Monday, 9 December 2013

கரு..! (சிறு கதை)

            நடுத்தரமான வீடு அது  .வீட்டின் முன் நான்கு கால் கொண்ட பந்தல்.அங்கும் இங்குமாக சிறு சிறு கூட்டங்கள்.கொதிக்க வைத்த பாலினை அரிப்பை கொண்டு தடை செய்யாமல், அப்படியே செய்யப்பட்ட தேநீரில் திட்டு திட்டாக ஒதுங்கி இருக்கும் பாலாடை போல்.அவரவர் யோசனையில் பலவாறாக சிந்தனைகள்.பல்வேறு பேச்சுக்கள்.கவலை தோய்ந்த முகங்கள்.அங்கலாய்ப்புகள்.

      "என்னய்யா..!! இது ..!? இப்படி பண்ணிருச்சய்யா..!!-ஒருவன்.

      "என்ன செய்ய.!?அந்த கிழவி வேற திட்டிகிட்டே இருக்குமா..!?மற்றொருவர்.

    "அதுக்காக இப்படியா!?-முதலாமவர்.
     "அவுக கஷ்டம் .அவுகளுக்கு..!இரண்டாமவர்.
        "நல்ல ஆஸ்பதியிரியிலும் பார்த்துக்கிட்டுதான் ,அந்த பொண்ணோட புருசனும்.,புள்ளையில்லன்னு..!

   "சரி !அதோட விதி அவ்வளவுதான்!"

       இப்படியான பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தது.தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணோட வீட்டின் முன்பாக.அதே நேரம் பெண்ணின் ரத்த உறவுகள் வந்தார்கள்.டாடா சுமோவில் வேகமாக வந்திறங்கியவர்கள்.கதறலுடன் வீடு நோக்கி, ஓடி வந்தார்கள்.அக்கூட்டத்திலிருந்த இறந்த பெண்ணோட அண்ணன்.வீட்டிலிருந்த தங்கச்சி மாப்பிள்ளை  சட்டையை பிடித்திழுத்தான்.

     "பாவிகளா..! எந்தங்கச்சியை கொன்னுடீங்களேடா..!என மல்லுக்கு நின்றான்.

          மற்றவர்கள் அவர்களது சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.வயதில் மூத்தவர் சொன்னார்..!

   "ஏய்..! என்னப்பா நீ..!அவனோட மல்லுக்கு நிக்கிறே..!?அந்த பொண்ணு செஞ்சது அவரு என்ன செய்வாரு..!"என்றார்.

       "தங்கச்சி......!!!"என பெருங்குரலோடு உட்கார்ந்தான்.

      இத்தனை களேபரங்கள் ,மத்தியில் ஒருத்தி மட்டும்.மனதுக்குள் குழம்பினாள்.அவள் சாவு ஏனென்று அறிந்தவள்.இறந்தவளும்,இவளும்தான் ,ஜோசியக்காரனை பார்க்க போனவர்கள்.இறந்தவளின் ஜாதகத்தை பார்த்த அவன்.இந்த ஜென்மத்தில் உனக்கு குழந்தை பிறக்காது என்றான்.அப்போது அழ ஆரம்பித்தவள்.மறு நாள் பார்க்கையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள்.இவ்வுண்மையை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்,அவள் தொடர்ந்து அழுதாள். அதே நேரம்...


          அவளது உடல் அரசு மருத்துவ மனையில், பிரேத பரிசோதனை நடந்தது.காரணம் கண்டறிந்தார்கள்.கொலையா.!?தற்கொலையா .!?என்பது போன்ற கேள்விகளுக்கு ,அந்த சோதனை அறிவிப்பில் (ரிபோர்ட்)பதில் இருந்தது.அதில் ஒரு உண்மையிருந்தது.அது தெரியாமல்தான் அந்த அபலை தூக்கில் தொங்கியது.

ஆம் அவள் "கரு தரித்திருந்தாள்..!"

4 comments:

 1. அடடா...
  அவசரம் எப்படியெல்லாம் துன்பத்தை உருவாக்கிப் போகிறது.
  சமூகம் கேட்கும் பல கேள்விகளுக்கும்
  உறவுகளின் முறைதவறிய பினாத்தல்களுக்கும்
  பயந்து சிலர் இப்படி தன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
  கதை மனம் கனக்கச் செய்துவிட்டது சகோதரரே.

  ReplyDelete
 2. தவறான பழக்க வழக்கத்தினால்...

  ReplyDelete
 3. சகோதரருக்கு வணக்கம்
  படித்தவுடன் கண்களில் கண்கள் ஈரமாவதைத் தவிர்க்க முடியவில்லை சகோதரரே. இன்றைய சூழலில் ஏமாற்றத்தைத் தாங்கும் மனவலிமை குறைந்து விட்டதே காரணம். எல்லாம் அவசரம். பெற்றால் தான் குழந்தையா! தத்தெடுத்துக் கொள்ளும் எண்ணம் இன்று பலருக்கும் இல்லாமல் போவது வேதனை தான். இந்நிலைமை மாற வேண்டும்.

  ReplyDelete
 4. மனதினை பாதித்தது அந்தப் பெண்ணின் தற்கொலை.....

  ReplyDelete