Saturday, 29 September 2012

மழையும்-என் மன நிலையும்!

மழை வருவதற்கான-
அறிகுறி!-
 குளிர்ந்த காற்று!

மனம் தரும்-
காற்று-
என்னவள் "சுவாசித்த"-
காற்று!
-------------------
கொட்டி தீர்க்கும்-
மழை!

அநியாயமா-
"தீர்க்கப்பட்ட"-
உயிர்களுக்காக-
கண்ணீர் அஞ்சலி -
போல!
----------------------------
இடி முழக்கத்துடன்-
கூடிய மழை!

கதறுவது போல்-
என் உணர்வலை!

காரணம் -
வெங்காயம்விற்பவர்-
தீவிரவாதியாம்!

விசா மறுக்கப்பட்டவர்-
பிரதம வேட்பாளராம்..!!!
------------------------------
முள்ளை மிதித்து விட்டு-
முள்ளு குத்தியது-
என்பது போல்!

தாமதமாக-
கிளம்பி விட்டு-
பேருந்து தாமதம்-
என்பது போல்!

மரங்களை -
வெட்டி விட்டு-
பருவமழை-
 பொய்த்து விட்டது-என்பது!
வேடிக்கையா இருக்கு-
"முன்னே "குறிப்பிட்டது -
போல்!
------------------------
சில துளி-
மழை என்றாலும்-
மண் வாசம் வீசுது!

அழகிய காஷ்மீரே-
உன் மண்ணில்-
ரத்த "கவுச்சி-"அல்லவா!
வீசுது!

அழகென்றால்-
ஆபத்து-
என்பார்கள்!

அழகு பூமியே-
உன்னையும்-
ஆபத்து என்று-
பொய் பரப்புகிறார்கள்!
----------------------------
வானம் கூட-
மேகம் எனும்-
ஆடை பூண்டுள்ளது!

வெட்கங்கெட்ட -
மனுஷ ஜென்மம்-
ஆடை அணிந்தும்-
தேகங்களை காட்டுது!
----------------------------


13 comments:

  1. சரவெடி.....கேள்விகள்

    ReplyDelete
  2. எத்தனை எத்தனை உண்மை கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. வீட்டுக்கு வெளியவும் மழை, மானிட்டருக்குள்ளயும் மழையா?

    ReplyDelete
    Replies
    1. raaji sako!

      pinnoottame...
      kavithaiyaaka....

      Delete
  4. உண்மைகள் வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது

    ReplyDelete
  5. எல்லாமே அருமை ஆனாலும் கடைசி...மனசில் அடிக்கிறபோல இருக்கு !

    ReplyDelete
  6. அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete