Saturday, 15 September 2012

காதலெனும் தேர்வில்.....(1)

 சுடும் சூரியனையே-
சுட்டிடும்-
விழி கொண்டவள்!

மிதிபட்ட களிமண்-
என்னை-
மண் பானையாக்கி-
பிரயோசனம் செய்தவள்!

சென்றவள்-
சிரித்து விட்டு!

எனக்கு "புரை"-
ஏற்றிவிட்டு!

உஞ்சந்தலையில்-
உள்ளங்கையால்-
தட்டிடுவாள்!

உள்ளங்கை சூட்டை-
நெஞ்சு குழி வரை-
செலுத்துவாள்!

தொண்டை குழியில்-
சுடு சோறாய்-
இறங்கியவள்!

வயிற்றில் பரவும்-
காலை நேர-
தேநீரும் அவள்!

கோடைகால -
மழையும் அவள்!

மழைக்காலத்தில்-
வெயிலும் அவள்!

நிழலை விட-
நெருக்கமானவள்!

தூக்கத்தை விட-
நிசப்தமானவள்!

பேசியே-
சிறைபிடித்தவள்!

பேசாமல் இருந்து-
சிதற வைத்தவள்!

சிரித்தே-
சில்லிட வைத்தவள்!

சிரித்து பேசி-
சில்லு சில்லாய்-
ஆக்கியவள்!

"பொத்து "போன-
என் கால்களுக்கு-
பூக்கள் போல்-
இதம் தந்தவள்!

சட்டையின் -
மேல் பித்தானை-
மாட்டிவிட்டவள்!

ஒரு நெடிய-
பிரிவுக்கு பின்-
அவளை தேடி-
போகிறேன்!

கண்டவுடனே-
"தொலைத்து" கட்டபோகிறேன்!

ஆம்-
மனதில் -
கொலை வெறி!

இடுப்பில்-
கூரிய கத்தி.!

(தொடரும்....)






18 comments:

  1. பொத்துப்போன போன பாதங்களுக்கு
    பூப்போல ஒத்தடம் கொடுத்தவளை
    கொலைவெறியோடு தேடும்
    நியாயம் என்ன நண்பரே??.....

    ReplyDelete
    Replies
    1. maken sir!

      mikka nantri!

      innum varum....
      niyaayam!

      Delete
  2. காதல் முற்றிய போது வெறி வரத்தான் செய்யுமோ? அருமை!

    ReplyDelete
  3. காதலியைக் காணச் செல்லும் போது கூரிய கத்தி எதற்கு நண்பரே!

    //பேசியே-
    சிறைபிடித்தவள்!

    பேசாமல் இருந்து-
    சிதற வைத்தவள்!// பேசினாலும் பேசாவிட்டாலும் பிரச்சனைதான்... :)

    ReplyDelete
    Replies
    1. nagaraj sako!

      vanthamaikku mikka nantri!

      innum sollukiren....

      Delete
  4. என்ன நடக்கப் போகுதோ... தெரியலையே...

    ReplyDelete
  5. சீனியும் என் கட்சிபோல இருக்கே !

    ReplyDelete
  6. ஆகா... தொடருவதில் ஆர்வமாக இருக்கிறேன்

    ReplyDelete
  7. Chacha Ungal Kavithaikal Anaithum azhakahavum,Arputhamahavum Irukku.
    Ungalukku Enathu Vazhthukkal..!

    ReplyDelete