Friday, 29 June 2012

விறகு சுமப்பவளே....



பொடி சுள்ளிகளையும்!
விறகு கட்டுகளையும்-
சுமப்பவளே!

உன் "சுமையை"-
மாத்திடதான்-
ஒரு நாதியும் இல்ல!

உச்சந்தலையை-
அழுத்தாம இருக்க-
"சும்மாடு"- துண்டு-
தலைக்கு!

உன் மன அழுத்தத்தை-
குறைக்க ஏதும்-
வழி இருக்கு!?

"மணந்தவனோ"-
மானங்கெட்ட மது-
மயக்கத்திலே!

மனசே இல்லாதவங்க-
டாஸ் மாக்கை திறக்குறவங்க-
ஆட்சியிலே!

நீ!
விறகு பொறக்குறது-
அடுப்பு எரிய!

மின்சாரமே கனவு-
போல வருமா?-தெரியல
விளக்கு எரிய!

இல்லை மின்சாரம்-
மின் பொருட்கள்-
இலவசம்!

உறங்க முடியாது-
உண்ணாம -
உணவு பொருளை-
வாங்குனால் !-
போகணும் பரதேசம்!

வேகமா விறகுகளை-
கட்டி விடு!

அதிகாரி கண்ணில்-
படாமல்-
சென்று விடு!

வனத்துறை அதிகாரி-
பார்ப்பாரேயானால்-
உனது ஆயுதத்தை-
பறிமுதல் செய்து-
விடுவார்!

"பேரழிவு"ஆயுதம் என-
வழக்கும் போட்டிடுவார்!

"மொட்டை" அருவா-
ஒரே சொத்து-
உனக்கு!

அதிகாரிக்கோ-
பதிந்து விட்டதில் சந்தோசம்-
ஒரு வழக்கு!


ஒருவன் ஹீரோ ஆக-
ஒருவனை வில்லன் வேஷம்-
போடுவது போல!

அதிகாரிகள்-
மெடல்கள் வாங்க-
அப்பாவிகளை சுட்டு விட்டு-
தீவிர வாதி என-
சொல்வது போல!

ஏழை தாயே-
உன் "நிலை" மாறும்-
ஒரு நாள்-உன்
மகனால்!

நம் தாய்நாட்டிலும்-
போலி வேசதாரிகள்-
முகதிரை கிழியும்-
ஒரு நாள் வரும்-
வளரும்தலைமுறையால்!!!

13 comments:

  1. நச் கவிதை பாஸ்!

    ReplyDelete
  2. //ஒரு நாள் வரும்-
    வளரும்தலைமுறையால்//

    ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  3. "மணந்தவனோ"-
    மானங்கெட்ட மது-
    மயக்கத்திலே!

    :((((

    ReplyDelete
  4. அழகான கவிதை நண்பா

    ReplyDelete
    Replies
    1. kuruvi!

      ungal varavukkum maru mozhikalukkum-
      mikka nantri!

      Delete
  5. ஆதங்க வரிகள். அருமை.

    ReplyDelete
  6. மனதில் உள்ள நெருடல்களை அருமையாக பெண்ணின் மூலம் படைத்து விட்டீர்களே அருமை...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. sutha!

      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete