Thursday 10 May 2012

என் தாயே...

சுவர்ல -
சுற்றி இருக்கும்-
கம்பி!

செடியில ஒட்ட-
வரும் தும்பி!

உன் பேத்தி-
மதிலில் கிறுக்கிய-
கோடுகள்!

கவிழ்த்து-
வைத்து இருக்கும்-
சட்டிகள்!

காற்று வரும்-
சன்னல்கள்!

மின்னலை தடுக்கும்-
திரை சீலைகள்!

அரிந்த மீனை-
தின்ன வரும்-
பூனை!

கழிவிட கிடக்கும்-
கரி படிந்த-
பானை!

அம்மி கல்லு!
ஆட்டு உரலு!

வாசலில் கிடக்கும்-
செருப்புகள்!

மூலையில் கிடக்கும்-
வாரு அறுந்து -
போனவைகள்!

என் தாயே!
இத்தனையும்-
இருக்கு உன்னோட!

உன் தியாகங்கள்-
மட்டும் என் நெஞ்சோட!

பொருளாக நான்-
இருந்திருந்தால்-
பிரயோசனம்-
பட்டிருப்பேன்!

போக்கத்தவன்-
நானோ-
கவலை தானோ-
தந்திருப்பேன்!?

தாயே!
வெயிலை விட-
வாட்டிடும்-
குளிரு!

உனக்கு உபயோக -
பட்டிருப்பேனா!?-
இந்த பதறு!

உன் கோபத்தை-
அடித்து விடுவாய்-
தாங்கி கொள்வேன்!

நீ-
பாசம் மிகுந்தால்-
அழுதிடுவாய்!
அதிலே நான்-
கரைந்திடுவேன்!

எனக்கு ஒன்னும்-
ஆசை இல்லை-
ஊரு மெச்ச-
வாழனனும்னு!

உள்ளத்துல உறைந்திருக்கும்-
உண்மை!
"மிச்ச " காலத்திலாவது-
உன்னை கலங்க-
விடாம பார்த்துக்கணும்னு!

உங்களது பெற்றோரை-
"சீ" என்றுகூட-
சொல்லாதீர்கள்!-
இறை மறை!

அறிவுடையவர்களே!
இதில் நம்முடைய-
நிலை!?

16 comments:

  1. //என் தாயே!
    இத்தனையும்-
    இருக்கு உன்னோட!

    உன் தியாகங்கள்-
    மட்டும் என் நெஞ்சோட!//

    உணர்ந்து உணர வைக்கும் கருத்துக்கள் உள்ள கவிதை.

    பெற்றவள் என்றும் நமக்கு பெரியவள்
    அவள் இல்லாமல் உலகு இல்லை
    ஏன் நாமே இல்லை

    அருமையான கவிதை


    படித்துப் பாருங்களேன்


    சென்னையில் வாங்கலாம் வாங்க

    ReplyDelete
  2. seenu!

    ungal varavukkum-
    karuthukkum mikka nantri!

    ReplyDelete
  3. :::::::::::::))))))))))))நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  4. தாயை போற்றும் கவிதை படைத்த சீனிக்கு ராயல் சல்யூட்

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. உள்ளத்துல உறைந்திருக்கும்-
    உண்மை!
    "மிச்ச " காலத்திலாவது-
    உன்னை கலங்க-
    விடாம பார்த்துக்கணும்னு!//
    உணருவார்களா தெரியவில்லை வரிகள் உண்மை சொல்கின்றன .

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete
  6. உள்ளத்துல உறைந்திருக்கும்-
    உண்மை!
    "மிச்ச " காலத்திலாவது-
    உன்னை கலங்க-
    விடாம பார்த்துக்கணும்னு!
    >>
    ஒவ்வொரு பிள்ளைக்கும் இந்த பொறுப்புணர்வு வந்துட்டா உலகத்துல முதியோர் இல்லங்களே இல்லாம போய்டும். பொறுப்புணர்வு கொண்டு கவி படைத்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. raji!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  7. யாதர்த உறைப்பு.நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. vimalan!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  8. அழகான கவிதை!
    எதார்த்தமான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. yuvaraani!

      ungaludaya varavukku-
      mikka makizhchi!
      nantri!

      Delete
  9. மனதை நெகிழ வைக்கிறது வரிகள்.அம்மா எனுப்போதே பாசம்,கருணை,அன்புதானே சீனி.அன்பு வாழ்த்துகள் உங்கள் அன்னையின் ஆசி கேட்டு !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungaludaya varavukkum-
      karuthukkum mikka nantri!

      en thaayidamum-
      solkiren neengal kettathai!

      Delete