தீண்டாமை-
பெருங்குற்றம்-!
அறிவிப்பு!
பள்ளிகூடத்தில்-
தண்ணி பானை அருகே-
இரு குவளை-
நடப்பு!
---------------------------
நான் என்றால் உதடு-
கூட ஒட்டாது!
நாம் என்றால் தான்-
உதடுகள் கூட ஒட்டும்!
அறிவிப்பு!
தலைவர் பதவிக்கு-
தொண்டர்களுக்கிடையே-
கோஷ்டி சண்டை-
நடப்பு!
-----------------------------
விரைவாக செல்லும்
வழி-அறிவிப்பு!
விரைவு பேருந்து மோதியதில்-
பலகை மாற்றி காட்டிய-
இடம் சுடுகாடு-
நடப்பு!
--------------------------------
குடித்து விட்டு வாகனம்-
ஒட்டாதீர் - அறிவிப்பு!
இங்கு "பார் " வசதியும்-
"பார்க்கிங்" வசதியும்-
உண்டு!-
நடப்பு!
-----------------/---------
சாராயம் முற்றிலும்-
ஒழிக்க பட்ட கிராமம்!-
அறிவிப்பு!
ஊருக்கு நடுவே-
டாஸ்மாக் உள்ளது-
நடப்பு!
----------------------
பெண்கள் நாட்டின்-
கண்கள் -அறிவிப்பு!
"செம கட்டை"-
இன்று கடைசி காட்சி-
நடப்பு!
----------------------
இந்தியா ஒளிர்கிறது-
அறிவிப்பு!
"அவர்களை" தான்-
தமிழ் நாடு "தேடுகிற "சூழல்-
நடப்பு!
--------------------------
மண்ணை காக்கும்-
மரம் !
மனிதனை காக்கும்
தன் மானம்-!
அறிவிப்பு!
"பதவியில" உள்ளவங்க-
வண்டி டயரில்- "விழுவது"
நடப்பு!
-------------------------
வாய்மையே வெல்லும்-
அறிவிப்பு!
"கூட்டு மனசாட்சியை-"
திருப்தி படுத்த தீர்ப்பு-
நடப்பு!
-----------------------------
ஒன்றே குலம்-
ஒருவனே தேவன்-
அறிவிப்பு!
"தொழில்கள்" முறையில்-
துண்டாட படுவதுதான்-
நடப்பு!
-----------------------------
யதார்த்தத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள
ReplyDeleteமுரண்களை சொல்லிப் போன விதம் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayyaa!
Deleteudan varavukkum-
karuthukkum mikka nantri!
வரிகளில்
ReplyDeleteநம் சமூகத்தின்
சித்திரம்
அருமை பாராட்டுக்கள் தோழரே
seythali;
Deleteungaludaya urchaaka moottalukkum
azhakiya karthukkum -mikka nantri!
நயமான சாடல் நன்று நண்பா
ReplyDeletenantri!
Deletethalaivaa!!
மிக மிக எதார்த்தமான பதிவு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசமூக நிகழ்வுகளை மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது தங்களது வரிகள்!
yuvaraani;
Deleteunagal varavukkum-
karuthukkum!
mikka nantri!
இதுதான் நல்லாயிருக்கென்று குறிப்பிட முடியவில்லை சீனி.ஆரம்பம் முதல் அனைத்துமே உண்மைதானே எனத் தலையாட்ட வைக்கிறீர்கள் !
ReplyDeleteHemaa!
Deleteungaludaya varavukku-
mikka nantri!