Monday, 17 September 2012

காதலெனும் தேர்வில்...(2 )

கத்தி எடுப்பவனா!?-
நானெல்லாம்!

காரணம் அறிய-
படியுங்கள் -
பின்வருபவைகள்-
எல்லாம் !

எப்பொழுது போலவே-
பொழுது புலர்ந்தது-
அன்று!

எனக்கு தெரியவில்லை-
என் சந்தோசத்திற்கு-
கடைசி நாள்-
அதுவென்று!

வழக்கமான-
பணி இடம்!

ஏதோ மாற்றம்-
கண்டேன்-
என்னவளிடம்!

மேலும் பதற்றத்துடன்-
வந்தாள்-
சிநேகிதி ஒருத்தி!

அவள் காதோரம்-
சொன்னாள்-
செய்தி!

கலக்கமடைந்த-
முகத்தில் தெரிந்தது-
அதிர்ச்சி!

என்னருகில் -
வந்தாள்!-சொன்னாள்!
போயிட்டு வந்து விடுகிறேன்-
என்று!

"போனவள் -"
வரவில்லை-
ஒரு வேளை மறந்துபோனாளோ-
அன்று!

அணையாமல்-
இருந்த -
அலைபேசி!

அவளுக்கு -
அழைத்து அழைத்து-
தொடர்பில்லாமல்-
அலுத்து போச்சி!

இனி -
அவளினை-
தொடர்பு கொள்ள-
வாய்ப்பில்லை!

அவளின்-
நண்பியும்-
அன்றோடு பணிக்கு-
திரும்ப வில்லை!

அணு அணுவா-
கொல்லும்-
அணு உலை!

அதற்க்கு -
எவ்வளவோ-
பரவாயில்லை-
கடல் அலை!

கூடன்குள மக்கள்-
இந்நிலைக்கு-
தள்ளப்பட்டது-
அவல நிலை!

போராடவும்-
அவர்களுக்கு-
தடை!

சாகவும்-
தடை!

அந்நிலையே-
என் நிலை!

நினைக்கவும்-
முடியலை!

மறக்கவும்-
முடியலை!

அவளில்லாமல்-
ஒவ்வொரு நொடியும்-
நகர மறுத்தது!


அவள் மேல்-
கோபமோ -
விசமாக -
ஏறியது!

காலம்-
கடந்து கொண்டிருந்தது!

என் தலையணை-
கண்ணீரில் -
நனைத்து கொண்டிருந்ததுj


என் அலைபேசி-
அலறியது!

எதிர்முனையில்-
என் நண்பன்-
குரல்!

பிரயோசனம்-
ஆனது -என்
தேடல்!

நண்பன்-
தந்தது-
அவளின் முழு-
தகவல்!

திருமணம்-
ஆகிவிட்டதாம்!

குடும்பமாக-
ஒரு ஊரில்-
இருக்கிறாளாம்!

கூடாது-
"விடவே "கூடாது-
என்றது-
மனம்!

பழிவாங்க-
ஆயுதத்துடன்-
பேருந்தில்-
பயணம் !

சன்னலோர இருக்கை-
தந்தது-
சில்லென்ற காற்றை!

மனம் கனன்று -
கொண்டிருந்தது-
கொல்லென்று-
அவளை!

(தொடரும்)

21 comments:

  1. கவிதை கதையின் இடை செருகல் கூடங்குளம்.....ம் செம பொருத்தம்

    அடுத்து என்ன?

    ReplyDelete
  2. நல்ல கவிதை ......



    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. அருமையான கவிதை நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க

    ReplyDelete
  4. ஒரு காதல் கதை தொடர்கிறது....தொடரட்டும் சீனி !

    ReplyDelete
  5. இடையிடையே இணைக்கப்படும் சமூக நிலையும் அழுத்தமாய் பதிகிறது மனதில் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நண்பா முந்திய பதிவினை படிக்கத் தவறியவிட்டேன்
    படித்துவிட்டு வருகிறேன்
    ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது

    ReplyDelete
  7. நல்ல பதிவு...

    http://tk.makkalsanthai.com/2012/09/seo-emarketing-tips-mind-business-profit_18.html

    ReplyDelete
  8. கவிதையில் ஒரு க(வி)தை... அடுத்த பதிவு எப்போ...?

    ReplyDelete
  9. // அணு அணுவா-
    கொல்லும்-
    அணு உலை!

    அதற்க்கு -
    எவ்வளவோ-
    பரவாயில்லை-
    கடல் அலை!

    கூடன்குள மக்கள்-
    இந்நிலைக்கு-
    தள்ளப்பட்டது-
    அவல நிலை!

    போராடவும்-
    அவர்களுக்கு-
    தடை!

    சாகவும்-
    தடை!

    அந்நிலையே-
    என் நிலை!

    நினைக்கவும்-
    முடியலை!

    மறக்கவும்-
    முடியலை!
    // அருமையாகவுள்ளது.பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  10. கவித்தொடரா.....?
    தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete