Sunday, 30 September 2012

வினோதங்கள்....

உள்ளாடைக்கு மேல்-
முழு ஆடை-
சராசரி-
என்பது!

முழு ஆடைக்கு மேல்-
உள்ளாடை-
அபாரம்-
என்பது!

உள்ளாடை தாண்டி-
முழு ஆடை தொங்குவது-
புதுமை என்பது!

பதவி வந்தவுடன்-
புதிய சட்டமன்றம்-
மூடப்பட்டது!

நாசமா போன-
டாஸ்மாக் அடைப்பு-என்ற
செய்தி-
பொய்யாய்போனது!

அவதூறு கூட-
பெண்களை கூறுவது-
பாவமாக கருதப்பட்டது!

அந்தரங்கங்களை-
படம் பிடித்து-
காசு பார்க்கும்-
கேவலங்கள்-
நடக்குது!

ஆனாலும்-
சுதந்திரம் என்று-
நயவஞ்சக நரியிடம்-
சிக்குவதும்-
தொடர்கிறது!

பதவி ஏற்பில்-
வறுமையை ஒழிப்போம்-என
சூளுரைப்பது!

குடும்பத்தோட-
வெளிநாடு போய்-
சுற்றுவது!

அதிர்ச்சி தந்தது-
முன்னாள் அதிபர்-
பதவிகால செலவு-
207 கோடி என-
படித்தது!

தேசம் பிரிவதற்கு-
முன்னால் வந்தவர்கள்-
ஊடுருவியவர்களாம்!

பிரிந்த பின்-
வந்த "இடிப்பு" புகழுக்கோ-
பிரதம ஆசையாம்!

யாரும் ஊடுருவவில்லை-என
எல்லை பாதுகாப்பு படை-
சொல்லுது!

நாட்டை கெடுக்கும்-
நாதாரிகள் -தொடர்
பொய் பிரச்சாரம்-
பண்ணுது!

மக்கள் தொகை-
பெருக்கத்திற்கு-
கல்வியறிவு இல்லாததே-
காரணமாம்-
மாண்பு மிகு-
சொன்னது!

தகப்பன்மார்களே-
நம்மளை-
எந்த "இடத்தில்"-
வைப்பது!

துப்பாக்கி சுடும்-
பயிற்சி எடுத்தான்-
ஒருவன்!

அவனை காண-
வந்தான்-
நண்பன்!

அதிர்ச்சியாகி விட்டான்-
வந்தவன்!

ஆம்-
அனைத்து "துளைகளும்-"
வட்டத்திற்குள்-
இருந்ததை பார்த்தான்!

"சுட்டவனிடம்-"
கேட்டான்-
வந்தவன்!

குறி தவறாமல்-
சுடும்-
நீ!
போட்டிகளில்-
ஏன் வெற்றி-
பெறுவதில்லை!?-
என்று!

பதில் சொன்னான்-
போட்டியின்போது-
வட்டம் போட்டு-
அதில் சுட-
சொல்கிறார்கள்!-
இங்கே நான்-
சுட்ட பிறகு-
வட்டம் போட்டுகொள்வேன்-
என்று!

இப்படித்தான்-
யாரும்-
தப்புகளை தெரிந்தபின்னும்-
திருத்திக்கொள்ள முயல்வதில்லை!

அதற்க்கு -
தர்க்கம் செய்து-
நியாய படுத்த -
தவறுவதில்லை!







11 comments:

  1. உண்மை நண்பா..
    வினோதங்கள் என்று நாம் அடையாளப்படுத்துவதுவல்ல வினோதங்கள் இதுகள் தான் வினோதமாக இருக்கிறது...

    வினோதங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கிறது

    ReplyDelete
  2. இன்றைய நிலைமையை சொல்கிறது... அருமை.. முடிவிலும் உண்மை வரிகள்...

    ReplyDelete
  3. எல்லாமே விநோதமாதான் இருக்கு

    ReplyDelete
  4. இத்தகைய வினோதங்கள் இந்தியாவில் தான் அதிகம், ஏன் என்றால் அதிகமாக ஏமாளி மக்கள் இந்தியாவில் உள்ளனர்..
    உணரவேண்டிய பல விஷயங்களை நீங்கள் பதிந்துள்ளீர்கள்... நல்ல படைப்பு தோழரே...

    ReplyDelete
  5. எனக்கு ஏனோ வலியுடன் படித்தேன் நண்பா ...

    ReplyDelete