Friday, 9 March 2012

பெண்மை!

பெண்ணே!
கொடுத்த பணத்தை-
திருப்பி கொடுக்காத-
உலகம் இது!

ஒரு துளியை-
 குழந்தையாய் தரும் -
பெட்டகம்-
நீ!

ரத்ததானம் வாழ்வில்-
ஒரு தரம்கூட-
கொடுக்காதவர்கள்-
எத்தனையோ!!

ரத்தத்தை பாலாக-
கொடுக்குற-
 தாய்மையே-
நீ!

பூமியை பிளந்து-
வெளிவருது-
எரிமலை!

ஆணுக்கு பாசம்-
பரிவு வர காரணியே-
நீ!

அலைக்கழிக்க படும்-
துடுப்பு இல்லாத படகு-
ஆற்றில்!

அர்த்தமற்றதாக ஆகும்-
தாரம் இல்லாத-
வாழ்வில்!

இருளடஞ்ச வீட்டையும்-
மகிழ்ச்சி வெள்ளத்தில்-
வெளிச்சம் தருபவள்-
நீ!

அருமை!-
மென்மை !-
இனிமை!-
இத்தனையின்-
கூட்டணியே -
நீ!

பெண்மையே-
அன்று -
உன்னை -
அடிமை படுத்தியது-
மடமை காலம்!

இன்று -
உன்னை -
அடிமை படுத்துவது-
நவீன -
"அறியாமை" காலம்!

அன்று-
கட்டாயமாக்க பட்டது-
தேவதாசி-
முறையானது!

இன்று-
அது சிகப்பு-
விளக்கு பகுதியானது!

அன்று-
மன்னருக்கு-
சேவக பெண்கள்!

இன்றோ-
சுற்றுலாகாரர்களுக்கு -
பெண்ணை ஆடவைத்தும்-
காலை கழுவ வைத்த-
"யோக்கியர்கள்"!

அன்று-
அரசனை மகிழ்விக்க-
நடன மணிகள்!

இன்று-
இரவு நேர விடுதிகள்!

அன்று -
அதற்கு பேர் -
அடிமைத்தனம்!

இன்று-
பேர் மட்டும்-
மாற்றம்-
சுதந்திரம்!

இருபக்கம்-
இருந்தால்தான்-
நாணயம்!

விண்ணும் மண்ணும்-
இருந்தால் தான்-
உலகம்!

ஆணும்-
 பெண்ணும் தான்-
மானுடம்!

அடங்கித்தான் -
கிடைக்கணும்-
என்பதல்ல-
என் வாதம்!

கண்ணியம் -
காக்க படவேண்டுமே-
என்பதே !-
என் ஆதங்கம்!

சொல்லுவாங்க-
கிராமத்துல -
சேலையில முள்ளு பட்டாலும்-
முள்ளு மேல சேலை பட்டாலும்-
பாதிப்பு சேலைக்குத்தான்-
என்று!

இப்பொழுது நம்புகிறேன்-
பெண்களே!-
உங்களுக்கு புரிந்து -
இருக்கும் -என்று!

6 comments:

  1. *ஒரு துளியை குழந்தையாய்-
    தரும் -பெட்டகம்

    பெண்மையின் மேண்மை

    *ரத்தத்தை பாலாக-
    கொடுக்குற தாய்மையே

    தாய்மையின் உன்னதம்

    *ஆணுக்கு பாசம்-
    பரிவு வர காரணியே

    பெண்மையின் அழகு

    *அர்த்தமற்றதாக ஆகும்-
    தாரம் இல்லாத-
    வாழ்வில்

    இறைவனின்
    ஆண்களுக்கான ஜென்ம
    வரப்பிரசாதம்
    பெண்மை


    மேண்மையான
    உன்னனதாமான பெண் இனத்தின் பெருமையும் சிறப்பும் சொல்லும்
    அருமையான கவிதைகள்

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞரே

    ReplyDelete
    Replies
    1. seythali ;
      ungal varavukkum-
      ungal karuthukkum-
      urchaaka moottalukkum-
      mikka nantr!

      Delete
  2. உங்களுக்குள்ளும் தாய்மை பீறிடுகிறது சீனி.அன்பான உங்களுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal varavukkum-
      karuthukkun-
      mikka nekizhchiyaana-
      nantri!

      Delete
  3. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. josepine !
      ungaludaya muthal-
      varvukkum karuthukkum-
      mikka nantri!

      Delete