Friday, 24 February 2012

வட்டி!

மூட்டை பூச்சி-
ரத்தத்தை -
உறிஞ்சும்!j

வட்டி-
வாழ்வையே-
உறிஞ்சும்!

பூச்சி-
பெருகும்-
அழுக்கு உள்ள-
இடத்தில்!

அழுக்கு பெருகும்-
வட்டி வாங்குபவன்-
மனதில்!

வட்டி மேல்-
வட்டி போட்டு கொடுக்கலாம்-
பாசத்தை!

மொதலுக்கு-
மேல் வட்டி வாங்கி-
அடையாதே-
பெரும்பாவத்தை!

வாங்கியவன்-
தற்கொலைக்கு-
தள்ளபடுகிறான்!

வட்டிக்கு கொடுப்பவன்தான்-
தற்கொலைக்கு தள்ளியவன்-
ஆகிறான்!

இருக்கு -
கணக்கு-
தற்கொலை செய்த -
 விவசாயிகள்-
எண்ணிக்கை!

ஏன் சொல்லல-
அது வட்டியினால்-
வந்த விளைவை!?

சொல்ல பட்டது-
வட்டி இன்றி-
உலகில்லை!

உணர பட்டது-
வாழ்வை கெடுப்பது-
வட்டி இன்றி-
வேறில்லை!

ஊளை இடபடுது-
உலகில் பொருளாதார-
வீழ்ச்சியை!

காரணம்-
வட்டியின் வளர்ச்சியே!

பைசா வட்டி-
ஒரு ரூபாய் வட்டி-
அஞ்சு ரூபாய் வட்டி-
மீட்டர் வட்டி-
பேர்கள் உண்டு -
வட்டியில!

ஆனால்- 
சீரழிவில்-
வித்தியாசம் இல்ல!

செலவை குறைக்காமல்-
வட்டியில் விழுபவன்-
"அரை முட்டாள்"!

சந்தர்பத்தை பயன்படுத்தி-
வட்டிக்கு விடுபவன்-
"முழு அயோக்கியன்"!

4 comments:

  1. கடனில்லாத வாழ்வைப் பழகிக்கொள்ளவேணும் சீனி !

    ReplyDelete
    Replies
    1. hemaa!
      ungaludaya karuthu
      ennai ezhuthida thoondum!
      maikka nantri!

      Delete