பெத்தவ அடித்தும்-
சோறு தராமல் -
இருந்தும்!
நேசித்தவள்-
திட்டியும்-
பேசாமல் இருந்தும்!
"வந்தவ"-
வெறுத்தும்-
கவலையோட இருந்தும்'
விடல-
விடவும் பிடிக்கல!
சொன்னாள் -
மகள்-
"வீசுது" -
விடு-என
ஆட்காட்டி விரலை-
நீட்டி கொண்டு!
கோபத்தில் பல்லை-
கடித்து கொண்டு!
யோசிக்க கூட -
இல்ல!
அன்று முதல்-
புகை" பிடிக்கல"!
ஏனோ தூக்கம் -
தர மறுக்குது-
இரவு!
உறுத்திக்கொண்டு இருக்குது-
மனது!
என் உயிரின் வரவான-
மகள் சொல்லும்படி -
நடந்து கொண்டதுக்கும்!
என் மேல் உயிராக இருந்தவர்களின்-
பேச்சை கேட்காமல்-
நடந்து கொண்டதுக்கும்!
முன் வினை பின்-
சுடும் என்பார்களே-
அது இதுதானோ!?
என் உயிரின் வரவான-
ReplyDeleteமகள் சொல்லும்படி -
நடந்து கொண்டதுக்கும்!
என் மேல் உயிராக இருந்தவர்களின்-
பேச்சை கேட்காமல்-
நடந்து கொண்டதுக்கும்!
அருமை அருமை
இந்த ஒப்பீடு என மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Ramani ayya!
Deleteungaludaya karuthukku-
varavukkum mikka nantri!
ஒருபுறம் இப்படி அடிமையாகி கிடக்கும்
ReplyDeleteஅவர்கள் நிலையை
நினைத்தால் பாவமாக இருக்கும்.
நீங்கள் அவரைத் திருத்தி இருப்பது
ஒரு உன்னதமான காரியம்.
தொடர வாழ்த்துக்கள்.
srawani;
Deleteungaludaya karuthukkum-
varavukkum mikka nantri!
நல்ல அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...... தொடரட்டும் உங்கள் பணி,,,,,
ReplyDeleteputhiya thentral!
Deleteungal varavukkum-
karuthukkum -
mikka nantri!
“பெத்தவ”,
ReplyDelete“நேசித்தவ”,
“வந்தவ”,
“மகள்”.
அழகான வரிசை. ஆணின் தந்தை பாசத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள். அருமை. பகிர்வுக்கு நன்றி!
supramaniyan!
Deleteungal varavukkum-
karuthukkum mikka nantri!
பிள்ளைகளை நீங்கள் திருத்துவது போக பிள்ளைகளே உங்களைத் திருத்தினால் இதைவிட வாழ்வில் அடி வேறென்ன வேண்டும்.அதுதான் மனம் குறுகுறுக்கிறது !
ReplyDeletehemaa!
ReplyDeleteungal varavukkum
karuthukkum nantri!
naanaavathu makal
sonna pirakaavathu thirunthitten!
innum thurunthaavangalai-
ennaiyum serththu nallaa thittunga!