Monday, 28 May 2012

கூட்டு குடும்பம்!



கூட்டு பொரியல்-
உணவுக்கு சுவை-
கூட்டும்!

கூட்டு குடும்பமே-
சந்தோசத்தை -
கூட்டும்!
--------------------------
சொன்னாங்க-
கூடி வாழ்ந்தால்-
கோடி நன்மை!

நடப்பதிங்கே-
'கோடிகளால்'-
பிளவுபடும்-
கொடுமை!
-------------------------------------
வண்டி இழுக்கும்-
ஜோடி மாடுகள்!
தாயும்-
தந்தையும்!

கழண்டிடாமல்-
காக்கும் அச்சாணிகள்-
ஆச்சாவும்(பாட்டி)
அப்பாவும்(தாத்தா!)!

பயணிக்கும் -
கூழங்கள்-
பெற்ற பிள்ளைகள்!

இன்றைய -
தலை முறையோ-?
தடை என எண்ணி-
அச்சானிகளை கழட்டுவது-
போல!

மூத்தவர்களை-
ஒதுக்குகிறோம் -
குப்பையை போல!

அவசர கதியில் -
'வேகமாக'செல்ல!

பெற்றவர்களை-
முனைகிறோம்-
முதியோர் இல்லத்தில்-
தள்ள!

ஆம் -
இன்று நாம்-
இருக்கிறோம்-!
அரசு கண்டுக்காத -
வரலாற்று சின்னங்களை-
போல!

உறவுகள்-
'இருந்தும்' -
'இல்லாதது 'போல்-
அலைகிறோம்-
நாதியற்றவர்களாக!
--------------------------------------
விவகாரத்தும்-
கொலைகளும்-
நடப்பது அதிகம்-
தனி குடித்தனத்தில்-
உளவியல் உண்மை!

காரணம்-
கருத்துவேறுப்படும்போதும்-
'கடமை'தவறும்போதும்-
கட்டு படுத்த-
மூத்தவர்கள் இல்லாததே-
பேருண்மை!
-----------------------------------









20 comments:

  1. ரெம்ப அற்புதமான கவிதை சகோ
    கூட்டு குடும்ப நம்மைகளையும்
    அது இல்லாத குடும்பங்களின் அவல நிலையையும்
    ரெம்ப அழகா சொல்லி இருக்கீங்க


    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான வார்த்தை பிரயோகம் .., கலக்குறீங்க தல .. :)

    ReplyDelete
    Replies
    1. suvadukal!


      ungal karuthuku mikka nantri!

      Delete
  3. கூட்டுக்குடும்பம் பற்றி அழகான கவிதை.
    பாராட்டுக்கள்.

    இதே கருத்தை என் “அந்த நாளும் வந்திடாதோ” வில் எழுதியிருந்தேன்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html

    ReplyDelete
  4. Vaalththukkal nanba.........

    Arumaiyana kavithai kudumpaththai pattri mika atputham

    ReplyDelete
  5. காலக் கொடுமையாலும்
    சுயநல அரக்கனின் பிடியாலும்
    இன்று குடும்பங்கள் சிதறுண்டு போய்
    காணப்படுகின்றன..
    தேன்கூடு போன்ற கூட்டுக்குடும்பத்தில்
    பிரச்சனைகள் பல இருந்தாலும்
    தேனான சுவை தரும் என்பது
    நிதர்சனமான உண்மை நண்பரே...

    ReplyDelete
  6. கூட்டுக் குடும்பம் மிக மிகச் சந்தோஷம்.என் அம்மம்மா இருந்த காலத்தில் கூட்டாக இருந்தோம்....அவ போக எல்லாமே போனமாதிரி !

    ReplyDelete
  7. அருமையான கருத்து.
    பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  8. அழகான ஆழமான கவிதைங்க சீனி.

    ReplyDelete
  9. arouna!

    marumozhikkum ungal varavukkum mikka nantri!

    ReplyDelete
  10. கூட்டு குடும்பத்திற்காக கூட்டும் பொரியலும் கொண்டு சுவையோடு உண்மை வரிகளை கவிதையாய் படைத்ததற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. அருமை சகோ....

    ReplyDelete