Sunday, 25 March 2012

சூடு.."!

உணர்த்தும்-
தணலையும்-
மார்கழியையும்!

வதங்குவது-
எண்ணையிலிட்ட-
வெங்காயமும்!

தங்கி விட்ட-
அவளின் நினைவால்-
நானும்!


இத்தனை-
மாயம்-
செய்தது!

உரசி சென்ற-
கன்னியவளின்-
மூச்சு காத்து!
------------------
என்ன சொல்ல-
அவளின்-
கோப பார்வையை!

மிஞ்சியும்-
எரித்தும் -
விட்டது-என்
கவிதையை!
-----------------
எனக்கு-
இரு ஆசைகள்-
இருக்கு!

பூவின் இதழை-
"இழுத்து"-
போர்த்தி கொள்ள!

என்னவளின்-
உள்ளங்கை சூட்டில்-
ஒடுங்கி கொள்ள!
------------------------
விழுந்து விட்டதாம்-
ஒசோணுல-
ஓட்டை!

கூட்டியதாம்-
சூரியன்-
சூட்டை!

பழியோ-
சூரியன் மேல-
மறந்தது-
அழித்த காட்டை!
------------------------

உருகுது-
பனி மலை!

உயருது-
கடலின் நீர் நிலை!

எல்லோரும் ஜோரா-
கைதட்டுங்க!-
நாம தொரக்குறோம்-
அணு உலை!!!?
------------------------
அழகே-
நீ!-
எரி ஏவுகனையா?
தீ சுட்டனுக்கு செய்யும்-
முதல் உதவியா!?

கூடங்குளத்தை-
ஆதரிக்கிரவங்களா!?
ஹரிபூராவை-
எதிர்தவங்களா!?

எந்த" தோழர்"களை-
தேர்ந்தெடுக்க-
அறிவாளிகளா!?
-----------------------
சம அளவு-
இருக்க வேண்டும்-
எடை!

தற்காப்பு கலையின்-
விதி முறை!

நிராயுத பாணி-
மக்களை சுடுவது-
யுத்தம் என-
சொல்வது-
அழகில்ல!

--------------------------

7 comments:

  1. விடு கதை போலும் பதிவு அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikala;
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. 'சூடு' கவிதை ரொம்ப சூடாவே இருக்கு. என்ன செய்ய சீனி? காட்டை அழிக்கிறவனுக சூடு வச்சாலும் திருந்தமாட்டானுக போல.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. இதழை இழுத்துப் போர்த்தும் ஆசை,ஓசோனின் ஓட்டை பழியோ சூரியனிடம் எல்லாமே எப்பவும்போல அருமை !

    ReplyDelete
  4. எமக்குள்ளும் சூடேற்றிப் போகுது
    தங்கள் படைப்பு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ayya ramani avarkale!
      ungal varavukkum -
      karuthukkum mikka nantri!

      Delete