Sunday 5 February 2012

தாய் பால்..!

சுத்தமானது!
சுகாதாரமானது!

அன்பானது !
அவசியமானது!

கொதிக்க வைக்க-
தேவை இல்லாதது!

குறைவில்லா -
சத்து மிக்கது!

விலை பேச -
தேவை இல்லாதது!

விலைமதிப்பு -
இல்லாதது!

"கொடுப்பவருக்கு"-
மார்பு புற்று நோய் -
வாய்ப்பை குறைவாக்குவது!

பெறுபவருக்கோ-
நாற்பது ஆண்டு காலம்-
சத்து கொடுப்பது!

மேலை நாடுகள்-
கடைபிடிக்க -
அறிவுறுத்துவது!

கீழை நாடுகளில்-
நடப்பில் உள்ளது!

என்னாது?-
அது!

தாய் பால்-
கொடுப்பதுதான்-
அது!

மார்ல பாலை-
கொடுத்தவளையே-
முதியோர் இல்லத்துல-
தள்ளுற காலம் இது!

பால் பவ்டரில்-
காலம் தள்ளுரவங்களே-
உங்க நிலைமை-
என்னாவது?

No comments:

Post a Comment