Friday, 21 September 2012

அறிவுக்கு பொருந்தும்....!!?

வயது வேகத்தில்-
"வாழ்ந்தார்கள்"!

"வாழ்ந்ததால்-"
பிறந்தவர்கள்!

வயசான -
பெற்றவர்களை-
கவனிக்கணுமா!?

"மாங்கு ,மாங்கு"-என
படித்தவர்கள்!

மனைகளைஎல்லாம்-
விற்று மருத்துவர் ஆனவர்கள்!

நோய் என வருபவர்களிடம்-
நியாயமா நடக்கணுமா!?

அரை மணி நேரம்-
தாமதமானாலும்-
அரைநாள் சம்பளம்-
அம்போவென ஆகும்போது!

அடிபட்டு கிடப்பவரை-
ஆஸ்பத்திரியில்-
சேர்க்கனுமா!?

சத்தான உணவை-
உண்டு-!
"கெத்தா " ரத்தம்-
சேர்த்ததை!
யாருக்கோ!?-
ரத்தம் தானம்-
செய்யனுமா!?

எங்கோ-
 இயற்கை சீற்றம்!
இங்கே நாம்-
உணவு பொருட்கள்-
அனுப்பனுமா!?

கஷ்டப்பட்டு தான்-
உழைச்ச காசை-
கஷ்டபடுபவர்களுக்கு-
கொடுக்கனுமா!?

கோடி கணக்குல-
செலவுபண்ணிய-
அணு உலையை-
மூடியே போடணுமா!?

அறிவுபூர்வமான-
பதில்-
தேவை இல்லாதது!

அன்புபூர்வமான-
பதில்-
தேவையானது!

அறிவுக்கு மட்டும்-
இடம் கொடுத்து-
பதில் தேடுவது-
அபத்தம்!

அறிவோடு அன்பு-
கலந்த தேடலே-
பொருத்தம்!

அறிவியல்-
உலகம் இது!

அன்பா!?-
அப்படின்னா!?-என
கேட்கும் -காலம்
இது!

அதன் விளைவே-
உலகம் சுடுகாடாகுது!


ஏழைக்கு உதவுங்கள்-என
கையை நீட்டினார்-
ஒருவர்!

நீட்டிய கையில்-
எச்சியை துப்பினார்-
எதிர் இருந்தவர் !

இது எனக்கு-
மறுகையை நீட்டி-
கேட்டார்-
ஏழைக்கு!?

வெட்கி தலை குனிந்தார்-
தவறு செய்ததற்கு!

கை நீட்டி-
உதவி கேட்டவர்-
அன்னை தெரசா!

எந்த தீர்வுக்கும்-
அறிவுடன் அன்பும்-
இருக்கணும்-
முழுசா!!

"அளவற்ற அருளாளன்-
நிகரற்ற அன்புடையோன்"-
படைத்த இறைவன்!

அன்பு கலந்த-
நெஞ்சம் உள்ளவன்தான்-
மனிதன்!





12 comments:

  1. /// அன்பா!?-
    அப்படின்னா!?-என
    கேட்கும் -காலம்
    இது!


    எந்த தீர்வுக்கும்-
    அறிவுடன் அன்பும்-
    இருக்கணும்-
    முழுசா!! ///

    அப்படியே கவிதையையே copy and paste செய்யலாம்... அவ்வளவு அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. \\"நீட்டிய கையில்-
    எச்சியை துப்பினார்-
    எதிர் இருந்தவர் !

    இது எனக்கு-
    மறுகையை நீட்டி-
    கேட்டார்-
    ஏழைக்கு!?

    வெட்கி தலை குனிந்தார்-
    தவறு செய்ததற்கு!

    கை நீட்டி-
    உதவி கேட்டவர்-
    அன்னை தெரசா!"//

    மிக அருமையான கவிதை.....பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. கவிதை நல்லா இருக்கு..இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  4. அறிவுக்குப் பொருந்தும்
    கருத்தான கவிதை நண்பரே.

    ReplyDelete
  5. அவசர உலமென்று பெயரையே மாற்றி வைத்திருக்கிறார்கள் சீனி.சுயநலத்தோடுதான் ஓட்டம்.திரும்பிப் பார்க்க நேரமேயில்லை.பார்ப்பவர்களுக்கும் பைத்தியக்காரப் பட்டம் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      unmai thaan nalla ullangalum-
      ullathu maruppatharkillai!

      varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  6. நல்ல கவிதை நண்பா

    ReplyDelete

  7. "அளவற்ற அருளாளன்-
    நிகரற்ற அன்புடையோன்"-
    படைத்த இறைவன்!

    அன்பு கலந்த-
    நெஞ்சம் உள்ளவன்தான்-
    மனிதன்!// மேலுள்ள பாரா 100க்கு 100 உண்மை.அடுத்தபாரா????????:)

    ReplyDelete
    Replies
    1. sadiqa sako!

      ungal varavukkum karuthukkum-
      mikka nantri!

      Delete