Friday, 7 September 2012

நரகாசுரன்....

பட்டாசு ஆலை!
பஸ்பமாக்கியது-
பல உயிர்களை!

கரு மருந்து-
கிடங்கு அது!
கருமாதி-
நடத்தி விட்டது!

பட்டாசு வெடித்து-
தீபாவளி-
கொண்டாட்டம்!

தீபாராதனை-
செய்து விட்டது-
பட்டாசுகள்-
வெடித்து!

ஒரு முறை நடந்தால்-
அடக்கலாம்-
விபத்து என்று-
பெயருக்குள்!

தொடர்ந்து -
நடக்கிறதே-
இது சாட்சியம்-
கூறுகிறது-
"உரிமையாளனின்-"
பொடுபோக்கிற்கு!

கேட்க முடிகிறது-
நிவாரண உதவி-
அறிவிப்பை!

பணம்-
நிவர்த்தி செய்யுமா-
அவர்களின் "இழப்பை!?"

சென்று இருப்பார்கள்-
வேலைக்கு!

பிள்ளைகளின்-
படிப்பிற்கு!

தீபாவளி-
உடுப்பு-
எடுப்பதற்கு!

ஐயோ..!!-
சேர்ந்து விட்டார்கள்-
சுமையாக-
"பாடைக்கு"!!

பட்டாசு ஆலைக்கே-
நம் மக்களின்-
உயிரை காப்பாற்ற-
முடியலியே!

கூடங்குளம்-
நினைத்தாலே-
நடுங்குகிறது-
ஈர குலையே!

போபால் விஷ வாயு-
கசிவுக்கு காரணமானவர்கள்!

கால் நூற்றாண்டு-
ஆகியும் -
இழப்பீடு கூட-
கொடுக்காதவர்கள்!

சிவகாசி -
மக்களை எரியவிட்டவனுங்க!

"தப்பிக்க"-
வழி வகை-
செய்யாதவனுங்க!

அஸ்ஸாமில் -
அலற அலற-
அப்பாவிகளை-
அடித்து உதைத்தவனுங்க!

சுத்தும் பூமியை-
ரத்த பூமியாக்குபவனுங்க!

நரகாசுரன்-
கொடுங்கோலன்னு-
சொல்றாங்க!

அப்பாவிகளின் -
துச்சமென நினைக்கும்-
இவனுங்களை-
என்னனு-
சொல்றதுங்க.....!!?27 comments:

 1. அருமையான கவிதை. கவிஞரே உணர்ச்சி பூர்வமான வரிகள்.
  // பணம் வேண்டாம் அப்பாவை எனக்கு திருப்பி தாருங்கள் // என்று கதரும் சிறுமி. இச்சிறுமிக்கு ஆறுதல் கூறுபவர் உளரோ?
  தங்களின் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை வதைக்கும் இந்த ஈவு இரக்கமற்ற அரக்கர்களை ஒடுக்க வேண்டும்.
  இறைவா! இந்த அரக்கர்களின் அந்நியாங்களை ஒடுக்க ஒரு அவதார எடுக்க மாட்டாயா?

  ReplyDelete
  Replies
  1. arasan

   ungal varavukku mikka nantri!

   Delete
 2. சமயத்துக்கேற்ப அருமையான வரிகள்.சாட்டயடி.தொடருங்கள்.

  ReplyDelete
 3. ஒரு முறை நடந்தால்-
  அடக்கலாம்-
  விபத்து என்று-
  பெயருக்குள்!......

  மீண்டும் நடந்தால் அலட்சியமே காராணமாகும் !

  ReplyDelete
 4. மிகவும் பொறுப்புள்ள சமூக கோபமுள்ள பதிவு வாழ்த்துகள் அன்பரே

  ReplyDelete
 5. //என்னனு-
  சொல்றதுங்க.....!!?//

  என்னத்த கேட்டாலும் ஒரு பதிலும் கிடைக்காது - இது முடிவல்ல தொடரத்தான் செய்யும்...

  ReplyDelete
  Replies
  1. manasaatchi!

   nam ezhuthinaal-
   silar thirunthalaam-
   athanaal naam thodaralaam!

   varavukku mikka nantri!

   Delete
 6. சமூக எழுச்சி கவி.........

  அருமை............

  ReplyDelete
 7. எத்தனை சொன்னாலும்....

  புரியவில்லையே அரசுக்கு... மொத்தமாக வாங்குவதை நாமும் நிறுத்தி விடவேண்டியதுதான்....

  ReplyDelete
  Replies
  1. sako nagaraj!

   mikka nantri!

   "moththamaaka "vaanguvathai...
   ethai solkireerkal -
   enakku puriyavillai!

   Delete
 8. நல்ல ஆதங்கப் பதிவு! இவர்களை திருத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்!

  இன்று என் தளத்தில்
  அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

  சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

  ReplyDelete
 9. கவிஞசர்கள் பொய்யர்கள்.... ஆனால் என்று ஒரு கவிஞசன் சமூக பாதிப்புகளை கவிதையாக்குகிரானோ.... அன்றுதான் அந்த கவிதைக்கு உண்மையான மதிப்பு ஏற்படுகிறது. சரியான தருணத்தில் வரையப்பட்ட ஒரு கவிதை. நன்றி சீனி அவர்களே.

  ReplyDelete
 10. வணக்கம்

  சின்ன சின்ன மலரெடுத்துச்
  சோ்த்துக் கட்டும் மாலையென
  எண்ண எண்ணச் சுவைபெருகும்
  எழுத்தைக் கண்டு வியக்கின்றேன்!
  பின்னப் பின்ன முழுமையெறும்
  வண்ணப் பூபோல் சீனிகவி
  மின்ன மின்ன இவ்விருத்தம்
  என்னுள் வந்து பிறந்ததுவே!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
  Replies
  1. ayya barathi thaasan!

   ungal muthal varavukkum-
   ungalai pontra periyavarkalin-
   karuthum ennai melum-
   koor theettum!

   mikka nantrikal ayya!

   Delete
 11. சகோ உங்கள் முகநூல் நண்பரில் என்னையும் இணைக்கவும்,..ப்ளீஸ் எனது முகநூல் முகவரி..தொடர்பு கொள்ளவும்.இது ஒரு நட்பு வேண்டுகோள்...https://www.facebook.com/sathishbsf?ref=tn_tnmn

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் இந்த முகவரிக்கு மெயில் பண்ணவும்...sathishbsf@gmail.com

   Delete
 12. மனதைப் பாதித்த விஷயம் !

  ReplyDelete