Friday 22 November 2013

அர்த்த ராத்திரி...!(சிறு கதை)

     "சுஜி! சுஜி! எழும்பலையா.!?என அறைத்தோழி எழுப்பினாள்.எழுந்த சுஜி கைபேசியை பார்த்தாள்.மீண்டும் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுக்க முயற்சித்தாள்.

       "என்னப்பா..!!கொஞ்ச நாளாவே ரொம்ப "டல்லாவே " இருக்கியே என்ன..!?என அறைத்தோழி கேட்டாள்.

       "ஒன்னும் இல்லை !எப்பவும் போலதானே இருக்கேன்."!கண்களை மூடிக்கொண்டே பதிலுரைத்தாள்.
  
    "இல்லையே !ஒரு மாசத்துக்கு முன்னாலே நான் அவசரமா ஊருக்கு போயிட்டு வந்தேனே .அப்ப இருந்தே பாக்குறேன் ஒரு "மாதிரியா"இருக்கியே! எதையும் பார்த்து பயந்துட்டியா...!!?என கனிவுடன் கேட்டாள்.

    "அதெல்லாம் இல்லை..!!-என சுஜி சொன்னாள்.

     " அப்ப காலேஜுக்கு இன்னைக்கும் வரலையா..!? இது அறைத்தோழி.

      சுஜியிடமிருந்து பதிலில்லை அந்த மௌனத்தில் வரமாட்டேன் எனும் அர்த்தம் புதைந்திருந்தது.

     "சரிப்பா..!! நான் கிளம்புறேன் -என ஆடைகளை சரிசெய்துகொண்டு காலேஜுக்கு தோழி கிளம்பி விட்டாள்.

        கதவை சாத்தி விட்டு நடந்தால் அவளது நடை சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.உடனே சுஜி எழுந்தால் கைபேசியை எடுத்தாள் ஒரு எண்ணுக்கு அழைத்தாள்.

"ஒரு பாதி கதவு நீயடி ....!!"என பாடி முடிந்தது.எதிர் முனையில் பதிலில்லை.திரும்ப திரும்ப முயற்சிக்கிறாள்.பதிலில்லை.

          சில மணிகள் கழிந்தது.மீண்டும் மீண்டும் "அழைப்புகள் "தொடர்ந்தது.ம்ஹும் பதிலில்லை.

        வயிற்றை தடவி பார்த்தாள்.வெட்கமும் இயலாமையும் "பலியானதும்"எண்ணியவுடன், ஓ!வென அழுதாள்.அறைத்தோழி அவசரமாக ஊருக்கு சென்றபோது அந்த அர்த்த ராத்திரியை எண்ணி பார்த்தாள்.குழுங்கி குழுங்கி அழுதாள்.

     ஆம் அன்றிரவு வேட்டை நாயொன்று அவளது கற்பில் வேட்டையை நடத்திவிட்டது.அந்நாய் காதல் எனும் முகமூடியுடன் வந்திருந்தது.சமயம் பார்த்து வேட்டையை முடித்தது."அடையாளத்தையும்"அவளுக்குள் விதைத்து சென்றுவிட்டது.

         அவள் அழுது அழுது கைபேசியில் அழைக்கிறாள்.பதில்தான் இல்லையானதும்,கண்ணீரில் நனைகிறாள்......!!

2 comments:

  1. அடக் கொடுமையே.... காதல் எனும் பேரில் பல ஓநாய்கள் இப்படி பெண்களை பலிகடாக்களாக ஆக்கிவிடுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது....

    ReplyDelete