர் பொண்ணுதானே அவளுக்கு ஒரு வாழ்கை அமைச்சி கொடுக்க முடியல..!காசு வாங்கிட்டு ஒரு பொண்ணு "தப்புக்கு" உடந்தையினா கேவலமான பேரு , வரதட்சணை வாங்குற ஆம்பளைக்கு என்ன பேரு சொல்றது.....!!  என பொரிந்து தள்ளி கொண்டே போனார்.அப்பெண்மணி.

         வந்தவங்க ,உட்கார்ந்து இருந்தவங்க,எல்லோரும் வாயடைத்து போய் கேட்டு கொண்டிருந்தார்கள்.

       வீட்டினுள்ளோ  அபலை பெண்களும் ஏழை தகப்பனும் கண்ணீரில் கரைந்தார்கள்.இயலாமையாலும் வறுமையாலும்.......!!!

6 comments:

  1. வரதட்சணைக் கொடுமை எத்தகையது என்பதை
    மிக அழகாகக் கதையில் சொன்னீர்கள்.

    காட்சிப்படுத்தலும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களை
    நாசூக்காகச் சொன்னவிதமும் ரசனை!

    நல்ல கதை. தொடருங்கள் சகோ!....
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சரியான சாட்டையடியுடன் பாடம் ..!

    ReplyDelete
  3. வரதட்சணை கொடுமை பற்றிய சிறுகதை..... நன்று.

    ReplyDelete
  4. சிறுகதை அருமை... தொடர வாழ்த்துக்கள் நண்பா...

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  5. நல்ல ஒரு தலைப்பு எடுத்து அழகாக எழுதி இருகிறீர்கள். அருமை
    தொடர வாழ்த்துக்கள்....! இனி தொடர்கிறேன்

    ReplyDelete