Tuesday, 25 September 2012

அதுவா!? இதுவா!?

 மழை துளிக்காக-
சிப்பி திறந்திருக்கா!?

சிப்பி திறந்திருப்பதால்-
மழை துளி-
அதில் விழுகிறதா!?

உடலுக்காக-
உயிரா!?

உயிருக்காக-
உடலா!?

மலர் என்றாலே-
அழகா!?

அழகேன்றால்தான்-
மலரா!?

நீதிவான்களை-
கண்டறியவே-
அநியாயங்கள்-
நடக்கிறதா!?

அநீதிகள் நடப்பதால்தான்-
நியாயவான்கள்-
உருவாகிறார்களா!?

பூமிக்காக-
மழையா!?

மழைக்காக-
நீர் ஆவியா!?

துன்பங்கள்-
இன்பத்தை-
அடையாள படுத்தவா!?

இன்பத்தின் இனிமையை-
ருசிக்க செய்வது தான்-
துன்பமா!?

பசிக்காக-
உணவா!?

உணவுக்காக-
பசிக்கிறதா!?

வாழ்வுக்காக-
தேடலா!?

தேடும் வரைதான்-
வாழ்வா!?

சிந்தனையால்-
எழுத்தா!?

எழுதுவதால்-
சிந்தனையா!?

அதுவா!?
இதுவா!?

சொல்ல முடியல-
எதுவா!?

இரண்டுக்கும்-
உறவுண்டு!

பார்க்க முடியா-
பிணைப்பு உண்டு!

அதுபோல்தான்-
நம் வாழ்வுக்கும்-
முடிவுண்டு!

"முடிவுக்கு"பின்-
நம் செயலுக்கு-
"கூலி" உண்டு!!



22 comments:

  1. எல்லாமே ஒன்றுடன் ஒன்று பொருந்தித் தான் ஆக வேண்டும் என்பதை பொருந்தச் சொல்லி இருகிறீர்கள்

    ReplyDelete
  2. அருமையான ஆழமான சிந்தனையின்
    வெளிப்பாடாக அமைந்த கவிதை
    உள்ளம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இரண்டும் இரண்டிற்காகவும் தான்...

    ReplyDelete
  4. அது தான் இது,,, இது தான் அது,,,

    நல்ல பகிர்வு ம்ம்ம்ம்,,,

    ReplyDelete
  5. எவ்வளவு அழகா கோர்வையா.......கடைசில..


    தீர்கமான சிந்தனை

    ReplyDelete
  6. அருமையான சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  7. மிகவும் அருமை...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  8. மிக அருமையான கவிதை ....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. பினிஷிங் சூப்பர் தல!

    ReplyDelete
  10. பார்க்க முடியா-
    பிணைப்பு உண்டு!
    அருமையான வெளிப்பாடு.

    ReplyDelete
  11. அதுபோல்தான்-
    நம் வாழ்வுக்கும்-
    முடிவுண்டு!

    "முடிவுக்கு"பின்-
    நம் செயலுக்கு-
    "கூலி" உண்டு!!
    //அட்டகாசம்..!

    ReplyDelete
  12. முதல் சில வரிகள் 'கொடி அசைந்ததும் காற்று வந்ததா?' பாடலை நினைவு படுத்தியது.

    கடைசி வரிகளில் நீங்கள் வைத்த முத்தாய்ப்பு அசத்தல்.
    கூலி உண்டு என்பதை பலர் மறந்து விடுகிறார்கள்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. narayanan!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete
  13. ஒன்றில்லாமல் ஒன்றில்லை சீனி.பிணைந்த வாழ்வுதானே !

    ReplyDelete
  14. இறுதியில் முடித்த வரிகளில் மிகப் பெரிய உண்மை தெரிகிறது

    ReplyDelete